இலக்கியச் சந்திப்பும் அதன் மாற்றமும்.

இலக்கியத்தை நேசிப்பவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட 'இலக்கியச் சந்திப்பு" அரசியல் கறள் தட்டும் சந்திப்பாகவும் ஆளையாள் குத்தும் சந்திப்பாகவும் ஆனதெப்படி ? இந்தச்சந்திப்புப்பற்றி எழுது முதல் ஒன்றை சொல்லிவிடுகிறேன். இந்த இலக்கியச் சந்திப்பில் நான் ஒரு நாளும் தலைவைச்சும் படுக்கேல்ல. இப்பத்தியை படிக்க நேரும் இலக்கியம் இல்லை அரசியல் கறள்தட்டும் ஆர்வலர்கள் அறுவைகள் விசித்திரங்கள் லச்சுமிகளுக்கெல்லாம் எழும் கேள்விக்கு முதலிலே பதிலை தருவது பொருத்தமாகும் என்பதால் சொல்லியாயிற்று.

இலக்கியச் சந்திப்பு என்பது புகலிட நாடுகளில் வெளியாகிக்கொண்டிருந்த குறிப்பாக ஜேர்மனியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த நமதுகுரல்,தேனி , சிந்தனை , தூண்டில் , புதுமை உட்பட அப்போது வெளிவந்து கொண்டிருந்த இலக்கிய சஞ்சிகைகளின் ஆசிரியர்கள் வாசகர்களுக்குள்ளான ஒரு சந்திப்புக் களமாகவும் , இலக்கிய ஆர்வலர்களின் தளமாகவுமே ஆரம்பிக்கப்பட்டது. இச்சந்திப்பில் புலி ஆதரவுக்காரர்கள் , மாற்றுக்கருத்தாளர்கள் என்று யாருமே புலிச்சாயம் மாற்றுச்சாயம் கலக்காமல் முதல் சந்திப்பு நடந்து முடிந்தது. இலக்கியச்சந்திப்பு என்ற ஒரு சந்திப்பு உருவாக உழைத்து அதை உருவாக்கியவர்களான பார்த்திபன் , பீற்றர் ஜெயரட்ணம் ஆகியோரே இலக்கியச்சந்திப்பின் வேர்கள்.

இவ்வாறு தோற்றம் பெற்ற இலக்கியச் சந்திப்பானது இரண்டாவது சந்திப்பிலே அறுவை சஞ்சிகையின் ஆசிரியர் அறுவை லோகநாதனால் அரசியல் களமாக்கத் தொடங்கிய போது அன்று கலந்து கொண்டவர்களால் அரசியல் தவிர்த்த இலக்கியச் சந்திப்பாகவே நடாத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்ட போது மேன்மை தங்கிய அறுவை லோகநாதன் அவர்கள் 'அரசியல் இல்லாமல் இலக்கியம் இல்லை" எனக்கூறி இரண்டாவது சந்திப்பிலேயே சில ஆர்வலர்களை வெளியேற்றிய பெருமையைப் பெற்றுக் கொண்டார்.

அடுத்தடுத்து நடைபெற்ற இலக்கியச் சந்திப்புக்களில் புலி ஆதரவாளர்களென முத்திரையிடப்பட்டு பல எழுத்தாளர்களும் கலைஞர்களும் இந்தப் புலியெதிர்ப்பாளர்களால் விலகி ஒதுங்கிப் போனார்கள். இலக்கியத்தை நேசித்தவர்கள் ஒதுங்கிப்போகப்போக புதிய புலியெதிர்ப்புப்பிராணிகளின் ஆதிக்கம் அதிகரித்துச் செல்லத்தொடங்கி இன்று இலக்கியச் சந்திப்பு புலியெதிர்ப்புப் பேசும் சந்திப்பாகியுள்ளது.

முளைவிடத் தொடங்கிய இலக்கிய முகிழ்கள் பலரை விமர்சனம் என்ற சொ(சி)ல்லுக்குள் நெரித்து ஜெகநாதங்களும் செமினிகளும் அறுவைகளுமே நாயகர்களாக முற்று முழுதாக இலக்கியச் சந்திப்பு அரசியல் கறள் தட்டும் சந்திப்பாகிப்போனது.

