லா சப்பலில் லைலா
எல்லாருக்கும் வணக்கம்.
செய்தி எல்லாரும் அறிஞ்சிருப்பியள். கிழக்கின் (அ)சிங்கம் கருணா லண்டனிலை கைதாகி கம்பிஎண்ணுறாராம். அவரை பின்னாலை முன்னாலை நிண்டு இயக்கின எல்லாரும் கையை விட்டிட்டினமாம்.
எங்கடை வாழ்வுரிமை போராட்டத்தையும் எங்கள் வீரர்களின் தியாகங்களையும் எங்களை அடக்கிஆள நினைக்கிறவைக்கு அடைவு வைச்சு வயிறு வளக்க நினைக்கிறவை எல்லாருக்கும் இது ஒரு பாடமா இருக்கும்.
அது மட்டுமில்லை அந்த கிழக்கின் விடிவெள்ளி பலபேருக்கு வெடிவைச்சு கடத்தி கப்பம் வாங்கி சேர்த்த சொத்தெல்லாம் வெளிநாடுகளிலை பினாமி பெயருகளிலை முதலீடு செய்திருந்தவர். இப்ப அந்த பினாமியளுக்குதான் நல்ல வாசியாம். அப்பிடி பிரான்சிலையும் ஒரு பினாமியிட்டை கருணா பெரிய தொகையை குடுத்து வைச்சிருந்தவராம் லண்டனுக்கு போக முதல் கருணா பிரான்சிலை அவரின்ரை வீட்டிலைதானாம் ஒரு கிழைமை நிண்டு போனவர். கருணா பிடிபட்டது அவருக்கு நல்ல சந்தோசமாம். உடைனையே அவர் ஒரு வீடும் வாங்கி பென்ஸ்காரும் வாங்கி ஓடி திரியிறார்.
அடுத்ததா இந்த லாசப்பலிலை இப்ப கொஞ்ச நாளாய் பொலிசின்ரை கெடுபிடி கூடிப்போச்சு சும்மா போக வர விடுறாங்கள் இல்லை ஒரே சோதினை.அது மட்டுமில்லை சும்மா ஒரு கடையிலை இல்லாட்டி உணவு விடுதியிலை சாதாரண சோதனையெண்டாலும் ஏதோ பயங்கர தீவிரவாதியளை பிடிக்கிறமாதிரி நாலைஞ்சு வாகனத்திலை முப்பது நாப்பது பொலிஸ் வந்து சுத்திவளைச்சு சோதிக்கிறாங்கள்.
அவங்களும் எத்தனை தரம் சோதிச்சு விசா இல்லாமல் மற்றது சட்டப்படி பதியாமல் வேலைக்கு வைச்சிருக்கிற ஆக்களை பிடிச்சு வழக்கு போட்டு தண்டம் அடிச்சாலும். எங்கடை சில முதலாளி மாரும் குறுகிய லாபத்துக்காக திரும்பவும் அதே பிழையை தான் விடுகினம்.அது மட்டுமில்லை உணவு விடுதியளுக்கை போனால் முதல் சுத்தமாயிருக்க வேண்டியது கழிவறை ஆனால் கழிவறையிக்கை போனால் சுத்தமாயிருக்காது. பேப்பர் இருக்காது. கை கழுவபோனால் கழுவிற சவுக்காரம் இருக்காது கையை கழுவிட்டு துடைக்க போனால் துடைக்க பேப்பர் இருக்காது இப்பிடி சாதாரண சின்ன விடயங்களையே கவனிக்கிறேல்லை பிறகு பரிசோதகர் வந்துபாத்தால் ஆயிரக்கணக்கிலை தண்டம் கட்டுவினம். தண்டம் கட்டுற காசுக்கு ஒழுங்கா சுத்தப்படுத்தி வரியை கட்டி நல்லபடியா வியாபாரத்தை நடத்தலாம்
ஏதோ நானும் புலம்புறன் ஆனால் ஆர் கேக்க போகினம்.
Recent comments
2 weeks 6 days ago
7 weeks 5 days ago
8 weeks 1 day ago
10 weeks 5 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
22 weeks 5 days ago
22 weeks 5 days ago
22 weeks 6 days ago