கருணா, பிள்ளையான் குழுக்களிடையே மோதல். இலண்டனில் கருணா கைது போன்ற செய்திகளில் இப்போது ஊடகங்களில் அடிபடும் ஒரு பெயர் கே.ரீ. இராசசிங்கம். யார் இவர், திடிரென இந்தாள் எங்கை இதுக்கிள்ளை வந்திச்சு என்ற திகைத்துப் போயிருக்கிறீர்கள் என்றால் மேற்கொண்டு படியுங்கள். நான் ஏதோ சேர்.பொன்னம்பலம் இராமநாதன், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ரேஞ்சில இருக்கிற ஆளைப் பற்றி சொல்லப்போறன் என்று எதிர்பார்க்கிற ஆக்களை ஏமாற்றாமல், முதலிலேயே சொல்லி விடுகிறேன் இந்த ஆள் ஒரு திருகுதாளக்காரன்.
பேரிய பெரிய ஆக்க்களின் சரித்திரம் எழுதிற மாதிரி பிறப்பிலிருந்து தொடங்கினால். ஆள் பிறந்த இடம் பருத்தித்துறை பிறந்த திகதி 21.07.1940. தகப்பனார் கணபதிப்பிள்ளை தம்பிராசா. பர்மாவின் தலைநகர் ரங்கூனில் தம்பிராசா வேலைபார்த்ததாலை ரங்கூன் தம்பிராசா என்டால் ஊருக்கை எல்லாருக்கும் தெரியும். இராசசிங்கம் பிறக்கேக்கை தம்பிராசாக்கு 60 வயது. பிறப்பிடமுகவரி ரங்கூன் இல்லம், புலோலி மேற்கு பருத்தித்துறை. சுவீடனிலை பதுங்கியிருக்கிற இராசசிங்கத்தின் பாஸ்போர்ட்டிலை நான் சொல்லிற விபரங்கள் இல்லையெண்டா நான் ஒண்டும் செய்யேலாது. முன்னமே சொல்லிப்போட்டன் ஆள் சுத்துமாத்துப் பேர்வழி எண்டு.
(எல்லா) விளையாட்டிலையும் விண்ணனாய் இருந்த இராசசிங்கத்துக்கு படிப்பு சரிவரேல்லை. ஆளாலை எஸ்.எஸ்.சி (அப்போதைய ஜீசிஈ ஒ.எல்.) பாஸ் பண்ணேலாமல் போச்சுது. ஆதாலை அரசாங்க உத்தியாகம் செய்யேலாமல் போயிட்டுது. “தினபதி” என்று அப்போது கொழும்பிலேருந்து வெளியான பத்திரிகையிலை நிருபரா வேலை செய்தார். தினபதியின் வெளியீடாக வெளிவந்த “ராதா” என்ற சஞ்சிகையிலையும் வேலை செய்தார். இருந்தாலும் அந்தாளின்ர குறுக்கு மூளை அதோடை நிற்கேல்லை, 1970 ஆண்டு தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமோக வெற்றி பெற்றபோது அந்தக்கட்சியில் சேர்ந்து உடுப்பிட்டித் தொகுதிக்கான கட்சியின் அமைப்பாளராக மாறினார். அந்தகாலத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தால் இராசசிங்கம் ஆட்களுக்கு வேலை எடுத்துத்தருகிறேன் என்று ஓரு சுத்து சுத்திவிட்டார். அதே பழக்கம் இன்றைவரைக்கும்; தொடர்வதை அம்மானைக் கேட்டால் தெரியும். அம்மான்ர கட்சியை பதிஞ்சு தாறன் எண்டு லட்சக்கணக்காய் வேண்டி அதிலை இராசசிங்கம் தன்ர பொம்பிளைப்பிள்ளையளுக்கு கலியாணம் செய்து குடுத்ததாய் அவரை நல்லா தெரிஞ்ச ஒராள் ஈலிங் றோட் கோவில் உண்டியலிலை சத்தியம் பண்ணிச் சொல்லியிருக்கிறார்.
