வணக்கம்!
பொங்கல் இண்டைக்கோ அல்லது நாளைக்கோ எண்ட குழம்பமிருந்தாலும் பொங்கி மகிழந்திருப்பீர்கள். எங்களுக்கும் மறவால் பொங்கல், பலகாரங்களை கொண்டு வந்து தந்து அசத்தி விட்டீர்கள். நெஞ்சார்ந்த நன்றி.
ஐரோப்பாவில் பேப்பர் விநியோகத்தில் ஏற்பட்ட சில சிரமங்கள் காரணமாக போனமுறை பேப்பர் எல்லா இடமும் அனுப்பேலாமல் போயிடுத்து. இப்போது ஐரோப்பாவில் ஒரு பேப்பர் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதால், பேப்பரை விற்பதற்கும் விநியோகிப்பதற்கும் விரும்புவர்கள் லண்டனிலுள்ள எங்கள் தலைமை பணியகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். அதுபோல் வடஅமெரிக்காவில் சந்தாதாரகி ஒரு பேப்பரை அஞ்சலில் பெற்றுக் கொள்ள விரும்புவோர் ரொறான்ரோவிலுள்ள எமது பணியகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
தமிழ்க்கடைக்கு சாமான் வாங்க போகேக்கை மறக்காமலிருக்கிறதுக்காக லிஸ்ட் எழுதிக்கொண்டு போறனிங்களோ? அப்பிடி எழுதிக்கொண்டு வாற ஆக்களிலை பலர் அந்த லிஸ்டிலை தவறாமல் ஒரு பேப்பரையும் சேர்க்கினம் எண்டு சில வர்த்தகர்கள் உவகையுடன் எங்களுக்கு சொல்லிச்சினம். இதை கேட்க இரவிராவாய் முழித்திருந்து பேப்பர் அடிக்கிற அலுப்பு போயிட்டுது. ஆக்கள் சீரியசாய் இருக்கேக்கை நாங்களும் சுறுசுறுப்பா இருக்கோணும் எண்ட உசார் வருகிறது.
ஒரு பேப்பருக்கு ஆக்கங்களை அனுபேக்கை கொஞ்சம் இலகுவான மொழியிலை எழுதுங்கோ. இது ஈசியாய் வாசிக்கிறதுக்கான பேப்பரல்லோ! உங்கடை வித்துவத்தை எழுதிற மொழியிலை காட்டாதேங்கோ.. எங்களுக்கு நீங்கள் எழுதிற சங்கதியள் விழங்கேல்லை எண்டால் தொடர்ந்து வாசிக்காமல் ரீசைக்கிளிங் கூடைக்கிள்ளை போட்டிடுவம்.
Kids Paper க்கு ஆக்கங்களை அனுப்பும் சிறுவர்களை பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்துங்கள். உங்களது குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்துவதை ஒரு பேப்பர் விருப்பத்துடன் வரவேற்கிறது. ஆகவே பாடசாலைகளில், விளையாட்டுத்துறையில், கலைத்துறையில் அவர்கள் வெளிப்படுத்தும் திறமைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள். நாங்கள் அவற்றினை பிரசுரிப்பதன் மூலம் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தலாம் எண்டு நம்பிறம்.
அதுபோல் சமூகத்தில் உங்களை அறிந்தவர் தெரிந்தவர் பெறும் சிறப்புக்கள் பற்றியும் (இன்ரநெற்றிலை பட்டம் வாங்கிறவை தவிர) எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். அதுக்காக பொன்னாடை போர்க்கிறவை போர்க்கப்படுகிறவை போன்ற விபரங்களை எங்களுக்கு அனுப்பாதீங்கோ!
அவுஸ்திரேலியாவில் ஒரு பேப்பரை வெளியிடுமாறு பலரும் எங்களை கேட்டுக்கொண்ருக்கிறார்கள. தோதான பாட்னர் கிடைத்தால் வெகுவிரைவிலேயே அங்கும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச்செய்வோம்.
அடுத்த பேப்பர் காதலர் தின சிறப்பிதழாக வெளிவரும். எனவே உங்களுக்கு காதலித்த அனுபவமிருந்தால் அந்த சுகஅனுபவங்களை ஒரு பேப்பர் மூலமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கண்டிப்பா உண்மையான பெயர்களை, இடங்களை குறிப்பிடவேண்டாம். அப்பிடி எழுதினீங்கள் எண்டால் நாங்கள்தான் வேண்டிக்கட்ட வேண்டிவரும்.
மீண்டும் சந்திப்போம்
Recent comments
2 weeks 6 days ago
7 weeks 5 days ago
8 weeks 22 hours ago
10 weeks 5 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
22 weeks 5 days ago
22 weeks 5 days ago
22 weeks 6 days ago