இந்த மனிதர்களுக்கு புலியென்றால் அலர்ஜி. இலக்கியம் பேசுவதற்கு இவர்களுக்கு புலிதான் பேசுபொருள். புத்தக விமர்சனம் சொல்ல எழுந்தாலே புலிஅலர்ஜி பேசியே காதுகளையும் மனங்களையும் புளிக்கப்பண்ணி விடுவார்கள்;. இலக்கியச் சந்திப்பில் வைன் சிகரெட்டுடன் ஆட்டம்போடும் போதும் அங்கே உடைகின்ற வளையல்களுக்கும் புலிதான் காரணம் என ஒப்பிவிடும் வல்லவர்கள் இவர்கள்.

இந்த இடத்தில் ஒரு விடயத்தையும் உடைக்க வேண்டிய நிலை. புதிதாக திருமணமாகி ஜேர்மன் வந்த பெண்கள் சிலரையும் இந்த வைன்கிளாசுகள் இலக்கியச் சந்திப்புக்கு அழைத்த போது இலக்கிய வாசம் இருந்த சிலர் போயிருந்தார்கள். ஒரு இரவு இலக்கியச் சந்திப்புக் குழுவினர் தங்கிய இடத்தில் இந்தப் பெண்களும் தங்க நேர்ந்தது. அந்த இரவு அங்கத்தைய சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்த ஒரு பெண் கண்டகாட்சி 'ஆண்களும் பெண்களும் என பழைய சினிமாப்பாடலொன்றுக்கு ஆட்டமும் பாட்டமும் வைன் கிளாசும் புகையும் " அந்தப்பெண்ணை அன்றுடன் இலக்கியச் சந்திப்பென்றால் ஐயோ ஆளைவிடுசாமி என ஓட விரட்டியது. சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் இங்கு தவிர்க்கப்படுகிறது.

இலக்கியச் சந்திப்பை ஆரம்பித்து வைத்தவர்கள் இப்போது உதவாக்கரைச் சந்திப்பாக மாறியுள்ள இலக்கிய கலப்புகளிலிருந்து விலகி மௌனமாக இருக்க புதுப்புது அவதாரங்களாக லண்டனிலிருந்து ராஜேஸ் அக்காவும் , பரிசிலிருந்த லச்சுமியக்காவும்தான் ஏதோ பெரும் துன்பப்பட்டு இலக்கியச் சந்திப்பை ஆரம்பித்தது போலவும் அது தங்களுக்கு எழுதப்பட்ட சொத்து போலவும் வண்டில் விடுவது வேடிக்கையாகவுள்ளது.
அண்மையில் லச்சுமியக்கா வீட்டில் நடந்த கொள்ளையில் லச்சுமியக்கா சேத்து வைத்த இலக்கியச் சொத்தெல்லாம் கொள்ளையென்று கொள்ளைப் பொய் சொல்வதை கேட்க தலைகால் நிலத்தில் நிற்கவில்லை. முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது என்பது இதுதான் என்ற உண்மையும் புரிந்துள்ளது. அதற்காக லண்டன் ராஜேஸ் அக்கா ஜனநாயக்குரல் கொடுத்திருப்பது வழமையான ராஜேஸ் அக்காவை ஞாபகப்படுத்தியுள்ளது. தமிழர்விடுதலைக்கூட்டணியின் தலைவர் என்று இடைக்கிடை ஒரு தாத்தா அறிக்கை விடுகிறமாதிரி இந்த அக்காவும் தன்னை அடிக்கடி எங்களுக்கு ஞாபகப்படுத்;தும் முகமாக கண்டித்துள்ளார். அதுவும் தமிழ்ப்பெண்கள் பலரின் வேலை என்ன என்பதையும் கூறி லச்சுமியக்கா , விஜியக்காவின் வீரம்பற்றியெல்லாம் விளக்கம் தந்திருக்கிறா.
இதுவரை நடந்த இலக்கியச் சந்திப்புகளில் இந்த லச்சுமியக்காவின் பங்கென்பது என்னவென்பதை இலக்கியச் சந்திப்புகளிலும் பெண்கள் சந்திப்புக்களிலும் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் மௌனமாக இருப்பது இந்த ராஜேஸ் அக்காவுக்கு விளங்குதில்லை. இந்த அக்காவின் வட்டத்திற்குள்கூட லச்சுமியக்கா ஒரு விரும்பாப்பண்டமாகவும் இருப்பது உண்மை. ஏதோ அக்கா சேத்துவைச்ச ஆவணங்களையெல்லாம் காடையர்கள் கதவுடைத்து கொள்ளையடித்துவிட்டனாராம். கொள்ளையடிப்புக்கான ஏற்பாட்டுக் குழுவில் ராஜேஸ் அக்காவும் பங்கென்றும் கதையொன்று உலாவுகிறது. இதையெல்லாம் லச்சுமியக்காவும் அறியாமலோ ?