இராசசிங்கம் சுருட்டலகளைச் செய்த .இடம் புலோலி பலநோக்கு கூட்டறவுச்சங்கம். தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அதன் தலைவரான இராசசிஙகம் இந்த சம்பளமில்லாத பதவியிலிருந்தும் சில லட்சங்களைச் சுருட்டியதாக அப்போது பரவலாகப் பேசிக்கொண்டார்கள்.
கேரீஆர் என்று எம்ஜீஅர் கணக்கில் தன்னை நினைத்திருந்த இராசசிங்கம் 1977ம் ஆண்டு தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக பருத்தித்துறை தொகுதியில் போட்டியிட்டார். 616 வாக்குக்களை பெற்று கட்டுப்பணத்தையும் இழந்திருந்தார். தேர்தல் முடிவுகளை அறிய யாழ் கச்சேரிக்கு போன அவர் முடிவைக் கேட்டுக்கொண்டு நேராக மனைவியின் ஊரான சுன்னாகத்திற்கு சென்றார். சென்றவர் சென்றதுதான் அதற்கு அவரை யாரும் பருத்தித்துறை பகுதியில் காணவில்லை.
1983 இனக்கலவரத்துக்கு பின்பு ஊரகளிலை பிரச்சனையள் பெடியள் வெளிநாடுகளை நோக்கி ஒடத்தொடகிற காலத்திலைதான அன்னார் பாங்கொக்கில் தங்கியிருந்து ஏஜன்சி வேலை செய்யிற கதை தெரிய வந்தது. கூடவே ஒரு தமிழ் பெடியன் ஒருவன் ஆளை குத்திப்போட்டான் என்றும் கேள்விபட்டேன். ஒரு பெட்டை ஸ்திரி செய்யிற அயர்ன் ஆல் ஆளை சுட்டும் இருக்கிறாள்.
1998ல் என்று நினைக்கிறேன் தமிழ் கனேடியன் இணையத்தளத்திலும் புதினம் இராஜகோபால் நடாத்திய ஈழகேசரியிலும் இராசசிஙகம் தமிழ் தேசியத்திற்கு ஆதரவான கட்டுரையளை எழுதினார்.
இப்ப கி;;ட்டடியிலை 2002ல் என நினைக்கிறன் ஏசியன் ரிபியுன் இணையத்தளத்தை ஆரம்பித்தபோது அதில் எழுதுமபடி ஆங்கிலத்தில் எழுதும் தமிழ் எழுத்தாளர்களை கேட்டு மின்னஞ்சல்களை அனுப்பினார். பலரும் மறுத்துவிட்டனர். கனடாவில் உள்ள ஒரு தமிழ்தேசியத்திற்கு ஆதரவான எழுத்தாளரும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் முன்னாள் லேக் கவுஸ் பத்திரிகையாளரும் சிறிது காலம் எழுதினம் பின்னர் அவர்களும் ஒதுங்கி விட்டனர்.
இப்போது சிறிலங்காவின் தூதராலயங்களின் பண உதவியில் சிங்கள தேசிவாதிகளினதும் அது ஊடகமாக மாறியுள்ளது. பணத்திற்காக எதை வேண்டும் எழுதிறதும். புணம் கொடுக்காட்டி இல்லாதது பொல்லாததை எழுதிற என ஒரு பிளாக்மெயில் தளமாக ஏசியன் ரிபியுனை சுவீடனில் இருந்து இராசசிங்கம் இயக்குகிறார். ஐரோப்பிய நாடுகளிலை இருந்து இராசசிங்கத்துக்கு உதவிற ஆக்கள் பற்றிய விபரமும் என்னட்டை இருக்கு தேவைப்பட்டால் பிறகு எழுதுகிறேன்.
Recent comments
1 week 1 day ago
1 week 3 days ago
4 weeks 1 day ago
5 weeks 5 days ago
5 weeks 5 days ago
5 weeks 5 days ago
16 weeks 14 hours ago
16 weeks 15 hours ago
16 weeks 2 days ago
16 weeks 6 days ago