ஒரு பேப்பர் 83

வணக்கம்!

கனடாவிலும் ஐரோப்பாவிலும் நடைபெற்ற எழுச்சி நிகழ்வுகளில் உங்களை சந்திக்கக்கிடைத்ததில் மகிழ்ச்சியாயிருக்கிறம். இத்தனை சனத்திரளிலும் எங்களைத்தேடி வந்து ஒரு பேப்பர் பற்றி விசாரித்தற்கும் உங்கள் கருத்துக்களை வெளிப்படையாகவே குறிப்பிட்டமைக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்னொரு விடயத்துக்கும் நாங்கள் நன்றி சொல்லவேண்டும். அதைச் சொன்னால் நாங்கள் விலாசம் காட்டுறம் என்று நினைக்கவேண்டாம். சுத்தி வளைக்காமல் சொன்னால் கதை இதுதான், பிரித்தானியாவில் இயங்கும் அனைத்துலக அரசு-சாரா நிறுவனமொன்று இலங்கையர்களது ஊடகங்கள் பற்றி (தமிழ், ஆங்கிலம், சிங்களம்) புலம்பெயர்ந்த இலங்கையர்களிடையே நடாத்திய கருத்துக்கணிப்பில் வாசகர்களது அபிமானத்தில் ஒரு பேப்பர் முன்னணி வகிப்பதாக அந்த நிறுவனம் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்து. அவர்களது கருத்துக்கணிப்பின்படி 93 சதவீதமானவர்கள் ஒருபேப்பரை படிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். மற்றய ஊடகங்களினது பெறுபேறுகளைக்கூறி அவர்களுக்கு எரிச்சல் மூட்டாமல், உங்களுக்கு நன்றி சொல்லி நிறுத்திக் கொள்கிறோம். இன்னொன்றையும் சொல்லோணும் இந்த நிறுவனத்தில் எங்களுக்கு தெரிஞ்சாக்கள் ஒருத்தரும் வேலை செய்யிறதில்லை.


ஒரு பேப்பரில் விளம்பரங்கள் பிரசுரிப்பது தொடர்பில் சில விளக்கங்களை தரவேண்டியிருக்கிறது. பத்திரிகை பிரசுரிப்பது, விநியோகிப்பது, பணியகத்திற்கான செலவீனம் என ஏகப்பட்ட விடயங்களுக்கு பணம் தேவைப்படுகிறது. ஒரு ஓசிப்பத்திரிகை இவற்றுக்கு முகம்கொடுக்கிறது விளம்பரங்கள் மூலம் பெற்றுக் கொள்ளும் வருமானத்திலிருந்து மட்டும் தான். எனவே இலவசமாக விளம்பரங்களை பிரசுரிப்பது என்பது இயலாத காரியம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். என்ன செய்யிறது ஒரு பேப்பரிலை விளம்பரம் போடுற எல்;லாருமே எங்கடை கூட்டாளியாளாய்த்தான் இருக்கினம். அவயளின்ரை முகத்தை முறிக்கிறது கஸ்டமாய்த்தான் இருக்கு.

யாழ்ப்பாணம் வங்கியில் ரூபாயிலை அடிச்ச கொள்ளைப்பணம் இவ்வளவுக்கும் கரைஞ்சிருக்கும் என்பதும், எங்களுக்கு காசு கருணை காட்டிறவர் எண்டு சொல்லப்படுகிற ஆளும் உள்ளுக்கை கம்பி எண்ணிறதாலை, விளம்பரப் பணத்திலைதான் நாங்கள் பேப்பர் அடிக்கிறம் எண்டது உங்களுக்கு இப்ப விளங்கியிருக்கும். இன்னும் இதுகள் விளங்காமல் இருக்கிற ஆக்களை விட்டுடிடுவம்.

மீண்டும் சந்திப்போம்.