மலரவிருக்கும் புத்தாண்டில் கிழக்கு ஐரோப்பாவில் புதிய தேசமாக கொசோவோ உருவாகவிருக்கிறது. தமிழீழ தேசத்துடன் ஒப்பிடுகையில் மக்கள் தொகையிலும், இடப்பரப்பிலும் சிறிதான கொசோவோவிற்கு உலகநாடுகள் அங்கீகாரம் வழங்குவது, தமிழீழ மக்கள் மத்தியில் ஒரு அங்கலாய்ப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும் தமிழீழ தேசம் உருவாவதற்கு எதிராக நியாயப்படுத்தப்பட்ட சில விடயங்கள் கொசோவோ தேசத்தின் உதயத்துடன் அடிபட்டுப் போகிறது என்பதில் நாம் திருப்தியடைந்து கொள்ளலாம்.
சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் தேசிய இனத்திற்கு பிரிந்து செல்லும் உரிமையுள்ளதை வலியுறுத்தி, தமக்கென இறைமையுள்ள சுதந்திர தமிழீழம் அமைத்துக் கொள்வதற்கான போராட்டத்தை ஈழத்தமிழர்கள் மேற் கொள்ள ஆரம்பித்து பல ஆண்டுகள் கழிந்து விட்டன. தமிழர் விடுதலைக்கூட்டணி வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றியதும், தனிநாட்டுக்கான அங்கீகாரத்தை வேண்டி தேர்தலில் அமோக வெற்றி பெற்றதும் முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகள்.
இந்தக்காலப்பகுதியில் தமிழீழக் கோரிக்கை என்பது சிங்கள அரசுடனான பேச்சுவார்த்தை மேiயில் பேரப் பொருளாக இருந்ததே தவிர, அன்றய தலைவர்கள் தனிநாட்டை அமைப்பதற்கான நம்பிக்கையுடன் செயற்படவில்லை. சராசரித் தமிழர்களும் இவ்விடயத்தில் உறுதியாக இருந்தார்கள் எனக்கூற முடியாது. சிறிலங்கா ஆட்சியாளர்களுடன் அடிக்கடி நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு ஏற்படுத்த முடியும் என்ற மாயையைத் தோற்றுவித்தன. இந்தத் தளம்பல் நிலையில் முன்னைய தமிழ் அரசியல் தலைவர்கள் தடம் புரண்டார்கள் என்பதுதான் வரலாறு.
இந்தியா உடபட சர்வதேச சக்திகள் இலங்கைத்தீவில் இன்னொரு தேசம் உருவாவதை விரும்பாமையே தமிழ் மக்களின் தனிநாட்டுப் போராட்டத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்தின. இன்றும் ஏற்படுத்தி வருகின்றன. அதனால் சர்வதேச அரங்கிற்கு தமிழீழக் கோரிக்கை இன்னமும் எடுத்துச் செல்லப்படவில்லை.
இந்நிலையில் சிங்கள கடும்போக்காளர்களின் நெகிழ்ச்சியற்ற போக்கே தமிழ் மக்களின் தனிநாட்டுப்போராட்டத்தை நியாயப்படுத்தி வந்துள்ளது. தற்போதைய அரசும் அதன் நேசசக்கதிகளும் அதனை நேர்த்தியாக செய்து வருகின்றன.
அண்மையில் கொழும்புக்கான பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் அவர்கள் தமிழீழம் கோருவது முறையற்றது அல்ல எனத்தெரிவித்த கருத்தை நாம் வரவேற்கவேண்டும். சிறிலங்கா அரசியல் அமைப்பின் ஆறாவது திருத்தத்தின்படி தனிநாடு கோருவது சட்டவிரோதமானதாக பிரகடனப்படுத்தப்பட்டாலும் சர்வேதச சட்டங்கள் தமிழீழப் போராட்டத்தை தடை செய்யவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
1978ல் யாழ்பாணத்தில் நடைபெற்ற மே தினக்கூட்டமொன்றில் திரு. அமிர்தலிங்கம் “அடுத்த ஆண்டு தமிழீழத்தில் சந்திப்போம்” எனக்கூறியது மாதிரி வெற்றுக்கோசமாக இல்லாமல், தமிழீழ தனியரசுக்கான அவசியத்தையும் அவசரத்தையும் உள்ளார்த்தமாக உணர்ந்து செயற்படுவோம்!
Comments
Tamil eelam
Kosova, looking at the history, do not have justification the Tamils have. First of all, before metallic revolution, Dravidian Kingdom was in place in South asis and Australia and new zealand. Dravidian who could not fight the metallic weapons lost and arien invaded tamils land in South Asia pusbing towards south india where tamils fought a war for surival. Those who fought hard against arien regeme and lost their life were named as Arakkan ( evil kings/people) and described wirth many heads and big stomark and eating humans. These are not true.
South India met a natural disater in which a peace of land splited from mainland separating india from the piece, the island of eellam where tamils separated from rest of them.
Thugs lead by Vijaya came from India, one of the arien King landed accidentally and harassed the locals, raped the Natives women and married. These generations can be described as Sinhalese. Ther is no undisputatble eveidance that the Kuveni was a Queen in Veddas Kingdom. She must be a Dravidian Queen. ravana was also Dravidian King. If Hela people are natives then they are Tamils. No one apart from the people mentioned lived in the island.
All the religion in the island were imported and people in the island were converted to Buddhism, Saivasim, Islam, catholism and christaianity later. People were converted peacefully to saivasim and Buddhism only. All the other conversion took place with violent threat of killing. Later, ther were converted by giving money and jobs. tHose coverted remained converted apart from those converted by means of violence. Some of them did not go back because the violence was so cruel and feared that they would face the same.
How long have you been without a state which you have lost illeaglly and vilently.
Ottoman Emphire captured the countries and converted people. They lost some. International community help some of the country to remain with muslims because they lived too long. Serbians claims has some reasonable explanations for Kosovo because they lost it to Ottaman emphire illegally.
Everyone must live peacefully. We must let the Sinhalese live peacefully only if they let us to live peacefully and if not they deserve nothing.
The whole island belong to Tamils. Sinhalese are illegal immigrant to this island as they did not get visa or came without work permit . They are doing what they should not do such as robbing and killing. They are person non grat.