அன்பான பக்தர்களே நான் அம்மன் எழுதிறன்.

அன்பான பக்தர்களே நான் அம்மன் எழுதிறன்.

என்னடா இது அம்மனே எழுதிறாவா அதுவும்  ஒருபேப்பரிலை எழுதிறாவா எண்டு சந்தேகப்படும் பக்தர்களே அப்படி நினைத்தால் அது சாமிக்குற்றம் . பரிகாரமாக  கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள்

. பக்கத்தில் நிற்பவன் கன்னத்தில் அல்ல உங்கள் கன்னத்தில்தான் ."சாதாரணமா பக்கதர்களிற்கு குறைவந்தால் சாமியாரிட்டை போய் சொல்லுவினம் ஆனால் சாமியாருக்கே குறையெண்டால் யாரிட்டை போய் சொல்லஏலும்". என்ன சிவாஜி நடிச்ச தங்கப்பதக்ம் படத்தின்ரை

வசனம் மாதிரி இருக்கு எண்டு யோசிக்காதையுங்கோ. உண்மைதான் என்ரை கஸ்ரத்தை உங்களிட்டை சொல்லுறதெண்டு முடிவெடுத்திட்டன் .ஏணெண்டால் சில பேப்பர்களிலை இணையத்தளங்களிலை எண்டு பொழுது போகாத சிலபேர் என்னைமாதிரி சாமிமாரை   எப்ப பாத்தாலும்

குறைசென்னபடி. அது மட்டுமில்லை நாத்திக வாதியள் எண்டும் பெரியாரிச காரர் எண்டும் கொஞ்சப்பேருக்கு எங்களை குறை சொல்லுறதே வேலையாய்போச்சுது. அதாலைதான் எழுத முடிவெடுத்தன். சரி என்ரை கதைக்கு வாறன் ஊரிலை நான் அவ்வளவா

படிக்கேல்லை அது ஏறமாட்டன் எண்டிட்டுது .ஒரு பத்தாம் வகுப்பு பாஸ்பண்ணியிருந்தாலாவது அந்த நேரம் ஒரு அரசியல்வாதியின்ரை கையிலை காலிலை விழுந்தாவது மலைநாட்டுக்கு வாத்தியாராபோயிருப்பன் ஆனால் என்ரை தலையெழுத்து  அட்டமத்து சனி எட்டியெட்டி

பாத்ததிலை எட்டாம் வகுப்பை தாண்ட ஏலாமல் போச்சுது. சரி சனிதோசம் போகட்டுமெண்டு கோயில் கோயிலா போய் கும்பிட்டு கொண்டிருக்கேக்குள்ளைதான் ஒரு கோயில்லை ஒரு சாமியாரைப்பாத்தன் அவர் ஒரு செம்புதண்ணிக்குள்ளை கொஞ்சம் பூவை

போட்டு அதை சனத்துக்கு குடுத்துகொண்டிருந்தார்   அங்கை எங்கடை ஊரிலை படிச்சபெரியமனிசரெல்லாம் வரிசையிலை நிண்டு அவருக்கு பக்கத்திலை இருந்த ஒரு தட்டிலை சில்லறையளை போட்டிட்டு அந்த தண்ணியை தீர்த்தம் எண்டுவாங்கிக் கொண்டு போச்சினம்

அப்பதான் நான் யோசிச்சன் கும்பிட்ட தெய்வம் என்னை கைவிடேல்லை படிச்சிருந்தால் ஏதாவது வேலைக்கு போய் குடும்ப கஸ்ரத்தை போக்கலாமெண்டு கவலைபட்டுக்கொண்டிருக்க பள்ளிக்கூட பக்கம் போகாமலே காசு  சம்பாதிக்கிற வழியை கடவுள் காட்டிபோட்டார்

எண்டு நினைச்சு நானும் அடுத்தநாள் நானும் எங்கடை வீட்டுக்குபக்கத்திலை இருந்த கோயில்லை  ஒருவாளி தண்ணிக்கை கொஞ்சம் பூவை பிடுங்கி போட்டிட்டு இருந்திட்டன். நான் என்னவோ அண்டாடம் செலவுக்கு ஏதாவது கிடைச்சால் போதும் எண்டுதான்

உண்மையா இருந்தனான். ஆரம்பத்திலை நான் நினைச்சபடி சனம் தாங்களா வந்து காசை போட்டிட்டு தீர்த்தத்தை வாங்கிகொண்டு போய்கொண்டிருந்தவை பிறகு தாங்களா வந்து என்னட்டை ஆளாளுக்கு ஒவ்வொரு பிரச்சனையை சொல்லத்தொடங்கிச்சினம் .ஊரிலை  மற்றவையள்

