இறுதி வணக்க நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரை
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் அவருடன் வீரசாவடைந்த லெப்ரினன்ற் கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், மேஜர் நேதாஜி. லெப்ரினன்ற் ஆட்சிவேல். லெப்ரினன்ற் மாவைக்குமரன் ஆகிய ஆறு மாவீரர்களுக்கும் இறுதி வணக்கம் நிகழ்ச்சி ஒன்று நொவெம்பர் 5ம் திகதி லண்டனின் புறநகர்ப்பகுதியான
ஹரோவில் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்து. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களது உருவப்படத்திற்கு மலர்தூவி தமது இறுதி வணக்கத்தை செலுத்தினர்.
அங்கு நடைபெற்ற இரங்கற் கூட்டத்தில் வெண்புறா நிறுவன பொறுப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி, தமிழ்தேசிக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. வினோ நோகராதலிங்கம், திருமதி. பத்மினி சிதம்பரநாதன், திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஊடகவியலாளர்களான திருமதி; ஆனந்தி சூரியப்பிரகாசம், திரு. ஏ.சி.தாசீசியஸ், திரு. சுதா நடராஜா. தமிழர் புனர்வாழ்வுக்கழக கொழும்புக் கிளையைச் சேரந்த திரு. அர்ஜுனன் எதிர்வீரசிங்கம், தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வி அபிராமி இராஜமனோகரன் உட்பட பலரும் உரை நிகழ்த்தினர். திருமதி. அடேல் பாலசிங்கம் அவர்களும் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு தனது இறுதிவணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
இங்கு திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கத்தை தமிழில் தருகிறோம்.
அரசியல் பிரிவின் தலைவராகவும் சமாதானப் பேச்சுக் குழுவின் தலைவராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும் திகழ்ந்த பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் படுகொலைச் செய்தி தந்த அதிர்ச்சியுடனும் ஆழ்ந்த சோகத்துடனும் இங்கே கூடியிருக்கிறோம்.
அரசியல் பிரிவுத் தலைவராக ஒரு பேச்சுவார்த்தையாளராக ஒரு சிறந்த ராஜதந்திரியாக அவர் ஆற்றிய பணி அனைவரும் அறிந்ததே.
தலைமை அளித்திருந்த பெரும் பொறுப்புகளை தன் தோள்களில் சுமந்திருந்த போதும் சர்வதேச மட்டத்தில் பெரிதும் மதிக்கப்பட்டவராய், புகழுடன் இருந்த போதும் எளிமையானவராய் இலகுவில் அணுகப்படக்கூடியவராய் இருந்த அவரது இயல்பு பொதுவாக இது போன்ற பதவிகளில் இருப்பவர்களி;டம் காண முடியாதது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவன் என்ற வகையில் சு.ப. தமிழ்ச் செல்வனை அடிக்கடி சந்தித்து அரசியல் நிலைமை தொடர்பாக நீணட் பேச்சுவார்த்தைகளை நடாத்துவது வழக்கம். அப்போதெல்லாம் நேர்மையாகவும் திறந்த மனதுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்துவது அவரது இயல்பு. அத்துடன் எமது இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களைக் கூட அவர் மிகவும் அவதானமாகச் செவிமடுப்பார்.
பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டு நின்ற போது அதனை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேசத்தின் குரல் திரு அன்ரன் பாலசிங்கத்துடன் இணைந்து அவர் ஆற்றிய பணி நாம் அனைவரும் அறிந்ததே.
தமிழ் பேசும் மக்களும் சர்வதேசமும் அவரது மறைவை ‘சமாதானப் பறவையின்’ மறைவாகவும் சமாதான முயற்சியின் பாரிய பின்னடைவாகவும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகவும் குறிப்பிடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
நண்பர்களே! இவரது மறைவு குறித்த சர்வதேசத்தின் கருத்தும் சிங்கள தேசத்தின் கருத்தும் எவ்வளவு தூரம் முரண்படுகிறது என்பதைச் சற்றுக் கவனியுங்கள்.
சிறிலங்கா அரசாங்கமும் அவர்களது கூட்டாளிகளும் இவரின் மறைவில் குதூகலித்திருப்பதையும் இதனைப் பெரும் வெற்றியாகக்; கொண்டாடுவதையும் கவனத்தி;ல கொள்ளுங்கள்.
