'சட்டக்குறி' (அல்லது பட்டைக் குறி) என்பது தொழில்நுட்பத்தின் ஒரு
பிரதிபலிப்பாக எமது அன்றாட வாழ்வில் இன்று பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
கடைகளில் உள்ள பொருட்களின் பொதியில் உள்ள சட்டக் குறியை கருவி கொண்டு
வாசிக்கும் பொழுது அதன் விலையும் பொருளின் சுருக்கமான பெயரும் கருவியின்
திரையில் விழுவதை காண்கிறோம். அதேபோல் ஆவணங்களில், பயணச் சீட்டுகளில்,
பயணப்பொதிகளில் என்று இவற்றின் பயன்பாட்டுத்தளம் விரிவடைகிறது.
சட்டக் குறியின் அடிப்படை நோக்கம் தன்னிச்சையாக நம்பகரமான முறையில் தகவல்களை
கணினி-கருவிகளினுள் பதிவதாகும். முதலாவது (எளிமையான) சட்டக்குறி 1948 இல்
அமெரிக்காவின் ட்ரெக்சல் (Drexel) தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் இருவரால்
உருவாக்கப்பட்டது. ஆரம்பகால வடிவத்தில் கறுப்பும் வெள்ளையுமான கோடுகள் தகவலை
இருமக் குறியீட்டில் (binary representation) பிரதிநிதித்துவம் செய்தன. '
சட்டக்குறி'யின் ஆரம்பகால பயன்பாடுகளில் ஒன்றாக தொடரூந்துகளின் பெட்டிகளை
இனங்காணுவதற்கு பயன்படுத்தப்பட்டமையைக் குறிப்பிடலாம். 'சட்டக்குறி'யின் பரவலான
வணிக வியாபாரப் பயன்பாடு 1966 இன் பின்னர் தான் உணரப்பட்டது. தகவல்கள் எவ்வாறு
குறியிடப்படுகின்றன, அவற்றின் இருமக் குறி என்ன என்பது போன்றவை எந்த ஒரு
பொதுவான தரவரையறைக்குள்ளும் இல்லாதது பரந்த அளவிலான வணிகப் பயன்பாட்டிற்கு
தடையாக இருந்தது. இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய 'சர்வதேச பொருட் குறியீடு'
(Universal Product Code) என்ற தரவரையறை 1973 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
'சட்டக்குறி' அறிமுகமான காலத்திலிருந்து, அதிக தகவல்களை - நம்பிக்கையான
முறையில் - குறைந்த இடத்தை (பரப்பளவு) எடுக்கும் வகையில் - சட்டக்குறியாக
பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு பல்வேறு வகையான நுணுக்கங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த முன்னேற்றங்கள் பல படிநிலைகளில்
நிகழ்ந்திருந்தாலும், சாதாரண கண்ணினால் அவதானிக்கக் கூடியதாக பின்வருவனவற்றைக்
கொள்ளலாம்:
1. தனியே கறுப்பு வெள்ளைக் கோடுகளாக அல்லாமல், கோடுகளின் மொத்தத்தை மாற்றுவதன்
மூலம் மேலதிக தகவல்களை பிரதிநிதித்துவப்படுத்துவது.
2. சட்டக்குறியின் உயரத்தை குறைத்து, ஒன்றன் மேல் ஒன்றாக (stacked, 1D) 2
சட்டக்குறிகளை அச்சிடுவது.
3. கோடுகளினால் உருவான சட்டக்குறி என்பதை 'இரு பரிமாணத்தில்' (2D) அதிகரித்த
தகவலை குறிக்கும் பெட்டிகளினால் உருவாக்குதல்.
ஆரம்பத்தில் சிறிய அளவு இலக்கங்களை மாத்திரம் குறியிடக் கூடியதாக இருந்த
சட்டக்குறி, இன்று இரு பரிமாணச் சட்டக்குறி மூலம் ஒப்பீட்டளவில் பெருமளவு
தகவல்களை உள்ளடக்கக் கூடியதாக இருக்கிறது. சட்டக்குறியின் பயன்பாடு என்பது
பாரம்பரியமாக அதனுள் அடக்கக் கூடிய தகவல்களின் அளவின் வளர்ச்சியோடு
விரிவாக்கப்பட்டு வந்தது. சட்டக்குறியினை வாசிக்கும் கருவி என்பது விற்பனை
நிலையங்களிலும், கட்டுப்பாட்டு நிலையங்களிலும் மாத்திரம் தான் காணப்பட்டது.
