பிரித்தானிய தமிழர் அமைப்பு வேண்டுகோள்
போர்நிறுத்த ஒப்பந்த்திலிருந்து விலகி தமிழ்மக்களுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தியிருக்கும் சிறிலங்கா அரசுக்கு வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் சிறிலங்கா எயர்லைன்ஸ் விமானங்களில பயணிப்பதை தவிர்க்கவேண்டுமென பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக கடந்த செவ்வாய் (15 ஐனவரி) தைப்பொங்கல் தினத்தன்று மதியம் மத்திய லண்டனில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை நடாத்திய இவ்வமைப்பு தனது இந்த வேண்டுகோளை பிரித்தானிய மக்களிடம் தெரிவிக்குமாறு அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்களைக் கேட்டுக் கொண்டது.
தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவர் திரு. ஐவன் பேதுருப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் மருத்துவர் இராஜயோகேஸ்வரன், கிங்ஸ்ரன் உள்ளுராட்சிசபை உறுப்பினர் திரு. யோகன் யோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு, தமது அறிக்கையினை வெளியிட்டதுடன், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.
பிரித்தானியாவின் பிரபலமான The Guardian பத்திரிகையின் நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த திரு. ஐவன் பேதுருப்பிள்ளை சிறிலங்கா எயர்லைன்ஸ் விமான சேவையை புறக்கணிக்கும்படியான தமது வேண்டுகோளை தனித்து தமிழ்மக்களிடம் மட்டுமல்லாமல் முழு பிரித்தானிய மக்களையும் நோக்கி விடுப்பதாகத் தெரிவித்தார். உல்லாசப்பயணிகளும் சிறிலங்காவைத் தவிர்த்து வேறு இடங்களில் விடுமுறையைக் களிக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
பிரித்தானியாவிலுள்ள தமிழ் பிரயாண முகவர் நிறுவனங்களில் ஒன்றான ளுமல றுiபௌ மேற்படி கோரிக்கையை சாதகமாகப் பரிசீலிப்பதாக உறுதியளித்திருப்பதாகத் தெரிவித்த மேற்படி அமைப்பினர் மற்றய முகவர் நிறுவனங்களும் தமது கோரிக்கையினை செவிமடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர். இது போன்ற முன்னெடுப்புகனை கனேடிய தமிழ் கொங்கிரசும் மேற்கொள்ளவிருப்பதாக அறியக்கிடைக்கிறது.
பிரித்தானியாவிலுள்ள பல தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பாக விளங்கும் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஊடகக்குறிப்பின் சுருக்கத்தினை இங்கு தருகிறோம்:
சிறிலங்கா விமானசேவையின் கொழும்புக்கும் மற்றைய இடங்களுக்குமான பறப்புக்களில் பயணம் செய்வதைப் புறக்கணிக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை தமிழர்களிடையே பரப்புரையினை மேறகொண்டுள்;ளது
பிரித்தானியாவில் 300,000 இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றார்கள். இவர்களில் 30,000 பேர் அளவில் ஒவ்வொரு ஆண்டும் இலங்கைக்குத் தங்களின் உறவிளர்கiளைச் சந்திக்கச் சென்று வருகிறார்களென மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு இலண்டனில் இருந்து பணயம் செய்பவர்களால் மட்டும் சிறிலங்காவுக்கு சுமார் 12 மில்லியன் பவுண்ஸ் வெளிநாட்டுப் பணம் வருமானமாக கிடைக்க அது சிறிலங்காவின் யுத்தநிதியில் சேர்கிறது.
சிறிலங்கா விமான சேவை சிறிலங்காவின் தேசிய விமான சேவை அது ஈட்டும் வெளிநாட்டு நாணய வருமானம் மத்திய வங்கி மூலம் பெறப்பட்டு பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் புனையப்பட்ட போர்வையின் கீழ் சிறிலங்கா நடாத்தி வரும் யுத்தத்தினைத் தொடர்வதற்கான ஆபத்தான யுத்த தளபாடங்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அரச பயங்கரவாதம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள புலம் பெயர் தமிழர்கள் தங்களால் இந்த யுத்தத்திற்கு சிறிலங்காவுக்கு எதுவும் வழங்கப்பட மாட்டாதென உறுதியாக இருப்பினும் மறைமுகமாக சிறிலங்கா விமான சேவைகளின் சர்வதேச செயற்பாடுகளின் மூலம் இரத்தக் காசு அவர்களிடம் இருந்து பெறப்படுகிறது.
தமிழர்களை ஒடுக்குவதற்கு ஆண்டொன்றுக்கு 1000 மில்லியன் பவுண்ஸ் அளவில் செலவிடுகிறது. தன்னுடைய இராணுவ ஆளணியை கிட்டத்தட்ட 200,000 ஆக உயர்த்தியுள்ளது. இது தற்பொழுது உள்ள பிரித்தானிய படையில் உள்ளவர்களின் தொகையை விட அதிகம். 20 மில்லியன் மக்களைக் கொண்ட இச்சிறு தீவினை ஈவிரக்கமற்ற வகையில் ஆட்சி செய்யும் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் தமிழர்களை அடிமைகளாகவும் இரண்டாந்தரக் குடிமக்களாகவும் நடாத்திக் கொண்டிருக்கிறது.