ஏன், சர்வதேச சமூகத்தின் செல்லப் பிள்ளையும் அவர்களால் சமாதானத்தை விரும்பும் சிங்களக் கட்சியாகக் கருதப்படுவதுமான ஐக்கிய தேசியக் கட்சி கூட இந்தப் படுகொலையை வெற்றிகரமான சந்தர்ப்பமாகவும் உளவியல் ரீதியாக உற்சாகமூட்டும் வெற்றியாகவும் கூறியிருக்கிறது.
அண்மையில் சமஸ்டி அமைப்பை நிராகரித்தது போதாதென்று, திட்டமிட்டு நடாத்தப்பட்ட பிரதான பேச்சுவார்த்தையாளரின் படுகொலை குறித்த அவர்களது கருத்து ஏனைய பேரினவாதக் கட்சிகளான JVP , JHU, SLFP போன்ற கட்சிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் எத்தகைய வேறுபாடும் இல்லை என்பதை; தெளிவுபடுத்தியிருக்கிறது.
இந்த நிலையில ஒரு விடயத்தைக் கவனத்தில் எடுக்கும் படி உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். சிங்கள அரசும் சிங்கள மக்களும் வேறு வேறானவர்கள் என்று கருதியதால் தமிழ் மக்கள் பெரும் சோதனைகளைச் சந்தித்துள்ளார்கள். இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என்று நான் கருதுகிறேன்.
திரு. தமிழ்ச்செல்வனின் படுகொலை தொடர்பான சிங்களக் கட்சிகளின் கருத்துக்கள் ஒரே ஒரு விடயத்தையே தெளிவுபடுத்துகிறது.
அவர்கள் அனைவரும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வினைக் காண்பதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்பதே அந்த விடயமாகும்.
இவர்களே பெரும்பான்பான்மைச் சிங்கள மக்களின் பிரதிநிதிகளாகும் அரசின் பாதுகாவலர்களாகவும் இருப்பதால் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் உணர்வலையும் இதுதான் என்றே கருத வேண்டும் எனவே இனியும் சிங்கள அரசின் உணர்வும் சிஙகள மக்களின் உணர்வும் வேறுவேறானவை என்று எண்ணிக் கொண்டிருக்க முடியுமா?
தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றினைத் தருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை என்பதைத் தமிழ் மக்கள் அறிவர். இந்த உண்மையை மீண்டும் மீண்டும் சர்வதேசத்திடம் எடுத்துக் கூறி வந்த போதிலும் துரதிஸ்டவசமாக சர்வதேசமும் அவர்களது கடும்போக்கைக் கண்டு கொள்வதாக இல்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவியேற்று இராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திய போது நாங்கள் சிங்கள அரசின் இராணுவ முனைப்பை சர்வதேச சமூகத்திடம் எடுத்துக் கூறினோம். விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதற்கான அழுத்தமாக இந்த நடவடிக்கைகள் நடத்தப்படுவதாக எமக்குக் கூறப்பட்டது.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான பேச்சவார்த்தையாளரான திரு. சு.ப. தமிழ்ச் செல்வனைத் திட்டமிட்டுப் படுகொலை செய்ததன் மூலம் சிங்கள தேசத்தின் பேச்சுவார்த்தை மீதான அக்கறையின்மையும் இராணுவத்தீர்வின் மீதான முனைப்பும் தெளிவாகத் தெரிகிறது.
இந்த நிலையில் இந்தப் பிரச்சினைக்குச் சமாதான முறையிலேயே தீர்வு காணப்பட் வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருப்பதாகக் கூறிக் கொள்ளும் சர்வதேசத்தின் நடவடிக்கைகளை தமிழ் மக்கள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச சமூகத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையைத் தமிழ் மக்கள் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ்த் தலைவர்களைக் கொல்வதன் மூலமும் தமிழ் மக்கள் மீது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலமும் தமிழ் மக்களை அடிபணியச் செய்து விடலாம் என்ற மாயையில் இருப்பவர்கள் தங்கள் எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துவோம்.
இவர்களது இத்தகைய நடவடிக்கைகள் விடுதலை வீச்சை இரட்டிப்பாக்கும் என்பதை உரத்துச் சொல்லுவோம்.
இதுவே வித்தாகி விட்ட வீரர்களுக்கு நாம் செய்யும்; பெரிய அஞ்சலியாக இருக்கும்
Recent comments
9 weeks 2 days ago
9 weeks 2 days ago
9 weeks 3 days ago
10 weeks 22 hours ago
10 weeks 22 hours ago
10 weeks 5 days ago
11 weeks 1 day ago
11 weeks 5 days ago
12 weeks 5 days ago
12 weeks 5 days ago