புலம்பெயர்ந்து ஆண்டுகள் பல கடந்து விட்டாலும், இந்த வாழ்க்கைக்கு நாங்கள் பழக்கப்பட்டு இங்கு காலூன்றிவிட்டது போன்று மற்றவர்களுக்குத் தெரிந்தாலும். உள்ளத்தில்; எங்கள் சொந்த ஊருக்கு திரும்பிப் போகவேண்டும் என்ற தவிப்பு இருக்கத்தான் செய்கிறது. அடுத்தவருடம் போவோம், தப்பினால் அதற்கு அடுத்தவருடம் போவோம் என்ற எதிர்பார்ப்புடன் ஆண்டுகள் பல கழிந்து விடுகிறது. ஒன்றில் பொருளாதாரம் இடம் கொடுக்காது அல்லது எமது தேசத்தின் நிலவரம் அதற்கு தோதாக அமையாது. இந்த அங்கலாய்ப்புடன், எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாமல் நரைப்பருவம் எய்திய பலரை நாம் சந்தித்திருக்கிறோம்.
இந்தப்பின்னணியில் எழுதப்பட்ட புனைகதைதான் Brick Lane. பங்களாதேசத்தின் தலைநகர் டாக்காவில் பிறந்து இளவயதில் லண்டனுக்கு குடிபெயர்ந்த மொனிக்கா அலி எழுதிய இந்த நெடுங்கதை 2004ல் புத்தகமாக வெளிவந்த போது விற்பனையில் முன்னணி வகித்த புத்தகங்களில் ஒன்றாக இருந்தது. டீழழமநச Pசணைந உட்பட பல விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த இக்கதை இப்போது திரைப்படமாக தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு லண்டனில் Tower Hamlets பகுதியில் பங்களாதேஸ் நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் செறிந்து வாழ்கிறார்கள். அங்குள்ள பிரதான கடைத்தெருதான் Brick Lane. இங்கு பங்களாதேசி குடியேறிகளால் நடாத்தப்படும் Curry House என அழைக்கப்படும் மலிவான இந்திய உணவுச்சாலைகள் நிரம்ப இருக்கின்றன.
பெரும்பாலும் பங்களாதேசத்தின் மலைப்பிரதேசமான சிலெற் (Sylhet) பிராந்தியத்திலிருந்து வந்த தொழிலாளர்களே இங்கு வசிக்கிறார்கள். இவர்களை சிலெற்றிகள் என்று அழைத்து தங்களை இவர்களிடமிருந்து வேறுபடுத்திக் கொள்கிறார்கள் படித்த பங்களாதேசிகள். சிலெற்றி என விளிக்கப்படும் பங்களாதேஸ் தொழிலாளிக்கும் சிலெற் பிரதேசத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லாவிடினும் “சிலெற்றி” என்பது படிக்காத பங்களாதேஸ் தொழிலாளர்களை குறிக்கும் சொல்லாக இப்போது உருவாகி விட்டது.
இந்த வர்க்க முரண்பாடுகளையும், புலம் பெயர்வாழ்வியலின் அன்றாடப் பிரச்சனைகளையும், கலாச்சார சிக்கல்களையும் மையப்படுத்தி இத்திரைப்படத்தின் கதை நகர்கிறது.
படத்தின் நாயகி நஸ்னீன் (ரனிஸ்ரா சட்டர்ஜி) பங்களாதேஸ் கிராமமொன்றில் பிறந்தவள். தனது பதினேழுவயதில் தந்தை பார்த்த வரனான, அவளிலும் இருபது வயது மூத்த லண்டன் வாசியாய் மாறிவிட்ட படித்த மாப்பிள்ளை சானுவை (சத்திஸ் கௌசிக்) திருமணம் செய்து லண்டனுக்கு வருகிறாள். கட்டிடக் காடாய் இருக்கும் Tower Hamlets உள்ளுராட்சிச்சபை தொடர்மாடி வீடொன்றில் வெளித்தொடர்புகள் அதிகமில்லாமல், தனது உணர்வுகளை புரிந்து கொள்ளாத கணவனுடனும், அவளது இரண்டு பெண் பிள்ளைகளுடனும் அவளது வாழ்க்கை நகர்;கிறது. மேலைத்தேய நாகரீகத்தில் வாழும் பிள்ளைகள் தங்கள் தந்தையான சானுவுடன் அடிக்கடி முரண்படுகிறார்கள். தான் புரியும் தொழிலில் உயர்வு அடையமுடியாமல் தவிக்கும் சானு தனது பிரச்சனைகளுக்கான தீர்வு குடும்பத்துடன் நாடு திரும்புவதில் இருப்பதாக நம்பி அதற்கான நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்;.
பங்களாதேசில் வசிக்கும் நஸ்னின் ஒரேயொரு சகோதரி ஹசினா அங்கு தனது வாழ்க்கையைப் பற்றி வர்ணித்து அடிக்கடி எழுதும் கடிதங்கள் நஸ்னினுக்கு பெரும் ஆறுதலாக இருக்கின்றன. தான்; சிறுவயதில் வாழ்ந்த வாழ்க்கையை, இழந்துபோன இளமைப்பருவம் பற்றிய ஏக்கத்தை அவளுக்கு வரவழைக்கின்றன. இருதடவைகள் துணையை மாற்றும் ஹசினா தனது கணவர்கள் பற்றி எழுதும் காதல் விடயங்கள் நஸ்னினுக்கு ஒருபுறம் தனது தங்கையையிட்டான குறும்புத்தனமாகவும், அதேசமயம் தான் இழந்துகொண்டிருப்பவை பற்றிய வருத்தத்தையும் அவளுக்கு கொடுக்கின்றது.
