அண்மைக்காலமாக செய்தி ஊடகங்கள் மூலமாக திணிக்கப்படும் ஒரு கருத்து, தமிழ் மக்களிற்கான தலைமையை தேசியத்தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஏற்றிருக்கும்வரை இலங்கைத்தீவில் அமைதி ஏற்படப்போவதில்லை என்பது. இந்தக் கருத்துக்களை பரப்புவர்களின் பட்டியலில், சிறிலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, கோத்தபாய இராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா முதல் கொணடு இந்திய இராணுவ அரசியல் ஆய்வாளர்கள், அவர்களுக்க வால் பிடிப்பவர்கள் என பலரும் அடங்குவர். இவர்களது அபிலாசைகள் வெவ்வேறாக இருந்தாலும் தத்தம் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் இவர்களுக்கு தமிழர் தலைமை முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.
தமிழ் மக்களுக்கு மாற்றுத்தலைமை ஒன்றின் அவசியம் பற்றி வலியுறுத்தும் அரசியல் ஆய்வாளர்கள் சிலர், தற்போதைய தலைமை, அனைத்துலக நாடுகளுக்கு ஏற்புடையதாக இல்லை எனவும், அதனால் அனைத்துலக நாடுகள் தமிழர்கள்மீது காட்டவேண்டிய நியாயமான அனுதாபத்தைக் காட்டுவதில்லை எனவும் வாதிடுகிறார்கள். அந்த வாதத்தின்படி அனைத்துலக நாடுகளுக்கு ஏற்ற தலைமையை சிறிலங்காவுக்கு ஏற்படுத்துவதானால் முதலில் மாற்றப்படவேண்டியவர்கள் இராஜபக்ச சகோதரர்களாகத்தான் இருக்கும் என்பதை இவர்கள் மறைத்து விடுகிறார்கள்.
தமக்குப்பிடித்தமான ஒரு தலைமையை தமிழ் மக்களே ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே அடிப்படை சனநாயகமாக இருக்கும்போது மற்றவர்களின் விருப்பிற்கேற்ப அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்த நியாயமுமில்லை. தீவிரவாத இயக்கமான ஹமாஸ் ஐ பாலஸ்தீனியர்கள் இந்த அடிப்படையிலேயே தேரந்தெடுத்தார்களே அன்றி மேற்குலகை திருப்திப்படுத்துவதற்காக அல்ல.
சிறிலங்கா ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில், அது தமிழர் தலைமையை அழித்துவிட்டு தமிழ் தேசிய இனத்தை அரசியல் முக்கியத்துவம் இல்லாத ஒரு இனக் குழுமமாக மாற்ற எத்தனிக்கிறதே தவிர மாற்றுத் தலைமையை ஏற்படுத்துவது பற்றி அது அக்கறைப்படவில்லை. ஆனால் இந்தியா எண்பதுகளிலிருந்து இன்றுவரை தனக்கேற்ற தலைமையை தமிழருக்கு ஏற்படுத்த பலதடவை முயன்று தோற்றுப்போன நிலையில் இன்னமும் அந்த முயற்சியை கைவிட்டதாகத் தெரியவில்லை.
அன்று தொட்டு இன்று வரை விடுதலைப்புலிகளின் தலைமையை அழித்துவிட இந்தியா பல தடவை முயன்றிருக்கின்றது. தம்முடன் பேச்சு வார்த்தைக்குவரும் திரு. பிரபாகரைன சுட்டுக் கொன்றுவிடும்படி அப்போது இலங்கைக்கான இந்தியத்து}துவராக இருந்த திரு. ஜே. என். டிக்சிற் தன்னி;டம் கேட்டுக் கொண்டதாக இந்திய படை தமிழீழப்பகுதிகளில் நிலை கொண்டபோது அங்கு கடமையாற்றிய மேஜர் ஜெனரல் கர்கிரத் சிங் அண்மையில் வெளியிட்டுள்ள புத்தகமொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். திரு. பிரபாகரனை கொல்வது பற்றி திரு. இராஜிவ் காந்தி பத்திரிகையாளர்களை அழைத்து அபிப்பிராயம் கேட்டதாக தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் துக்ளக் சஞ்சிகையின் ஆசிரியர் சோ.இராமசாமி ஐயரும் அச்சஞ்சிகையில் எழுதியிருக்கிறார். கர்கிரத்சிங்கும் இராமசாமி ஐயரும் புழுகித் தள்ளுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இந்திய இராணுவம் தமிழீழத்தில் நிலைகொண்டிருந்த காலத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் இவ்விடயத்தில் இருக்கக்கூடிய உண்மைத்தன்மையை வெளிக்காட்டி நிற்கின்றன.
குறைந்த பட்சம் இரண்டு சம்பவங்களிலாவது இந்தியப்படையினர் திரு.பிரபாகரன் மீது குறிவைத்திருந்தமை வெளிப்பட்டது. முதலாவது சம்பவத்தில் திரு. பிரபாகரன் அங்கு தங்கியிருந்தார் என்ற சந்தேகத்தில் கொக்குவில் பகுதியில் பரசு10ட் மூலம் துருப்புக்கள தரையிறக்கப்பட்டனர். இரண்டாவது சம்பவம் வன்னியில் நித்திகைக் குளம் என்ற இடத்தில் திரு. பிரபாகரனது முகாம் சுற்றி வளைக்கப்பட்டு நடாத்தப்பட்ட “ஒப்பரேசன் செக்மேட்” நடவடிக்கை. இந்த இரண்டு சம்பவங்களிலும் திரு. பிரபாகரனை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது வேறுகதை.