சிறிலங்கா அரசாங்கம் தன்னிச்சையாக 16 ஜனவரி 2008 இலிருந்து சிறிலங்கா யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழுவினால் மேற்பார்வையிடப்பட்டு வந்த யுத்தநிறுத்த உட்னபாட்டை இல்லாதொழித்து நோர்டிக் நாடுகளைச் சேர்ந்த சிறிலங்கா யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழுவையும் அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த திடீர் செயற்பாட்டின் மூலம் சமாதான வழியிலான அரசியல் தீர்வுக்கான அனைத்து வழிமுறைகளையும் அது தூரவீசியுள்ளது.
சிறிலங்காப்படைகளினாலும் துணைக்; குழுக்களாலும் சித்திரவதைப்படுத்தப்பட்ட கடத்தப்பட்ட குண்டு வீச்சுக்கு உள்ளாக்கப்பட்ட குடிமக்களுக்காகவும் அரசாங்கப் படையினராலும் அதன் துணைக் குழுக்களாலும் கொன்றழிக்கப்பட்ட 42 அரசசார்பற்ற பணியாளர்களுக்காகவும் உயிரிழந்த அப்பாவி மக்களுக்காகவும் ஐகக்pய நாடுகள் சபை அனைத்துலக அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் சிறிலங்காவில் மனிதாயத் துறையில் பணி புரிந்த பணியாளர்கள் அனைவரும் மிகக் கடுமையான எதிர்ப்பினைச் சிறிலங்காவுக்குத் தெரிவித்தனர்.
2007ல் கடமையில் இருந்த 7 ஊடகவியலாளரைக் கொன்றழித்ததின் மூலம் சிறிலங்கா ஈராக் சோமாலியாவுக்கு அடுத்ததாக உலகில் அதிக அளவில் ஊடகவியலாளரைக் கொன்றழித்த நாடுகளின் வரிசையில் 3 வது இடத்தினைப் பெற்றுள்ளது. கடந்த இருவருடத்தில் மட்டும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் இருவர் கொழும்பில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளனர்;. அரசாங்கத்தின் ஆதரவைப் பெறும் துணை இராணுவக் குழுவே தமிழ்த் தலைமையை ஒடுக்கும் அல்லது அழிக்கும் துர்நோக்கில் இதனைச் செய்தது என்ற குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மேல் வெளிப்படையாகச் சுமத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது அனைத்துலக சமுகம்; சிறிலங்கா அரசாங்கத்தின் மேல் அதனுடைய மனித உரிமை மீறல்களுக்கு தடைகளை விதிப்பது உட்பட இருதரப்பினரையும் சமமாக கருதுகிற அணுகுமுறையுடன் செயற்படுவது பேச்சுக்கள் மூலம் அமைதித்தீர்வு காண்பதற்கான சிறந்த பங்களிப்பாக அமையுமென நாம் கருதுகின்றோம்.
எங்களுடைய தமிழ் உடன்பிறப்புக்களையும் - எதிர்காலத்தில் பயணங்கள் செய்வதற்கு திட்டமிடுபவர்களையும் பிரயாண முகவர்களையும் - சிறிலங்கா விமான சேவையில் பயணிக்கும் பொழுது நாம் செலுத்தும் பணம் எங்களுடைய சொந்த மக்களை அவர்களுடைய சொந்தத் தாயகத்தில் சிறிலங்கா கொல்வதற்கான ஆயுதங்களை சிறிலங்கா வாங்குவதற்கு பணம் கொடுப்பதற்குச் சமானமானதாகிறது என்பதைப் புரிந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். மற்றைய விமான சேவைகளில் கொழும்புக்குப் பயணிக்கும் பொழுது தரிப்பிடங்களில் தங்கிச் செல்வதால் காலதாமதம் ஏற்படுமாயினும் நாம் சிறிலங்காவுக்கு இரத்தக் காசு கொடுப்பதை நிறுத்த வேண்டும். என்பதால் நீங்கள் சிறிலங்காவின் விமான சேவை அல்லாத மற்றைய விமான சேவைகளைப் பயன்படுத்துவதை நாம் போற்றிவரவேற்கின்றோம். எமது சக பிரித்தானியக் குடிமக்களுக்கும் இந்த வேண்டுகோளை நீடித்து அவர்களையும் அவர்கள் சிறிலங்கா விமான சேவைகளுக்கு கொடுக்கும் பணம் சிறிலங்காவில் வாழும் தமிழர்கள் மரணமடைவதற்கும் அழிவுகளைச் சந்திப்பதற்கும் காரணமாகிறது என்பதனைச் சிந்தித்து சிறிலங்கா விமான சேவைகளைப் புறக்கணிக்குமாறு வேண்டுகின்றோம். ஐரோப்பாவிலும் கனடாவிலும் அமெரிக்கா அவஸ்திரேலியா இந்தியா போன்ற நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்கள் இந்தப் புறக்கணிப்புக்கு எமக்குப் பலத்த ஆதரவு தருவதினால்; உலகளாவிய நிலையில் சிறிலங்கா விமான சேவைகள் மேலான புறக்கணிப்பு இடம்பெறும். சிறிலங்கா அரசாங்கம் சிறிலங்காவில் வாழும் தமிழர்கள் மேலான எல்லாவிதமான மனித உரிமை மீறல்களையும் நிறுத்தும் வரை இந்தப் புறக்கணிப்புப் போராட்டத்தை நாங்கள் தொடரவுள்ளோம்.
Recent comments
2 weeks 14 hours ago
2 weeks 2 days ago
5 weeks 20 hours ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
17 weeks 3 hours ago
17 weeks 3 hours ago
17 weeks 1 day ago
17 weeks 5 days ago