நஸ்னின் வருவாயைப் பெறுவதற்காக வீட்டிலிருந்து உடை தைத்துத்துக் கொடுக்கிறாள். துணிகளை வழங்கி நஸ்னின் மூலம் உடைகள் தைத்து விற்கும் சிலெற்றி இளைஞன் கரீம் (கிறிஸ்தோபர் சிம்சன்) நஸ்னினுடன் நெருங்கிப்பழகுகிறான். அவர்களது உறவு படுக்கையறை வரை நீள்கிறது. தன்னை மணந்து கொள்ளுமாறு அவளை வற்புறுத்துகிறான் கரீம்.
புலம்பெயர் தேசத்துக் குடிகளுடன் சேரமுடியாத கலாச்சார வேறுபாடுகளையும் தனிமனிதரிடையே உள்ள மனக் குழப்பங்களையும் வெளிப்படுத்தும் உணர்வுச்சிக்கலை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது. பிரித்தானியாவில் குடியேறியுள்ள வெளிநாட்டு சமூகங்களிடையே காணப்படும் உபகலாச்சாரத்தை (ளரடி உரடவரசந) தனக்கு பரீட்சயமான பங்களாதேஸ் சமூகத்தினர் ஊடாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் படத்தின் மூலக்கதையை எழுதிய மொனிக்கா அலி. அதனை எவ்வித்திலும் சிதைக்காமல் படமாக்கியிருக்கிறார் படத்தின் இயக்குனர் சாரா கவ்ரன்.
முஸ்லிம் தீவிரவாத இளைஞர்கள் கூட்டும் கூட்டமொன்றிற்கு வழமைக்கு மாறாக நஸ்னினை அழைத்துச் செல்கிறான் அவளது கணவன் சானு. அந்த கூட்டத்தினை ஏற்பாடு செய்பவர்களில் ஒருவனாக அவளது காதலன் இருப்பது அவளுக்கு தெரிந்திருந்தது. சானுவின் உள்நோக்கம் எதுவென அறியாமல் தனது தவிப்பை வெளிப்படுத்துவதில் ரனிஸ்ரா சட்டர்ஜி தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார். கூட்டத்தில் கலந்துகொள்ளும் இளைஞர்கள் தங்களை (முஸ்லீம்களை) சகோதரர்களாகவும,; வெள்ளையர்களை எதிரி;களாகவும் கூறும்போது சானு இடைமறித்து, “நான் எப்படி உனது சகோதரனாக இருக்கமுடியும்? முஸ்லிம்கள் எல்லோரும் சகோதரர்களாக இருப்பின் மேற்கு பாக்கிஸ்தான் - கிழக்கு பாக்கிஸ்தான் (பங்களாதேஸ்) யுத்தத்தில் மூன்று மில்லியன் மக்கள் கொல்லப்பட்டது எப்படி? எனக் கேள்வியெழுப்புகிறான். இங்கு சானு தன்னை புத்திஜீவியாகக் காட்டி, கூட்டத்தில் உள்ள சிலேற்றிகளிலிருந்து தனக்குள்ள வர்க்க வேறுபாட்டை காட்டுகிறானா? அல்லது தனது மனைவியின் காதலனை (இந்த காதல் விவகாரத்தை அவன் தெரிந்து கொண்டானோ இல்லையோ என்பது படத்தில் வெளிப்படுத்தப்படவில்லை) பழிவாங்குகிறானா என்ற குழப்பத்தில் நஸ்னின் இருப்பதுபோலவே பார்வையாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவது நல்ல சஸ்பென்ஸ்.
வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய கதாபாத்திரமான சானுவாக நடிக்கும் சத்திஸ் கௌசிக் தனது அபாரமான நடிப்பாற்றலால் அந்த பாத்திரத்தினை மெருகேற்றியிருக்கிறார்.
தவளை முகத்தையொத்தவன் எனவர்ணிக்கப்படும், பருத்த சரீரத்தைக் கொண்ட அழகற்ற, எவ்விதத்திலும் பொருத்தமற்ற கணவனிடமிருந்து, அதிகம் அன்பைப் பெறாத நஸ்னீன் சிலேட்டி இளைஞன் கரிம் உடன் கொள்ளும் உறவு அவளது திருமண பந்தத்திற்;கு புறம்பானது என்கின்றபோதும் விரசமில்லாமல் காட்டப்படுவது நஸ்னின் மீது அனுதாபத்தை வரவழைக்கிறது. மொனிக்கா அலியின் கதையில் காணப்பட்டதுபோல் அவர்களுக்கிடையிலான வெறியற்ற காமத்தை இயக்குனர் மிக அவதானத்துடன் படமாக்கியுள்ளார். Brick Lane பகுதியில் வாழும் பங்களாதேசிகளின் எதிர்ப்பை படத்தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தமை இந்த பாலியல் விவகாரம் தொடர்பானது என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
Recent comments
1 week 1 day ago
1 week 3 days ago
4 weeks 1 day ago
5 weeks 5 days ago
5 weeks 5 days ago
5 weeks 5 days ago
16 weeks 14 hours ago
16 weeks 15 hours ago
16 weeks 2 days ago
16 weeks 6 days ago