மாவட்ட நீதிபதியாக தமிழர்

குகதாசன் தம்பிப்பிள்ளைஈழத்தவரான திரு. குகதாசன் தம்பிப்பிள்ளை டென்மார்க்கில் மாவட்டநீதிமன்ற நீதிபதிகள் குழுவிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். டென்மார்க்கிலுள்ள இரண்டு மாவட்ட நீதிமன்றங்களில் ஒன்றான மேற்குமாவட்ட நீதிமன்றத்திற்கு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

டென்மார்க்கில் பத்திரிகையாளராகவும் கணணிதொழில்நுட்பவியலாளருமாக பணியாற்றி வரும் இவர் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் செயலாளராகவும் தமது பணியை செய்து வருகின்றார். டென்மார்க் ஊடகவியலாளர் சங்கத்திலும் பெல்யியத்திலுள்ள சர்வதேச ஊடகவியலாளார் சம்மேளனத்திலும் உறுப்பினராக உள்ளார்.

நகரசபை தெரிவுக்குழுவால் கடந்தவருடம் தெரிவுசெய்யப்பட்ட இவர் கடந்த நவம்பரில் நீதி அமைச்சின் நீதிமன்ற தெரிவுக்குழுவால் நீதிபதியாக நியமனம் பெற்றார். நகர நீதிமன்றங்களில் தீர்க்கப்படாத வழக்குகள் மற்றும் மேன்முறையீட்டு வழக்குகள் விசேட வழக்குகள் இம் மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்றுவருகின்றன.