இன்று கைத்தொலைபேசி என்பது ஒரு பொதுவான நுகர்வுப் பொருளாக மாறிவிட்டது.
கைத்தொலைபேசியில் நிழற்படம் எடுக்கும் வசதி என்பது கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு
முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று பரந்த அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
நிழற்படம் எடுக்கும் வசதி கொண்ட ஒவ்வொரு கைத்தொலைபேசியும் சட்டக் குறியை
வாசிக்கக் கூடிய அடிப்படைத் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. இதனால் இன்று
சட்டக்குறியின் பயன்பாடு ஒரு புதிய அளவிலான விரிவாக்கத்தை நோக்கிச் செல்கிறது.
வாடிக்கையாளர் மற்றும் நுகர்வோர்களுக்கு விளம்பரப்படுத்தப்படும் பொருட்கள்
பற்றிய முக்கிய தகவல்களை சட்டக்குறி மூலம் இலகுவாக பதிவு செய்வதற்கான வசதி
அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பல
கைத்தொலைபேசிகளில் இரு பரிமாண சட்டக்குறியினை வாசிக்கக் கூடிய மொன்பொருள்
உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
கணினித் திரையிலோ, தொலைக்காட்சித் திரையிலோ, அச்சுடகங்களிலோ (பத்திரிகை),
அல்லது தெருவோரம் உள்ள கடைகளின் கண்ணாடிக்கு அப்பாலோ உள்ள 'இரு பரிமாண'
சட்டக்குறியை, மேற்குறித்த வசதியைக் கொண்ட கைத்தொலைபேசியினால் வாசித்தறிய
முடியும். உங்களிடம் இருக்கும் கைத்தொலைபேசியில் இந்த வசதி இருந்தால், கீழுள்ள
சட்டக்குறியை வாசித்தறிய முயற்சி செய்யுங்கள்.
[img]http://img124.imageshack.us/img124/9033/dotmatrixrl3.png[/img]
சட்டக்குறி பற்றிய வரலாற்றுத் தகவல்கள்:
*http://www.barcoding.com/information/learn...t_barcodes.shtm*<http://www.barcoding.com/information/learn_about_barcodes.shtm>
கைத்தொலைபேசியை மையப்படுத்திய புதிய பயன்பாடுகள்:
http://semacode.org
Firefox என்ற பிரபல இணைய உலாவிக்கு, மெருகேற்றும் பல துணை
மென்பொருட்கள்(extensions)
சேர்க்க முடியும். அதில் ஒன்றாக, இணைய உலாவி தற்பொழுது உள்ள இணைய முகவரியை '
இரு பரிமாண' சட்டக்குறியாக காட்டும் வசதி உள்ளது.
Mobile Barcoder: https://addons.mozilla.org/en-US/firefox/addon/2780
Firefox இற்கான இன்னொரு மிகவும் பயனுள்ளதும், சுவாரசியமானதுமான துணை
மென்பொருள் - தமிழர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட - நில அதிர்வுகள் பற்றிய
தகவல்களை உடனுக்குடன் தரும் வசதிகொண்டது. ஒவ்வொரு புதிய நில அதிர்வு பற்றிய
தகவலும், அமெரிக்க புவியல் ஆய்வுமையத்தின் (USGS) இணையச் சேவை மூலம்
வெளியிடப்படும் பொழுது உங்களின் இணைய உலாவி சிறிதாக அதிர்ந்து சமிக்கை தரும்.
குறித்த அதிர்வு பற்றிய அடிப்படைத் தகவல்கள் இணைய உலாவியின் கீழ்ச் சட்டத்தில்
காட்டப்படும்.
eQuake Alert: https://addons.mozilla.org/en-US/firefox/addon/2239
Recent comments
9 weeks 2 days ago
9 weeks 2 days ago
9 weeks 3 days ago
10 weeks 22 hours ago
10 weeks 22 hours ago
10 weeks 5 days ago
11 weeks 1 day ago
11 weeks 5 days ago
12 weeks 5 days ago
12 weeks 5 days ago