நவம்பர் 27
தமிழ் மண் விடுதலையடைய வேண்டும்,தமிழ் மக்கள் அமைதியுடனும் சந்தோசத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் எதிர்காலத்தை விருப்பு வெறுப்புகளை சொந்த பந்தங்களை எல்லாம் துறந்து உறுதியுடன் போராடி தங்கள் உயிர்களைத் தந்த மாவீரர்களை நினைவுகூருகின்ற நாள்.
தியாகம் என்ற சொல்லின் எல்லை எது என்ற கேள்விக்கு உதாரணம் காட்டக் கூடிய வகையில் வாழ்ந்து தமிழ் மண்ணின் விடிவிற்காய் தம் வாழ்வை முடித்துக் கொண்ட தியாக சீலர்களுக்கான நாள்
மாவீரர் தியாகம் இலகுவில் மறக்கப் படக் கூடியதா?
இளமைக் காலத்துக்கே உரிய குறும்புகள், குழப்படிகள், சீண்டல்கள் இவை எல்லாவற்றையும் புறம் தள்ளி, இன்னும் சரியாகச் சொல்வதானால் தங்களைத் தாங்களே ஒறுத்து கட்டுக் கோப்பாக வாழ்ந்து வியக்கத்தக்க வீர சாகசங்களைச் செய்த விற்பன்னர்கள்.
'நாய்கள்' என்று ஏளனம் செய்து நினைத்த போதெல்லாம் அடித்துத் துரத்தியவர்களை 'புலிகள்' என்று அச்சத்தோடும் பிரமிப்போடும் பார்க்க வைத்தவர்கள்.
என்குடும்பம், என் பிள்ளை, என் சொத்து என்ற குறுகிய வட்டங்களைக் கடந்து எம் நாடு, எம் மொழி, எம் மக்கள் என்று சிந்தித்த வித்தகர்கள்.
சிங்கள அரசின் ஆள் ஆயுத பலத்திற்கு முன்னால் இவர்கள் எம்மாத்திரம் என்று ஏளனம் செய்தவர்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தவர்கள்
ஒவ்வொரு போராளிக்குள்ளும் எத்தனை கதைகள்?
சமர்க்களத்திலே என்னுயிர் போக நேரிட்டாலும் வானத்திலிருந்து மலரும் தமிழீழத்
தைப் பார்ப்பேன் என்று சொன்ன திலீபன்கள் எத்தனை பேர்?
மணமாலை காய்வதற்கு முன்பே பிணமாலையைச் சு10டிக் கொண்ட குமரப்பாக்கள் புலேந்திரன்கள் எத்தனை பேர்?
சிறிலங்கா அரசாங்கம் சிங்களத் தலைநகரில் வைத்துக் கொல்ல முயற்சிக்காதா என்ற நிருபர்களின் கேள்விக்கு சிங்கள அரசை நம்ப முடியாது தான் ஆனால் அப்படி எனதுயிர் போனாலும் அது தமிழ் மக்களுக்காகத் தானே என்று சொன்ன தமிழ்ச் செல்வன்கள் எத்தனை பேர்?
புலத்திலே வாழ்ந்த வசதியான வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு தாயக மண்ணிற்
காய் வித்தாகி விழுந்தவர்கள் எத்தனை பேர்?
மூன்று முறை நான்கு முறை காயப்பட்ட போதும் சிங்களத்தின் வான் கலங்க்ள அழிந்து கொண்டிருக்கின்றன என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தலைமைக்கு அறிவித்துக் கொண்டே வீரமரணத்தைச் சந்தித்தவர்கள் எத்தனை பேர்?
இந்தத் தியாக சீலர்களை நினைத்ததுமே எங்கள் மனதில் புனிதமும் மரியாதையும் இன்னும் சரியாகச் சொல்வதானால் ஒரு குற்றஉணர்வும் ஏற்படுவதில் வியப்பொன்றும் இல்லை.
அந்த வீரர்களை, மண்ணின் மைந்தர்களை நினைவுகூர்ந்து கார்த்திகை 27ம் திகதியை எழுச்சி நாளாக அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் வழமை போலவே இம்முறையும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அவற்றில் நாம் அனைவரும் கலந்துகொண்டு எங்கள் மரியாதையினையும் மதிப்பையும் காட்ட வேண்டியது கட்டாயக் கடமையாகிறது.
புலம்பெயர் நாடுகளிலே அதிகளவு தமிழர் கள் கூடுகின்ற தினமாகவும் உணர்வுபூர்வ
மான நிகழ்வாகவும் இருக்கின்ற இந்த மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அன்றைய தினத்தை வேறு எந்தக் காரியத்திற்காகவும் ஒதுக்குவதற்கு தமிழுணர்வுள்ள, தமிழ் மண்ணில் பிறந்த மனச்சாட்சியுள்ள எவரது மனதும் ஒப்பாது.