எல்லாருக்கும் என்னைவிட பெரிய பிரச்சனையள் இருக்கெண்டு அப்பதான் தெரிஞ்சுது . நானும் பூவை குடுத்து எல்லாம் நல்லபடி நடக்கும் எண்டு வாயிலை வந்ததை சொல்லியனுப்பி விடுவன் .அதுதான் எனக்கு வில்லங்கமா போச்சுது. அம்மன் சாத்திரம்

சொல்லுறா எண்டு கதை பரவத்தொடங்க சனங்கள் தங்கடை செந்தக்கதை சோகக்கதை சொல்லவரத்தொடங்கிட்டினம் .வருமானமும் நல்லாத்தான் வந்தது. அதுக்கையும் ஒரு வில்லங்கம் சிலபேர் குறிப்பு சாதகம் எண்டு கொண்டுவரத்தொடங்கிட்டினம் எனக்கு ஒழுங்கா  எழுத்து

வாசிக்கவே தெரியாது இதுக்கை குறிப்பு சாதகம் எப்பிடிப்பாக்கிறது. அதாலை நான் உங்கடை முகத்தை பாத்தஉடைனையே பலன் சொல்லுவன் உந்த குறிப்பு சாதகம் வேண்டாம் எண்டதும் சனம் ஆகா அம்மனுக்கு என்ன சக்தி

முகத்தை பாத்தே எல்லாம் சொல்லுறார் எண்டு என்னை அவையளே அம்மனாக்கி போட்டினம் .ஆனாலும் என்ன செய்ய ஊர்ப்பிரச்சனையிலை ஆமிக்காரன் இது அம்மன் அது பக்தன் எண்டு பாத்தே செல்லடிச்சவன். இல்லாட்டி அவன் அடிச்ச

செல்லை அப்பிடியே கையாலை பிடிச்சு திருப்பி எறிய என்னட்டை உண்மையா கடவுள் அருளோ இல்லாட்டி மந்திர தந்திரமோ தெரியாதே .ஆரோடையும் விழையாடலாம் ஆட்லெறியோடை விழையாடலாமோ அதாலை நானும் ஊரைவிட்டு வெளிநாட்டுக்கு வந்து நிம்மதியா

குடும்பமாகி ஒரு தொல்லையளும் இல்லாமல்  இவங்கள் தந்த சோசல்காசிலை சுகமாத்தான் இருந்தனான். ஆனால் எங்கை போனாலும் எங்கடை சனம்விடுமோ. ஒருக்கா சோசல் காசு எடுக்க போன இடத்திலை ஒரு தமிழ்குடும்பமும் வந்திருந்தவை

அந்த மனிசி என்னைப்பாத்ததும் தன்ரை புருசனிட்டை  இஞ்சையப்பா என்ன புதுமை எங்கடை அம்மன் இஞ்சை நிக்கிறா இவாதான் நான் கட்டாயம் வெளிநாட்டுக்கு போவன் எண்டு ஊரிலை சொன்னவா. ஆனால் அவாவும் இஞ்சை வந்திட்டா

எண்டிட்டு அம்மா தாயே எண்டு என்னைப்பாத்து கும்பிடதொடங்கிட்டுது மனிசி.எந்த ஏஜென்சி காரனிட்டை காசைக்கட்டினாலும் எங்கைவேணுமெண்டாலும் கொண்டுபோய் விடுவான் இதிலை நான் வெளிநாடு வந்ததிலை என்ன புதுமை ஆனால் அம்மன் ஏன்

சோசல்லை நிக்கிறா அம்மனுக்கு என்ன விசா எண்டு மனிசி ஏதாவது கேக்க போகுதாக்கும் எண்டு பயந்திட்டன் ஆனால் அப்பிடியொண்டும் மனிசி கேக்கேல்லை . தன்ரை மனிசனுக்கு இன்னும் விசா சரிவரேல்லை அதாலை உங்களைபாத்தது சந்தோசம்

உங்கடை போன்நம்பரை ஒருக்கா தாங்கோ எண்டு கேட்டுவாங்கினா.எப்பவும் ஏதாவது பிரச்சனை மனிசருக்கு இருந்து கொண்டுதான் இருக்கு ஆனால் இதுகள் உங்களுக்கு விழங்கினால் என்ரை பிழைப்பு பிரச்சனையாபோடும். ஊரிலை எப்ப வெளிநாடு

போவம் எண்ட பிரச்சனை வெளிநாட்டுக்கு வந்தால் எப்ப விசாகிடைக்கும் எண்ட பிரச்சனை  சரியெண்டு நம்பரை குடுத்திட்டு வந்திட்டன் . பிறகென்ன  ஊரிலை இருந்த அம்மன் எங்களுக்கு சேவை செய்ய வெளிநாட்டுக்கும் வந்திட்டா எண்டு கதை

பரவி சனமும்