ஏதோ முக்கியமான பொருளைத் தேடிப்போனவர்கள் லச்சுமியக்காவின் வீட்டையே துவம்சித்துள்ளார்களாம். ஒட்டுமொத்த இலக்கிய ஆர்வலர்களுக்குமான பயமுறுத்தல் போன்ற தோற்றத்தில் எழுதியுள்ளார் ராஜேஸ் அக்கா. லச்சுமியக்காவின் வீட்டில் ஏதும் வைன்தோட்ட கொபைன் தோட்ட உறுதிகள் ஆவணங்களைத்தான் கொள்ளையர்கள் தேடிப்போனார்களோ தெரியவில்லை.

உண்மையில் லச்சுமியக்காவின் வீட்டுக்கொள்ளை பற்றி அவரது வீட்டைக் கொள்ளையடித்தவர்களின் இலக்கியச் சந்திப்பாளர்களின் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளதை இந்த அக்காக்கள் மறைக்கும் முயற்சியில் பம்மாத்துக்கதை பண்ணிவிட்டிருக்கிறார்கள். உள்வீட்டு மோதலில் , உள்வீட்டுக்காறர்களினால் நடாத்தப்பட்ட கொள்ளையை ஜனநாயக மீறல் , எச்சரிக்கை , கூட்டறிக்கை என கதைவிடுவது இவர்களது தேர்ந்த அனுபவத்தை காட்டியுள்ளது. கொள்ளையடித்தவர்களின் பெயர் புலியில்லை. லச்சுமியக்கா நம்பிக்கை வைத்த நம்பிய நண்பர்கள் என்பது லச்சுமியக்காவுக்கும் தெரியும் இலக்கியச் சந்திப்பில் கறள் கொட்டும் கண்களுக்கும் தெரியும். இதிலும் தங்கள் கைவரிசையை இந்த பம்மாத்து இலக்கியவாதிகள் பண்ணியிருப்பது இவர்கள் மீது மக்களுக்கிருந்த கொஞ்ச மதிப்பின் மீதும் சேறடித்துள்ளது.
இலக்கியச்சந்திப்பை அரசியல் கறள் தட்டும் சந்திப்பாக மாற்றி தங்கள் சொந்த நலன்களுக்காக புலிச்சாயமடித்து ஒரு விடுதலை அமைப்பின் மீதும் அதன் போராளிகள் மீதும் துப்புவது இவர்கள் தங்கள் முகத்தில் தாங்களே துப்புவதையே செய்கிறார்களே தவிர வேறில்லை.

கடந்த சிலவருடங்களாக சில இலக்கியர்கள் இலக்கியச் சந்திப்பையும் பெண்கள் சந்திப்பையும் கருணாகுழுவின் ஆதரவுச் சந்திப்பாகவும் மாற்றியது மட்டுமில்லாமல் தமிழர்விடுதலைக்கூட்டணியின் தலைவர் என நாமமிட்டு அறிக்கை விடும் தாத்தாவுக்கான உரிமைச் சந்திப்பாகவும் மாற்றியுள்ளார்கள்.

24-Sep-1988HERNE GERMANY யில் முதலாவதாக ஆரம்பமான இலக்கியச் சந்திப்பின் வேர்கள் யார் என்பதையும் இது எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் இப்போது இலக்கியம் சந்திப்பென்று உழறும் புலியெதிர்ப்புப் பிராணிகள் மறந்துபோயிருக்கிறார்கள். அந்த வேர்களும் துணையாய் நின்ற விழுதுகளும் இப்போ இவர்களுக்குத் தெரிவதில்லை. இலக்கியச் சந்திப்பின் 19வருடங்களின் நிறைவு இவ்வருடம் வரவுள்ளது. ஆயினும் இத்தகையதொரு சந்திப்பை ஆரம்பித்தவர்களை இந்த ஜென்மங்கள் நினைப்பதுமில்லை அவர்கள் பற்றி எழுதுவதுமில்லை. ஏனென்றால் இவர்கள் பார்வையில் அவர்கள் புலிகள். ஆனால் அவர்கள் மனிதர்களாக இருப்பது புரியாத புத்திசீவிகள் இவர்கள்.