விடுதலைப்புலிகளின் பிரதிததலைவராக இருந்த கோபாலசாமி மகேந்திரராசா (மாத்தயா) விவகாரத்திலும் விடுதலைப்புலிகள் இந்திய உளவுத்துறையான றோவைக் குற்றஞ்சாட்டியிருந்தனர் என்பதும், அண்மையில் பிரித்தானியாவில் கைதான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் இந்திய உளவுத்துறையுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்க விடயங்கள்.
மாற்றுத்தலைமையை உருவாக்கும் இந்தியாவின் முயற்சியில், அவ்வப்போது அண்ணாமலை வரதராஜப்பெருமாள், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், வீரசிங்கம் ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா என சோரம்போன தமிழர்களை சேர்த்துக்கொண்டபோதும், அதன் முயற்சி வெற்றியளிக்கவில்லை. இந்தியாவின் துரதிர்ஸ்டம் இந்தியா இவர்களை நெருங்கியதும் அவர்கள் தமிழ் மக்களிடமிருந்து மேலும் விலகிச் செல்ல நேரிட்டது.
நிரந்தரமாக ஒரு கட்சியின் மீதோ ஒரு குடும்பத்தின் மீதோ குருட்டுத்தனமாக நம்பின்கை வைத்து அவர்களிடம் தமது தலைமையை ஈழத்தமிழர்கள் என்றுமே ஒப்படைத்ததில்லை. நேர்மை, இலட்சிய உறுதி என தமது உரிமைகளை விலைபேசாத தலைவர்களையே ஈழத்தமிழர்கள் காலங்காலமாக தமது அரசியல் தலைவர்களாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அவ்விதம் செயற்படுவதிலிருந்து விலகிப் போனவர்களை து}க்கியெறிந்தும் இருக்கிறார்கள். இன்று தென்னாசியாவில் பொதுமைப்பட்ட விடயமான வாரிசு அரசியலை ஈழத்தமிழர்கள் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. இதனை இன்னமும் இந்தியா உணரந்து கொள்ளவில்லை எனின் தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் இந்திய உளவுத்துறைக்கு நெருக்கமான செல்வநாயகம் சந்திரகாசனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
இப்போது இந்தியாவின் கவனம் புலம்பெயரந்து வாழும் தமிழ் மக்கள் மீது திரும்பியுள்ளது தெரிகிறது. ஆகக்குறைந்தது இந்தியாவுக்கு ஆலோசனை கூறுவதாக தமது இருப்பை தெரியபடுத்திக் கொண்டிருக்கும் முன்னாள் “றோ” அதிகாரிகளின் கவனம் இந்தத் திசையில் திரும்பியிருக்கிறது.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இன்று பிரித்தெடுக்க முடியாத அம்சமாக இருக்கின்ற புலம்பெயரந்த தமிழர்கள், சிறிய இனக்குழுமமாக உள்ளபோதும், அவர்களது ஆதரவுத்தளம் விடுதலைப்போராட்;டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அவர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி இந்தப் பலத்தை சிதைப்பதற்கு பல சக்திகள் முனைந்து வருகின்றன.
இதன் வெளிப்பாடாக, ஏற்கனவே தமி;ழ்மக்களால் ஒதுக்கப்பட்டவர்களின் நாற்காலிக் கனவை மூலதனமாகக் கொண்டு, தமிழ்மக்களுக்கு ஒரு மாற்றுத் தலைமையை ஏற்படுத்தும் முயற்சி முடுக்கிவி;டப்பட்டுள்ளது.
கனடாவில் வாழும் டேவிட் ஜெயராஜ் போன்ற பத்திரிகையாளர்கள் இதற்கு ஏதுவாக எழுதிவருகிறார்கள். திரு. பிரபாகரன் காயப்பட்டதாக கதை புனைவதும் …தலைவருக்கு அடுத்தததாக யார் தலைமைப்பொறுப்பை ஏற்கப்போகிறார்கள் என ஆய்வு நடாத்துவதும் இதன் அடிப்படையில்தான்.
இதில் வேடிக்கை என்னவென்றால் சில இந்திய ஊடகப் பண்டிதர்கள் 53 வயதான திரு. பிரபாகரன் மூப்படைந்து வருகிறார் எனவும் புதிய தலைவர் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் பற்றியும் எழுதுகிறார்கள். திரு. பிரபாகரனிலும் இருபது வயது மூத்தவரே இந்தியாவின் பிரதமர் என்பதை அவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக, எங்களின் நண்பர்கள் எனக்கூறிக்கொள்ளும் இங்குள்ள சிலர், இந்திய இராணுவத்தில் கடமையாற்றியவரும் தற்போது இலங்கை தீவுவிடயத்தின் இராணுவ-அரசியல் நிலை பற்றி எழுதிக் குவிப்பவருமான கேணல் ஹரிஹரன் என்பவரை இலண்டனுக்கு அழைத்து அவருடனான கருத்தரங்குகளை ஓழுங்கு செய்துள்ளாரகள்.
கேணல் ஹரிஹரன் வடக்கு-கிழக்குப் பகுதியில் இந்திய இராணுவம் நிலை கொண்ட காலத்தில் கடமை புரிந்தவராம். அப்போது தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களில் அவருக்கு பங்கிருந்தாலும், அவரை மன்னித்து, இந்த இளித்த வாய் தமிழர்களின் உபசரிப்பினைப் பெற்றுக் கொண்டு செல்லட்டும். நாங்கள் தமிழ் மக்களின் தலைமையை பலப்படுத்த வேண்டிய முயற்சிகளில் சிரத்தை கொள்வோம்.
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago