வணக்கம்!
உங்கள் அனைவருக்கும் ஒரு பேப்பர் குடும்பத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆண்டு தொடக்கத்தில் எல்லோரும் எடுக்கிறமாதிரி சில தீர்மானங்கள் எடுத்திருக்கிறம். அதிலை முக்கியமான ஒண்டு உங்களில் சிலருக்கு எரிச்சலை மூட்டிய “ஒசியாய் வாசிக்க ஒரு பேப்பர்” என்ற வாசகம் “ஈசியாய் வாசிக்க ஒரு பேப்பர்” என மாற்றப்பட்டுள்ளது. இதிலை இன்னொரு விசயமும் இருக்கிறது. இனி பிரித்தானியா தவிர்ந்த மற்றய ஐரோப்பிய நாடுகளில் ஒரு பேப்பர் விற்பனைக்கு விடப்படவுள்ளது. தற்போதைக்கு கனடாவிலும், பிரித்தானியாவிலும் மட்டும் ஓசியாய் கிடைக்கும்.
என்னடா மடியிலை கை வைக்கிறியள் என்று நீங்கள் ஆதங்கப்படலாம். ஒரு பேப்பரின் தயாரிப்பு செலவீனங்களை சமாளிப்பதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறோம். ஒசியை எடுத்ததில் எங்களுக்கு கவலைதான் என்ன செய்ய ..
ஒரு பேப்பரில் தனி நபர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக சிலர் எஙகளிடம் முறைப்பட்டுள்ளார்கள். நாங்கள் வேண்டுமென்றே யார் மீதும் தாக்குதல்களை தொடுப்பதில்லை, சமூகத்தின் மீதுள்ள அக்கறை காரணமாக நம்மிடையயே உள்ள வேடதாரிகளை இனங்காட்டுகிறோம். அவ்வளவுதான். இருப்பினும் இது விடயத்தில் எங்களது தகவல்கள் அல்லது கருத்துக்கள் தவறானவை என்றால் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள்.
இன்னமும் சிலபேருக்கு ஒரு பேப்பரை நடாத்திறது “அவையோ” அல்லது “இவையோ” என்ற குழப்பமிருக்கிறது தெரியுது. சிலர் நாங்கள் ஆருக்கோ முன்னணி அமைப்பாய் செயல்படுகிறதாயும் எழுதி தள்ளியினம். நாங்கள் உரிக்க உரிக்க உள்ளுக்கை ஒண்டுமில்லாத வெங்காயங்கள் எண்டு முன்னமே சொல்லியிருக்கிறம். இன்னமும் அப்பிடித்தான் இருக்கிறம்.
ஒரு பேப்பருக்கு ஆக்கங்களை அனுப்பும்போது உங்களது ஆக்கம் மற்றய ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்பதனை குறிப்பிட மறக்க வேண்டம். மற்றய ஊடகங்களில் வெளிவந்தவை பெரும்பாலும் பிரசுரத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழர் திருநாள் இம்முறை வேலைநாளில் வருவதால் கொண்டாடுவியளோ தெரியாது.
பொங்கல், பலகாரங்கள் கொண்டு வந்து தந்து உங்கள் அன்பைக்காட்ட விரும்பினால் எங்கள் பணியக முகவரி 10ம் பக்கத்திலிருக்கிறது.
மீண்டும் சந்திப்போம்
Recent comments
2 weeks 6 days ago
7 weeks 5 days ago
8 weeks 1 day ago
10 weeks 5 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
22 weeks 5 days ago
22 weeks 5 days ago
22 weeks 6 days ago