27ம் திகதி நடக்க இருக்கும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு தொழில்,கல்வி, சுகயீனம் என்று ஆயிரம் காரணங்களைக் கற்பிக்கலாம் என்றாலும் செய்நன்றி மறவாமை என்ற ஒரே ஒரு காரணமே அத்தனை நொண்டிச் சாட்டுக்களும் அடிபட்டுப் போவதற்குப் போதுமாயிருக்கும் அல்லவா?
இது வித்தாகிப் போன எங்கள் மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வு மட்டுமல்ல. தாங்கள் பெற்றெடுத்த அன்புச் செல்வங்களின் டன்பிறப்புக்களின் இழப்பினால் துயருருகின்ற எம் தமிழ் உறவுகளுக்கு மனோரீதியான பலத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்துகின்ற நிகழ்வும் ஆகும்.
என் குழந்தை, என் சகோதரன், என் சகோதரி இத்தனை ஆயிரம் பேரின் இதயத்திலே வாழ்கிறானே ஃ வாழ்கிறாளே என்ற எண்ணம் அவர்களுக்கு எவ்வளவு பெரிய ஆறுதலைக் கொடுக்கும்? இதுபோன்ற மனிதாபிமான சமூகக் காரணங்
களுக்கு அப்பால் இந்த நிகழ்வை பெரும் நிகழ்வாக மாற்ற வேண்டியதற்கான அரசியற் காரணமும் இருக்கிறது.
தொழில்,கல்வி, சுகயீனம் என்று ஆயிரம் காரணங்களைக் கற்பிக்கலாம் என்றாலும் செய்நன்றி மறவாமை என்ற ஒரே ஒரு காரணமே அத்தனை நொண்டிச் சாட்டுக்களும் அடிபட்டுப் போவதற்குப் போதுமாயிருக்கும்
இந்த மாவீரர்கள் ஏதோ ஒரு சிறு குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் என்பது
போலவும் தங்கள் சுயநலனுக்காகப் போராடியவர்கள் என்பது போலவும் பொய்ப் பிரச்
சாரங்களை மேற்கொள்ளும் சிங்கள அரசாங்கத்திற்கும் அவர்களது பேச்சுக்களை நம்பும் அல்லது நம்புவது போல் நடிக்கும் சர்வதேசத்திற்கும் இவர்கள் ஒரு குழுவைச் சேர்ந்தவர்களல்ல ஒட்டுமொத்தத் தமிழினத்தையே பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இயக்கத்தின் அங்கத்தவர்கள் என்பதையும் இந்த இளைஞர், யுவதிகள் எந்த இலட்சியத்திற்காக தங்கள் இன்னுயிரைத் தந்தார்களோ அந்த இலட்சிய உறுதியோடு போராடும் தலைமையுடன் நாம் எல்லோரும் தோளோடு தோள் நிற்கிறோம் என்ற உண்மையையும் அடித்துச் சொல்வதற் கும் இந்த ஒன்றுகூடல் அவசியமாகின்றது.
அதிலும் அண்மைக்காலமாக இலங்கைப் பிரச்சினையை தொடர்பாக் சர்வதேசம் கூடிய
அக்கறை எடுத்துக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் எங்களின் ஒட்டுமொத்த ஆதரவைக் காட்டுவதன் மூலம் தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத்தன்மையை உலகத்தின் கண்களின் முன் மேலும் அழுத்தமாக வைக்கக் கூடியதாக இருக்கும்.
தாயகத்தின் அவலங்களை நீக்குவதற்கான தார்மீக உதவிகளைச் செய்தவர்களை ஹபயங்கரவாதிகள்ஹ என்று பட்டம் சு10ட்டி சிறையிலடைத்து வைத்திருப்பதன் மூலம் தமிழ் சமூகத்தின் நியாயமான உரிமைக்குரலை அடக்கி விடலாம் என்று நினைக்கும் அதிகார வர்க்கங்களுக்கு வர்க்கங்களுக்கு தமிழ் மண்ணின் தமிழ் மக்களின் மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் சிங்களத்தின் அராஜகங்களை அம்பலப்படுத்துவதற்கும் நாம் பின்னிற்கப் போவதில்லை என்று உரத்துக் குரல் கொடுக்கும் ஒருகளமாக இந்த எழுச்சி நாளை நாம் பயன் படுத்துவோம்.
புலத்திலே வாழுகின்ற தமிழுணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் அன்றைய தினத்தை மாவீரர் தின நிகழ்வுக்காய் ஒதுக்கி எமது கடமையை நிறைவேற்றுவோம்.
தமிழினத்தின் வரலாற்று நாயகர்களுக்கு எம் மரியாதையைச் செலுத்துவோம்.
Recent comments
2 weeks 6 days ago
7 weeks 5 days ago
8 weeks 1 day ago
10 weeks 5 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
22 weeks 5 days ago
22 weeks 5 days ago
22 weeks 6 days ago