வணக்கம்!
தாயகவிடுதலைக்காய் விதையாகிப்போன வீரர்களை நினைந்து எழுச்சி கொள்ளும் வாரத்தில் உங்களைச் சந்திக்கிறோம்.
கடந்த பேப்பரை அச்சுக்கூடத்திலிருந்து எடுத்து வந்தபோதுதான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு மாவீரர்களின் வீரச்சாவு பற்றிய செய்தி எங்களுக்கு கிடைத்தது. அதனால் அதே தினம் (நொவெம்பர் 2) வெளிவந்த ஒருபேப்பரில் இவ்விடயம் தொடர்பாக எதுவும் பிரசுரிக்கவில்லை.
தீபாவளிப் பண்டிகை தமிழர்களுடையது அல்ல என நாம் தொடர்ந்து அடம்பிடிக்கிறதாகவும், புலம்பெயர் நாட்டிலை ஒடி ஒடி உழைக்கிற உங்களை ஒருநாளைக்கு எண்டாலும் கொண்டாடவிடுகிறம் இல்லை என்று குறைப்படுகிற ஆக்களுக்கு ஓன்றை சொல்லோணும். யாருமே தீபாவளி எங்கடை திருநாள்தான் என்று கட்டுரை எழுதி எங்களுக்கு அனுப்பேல்லை. எங்களுக்கு இருக்கிற சிற்றறிவுக்கு தீபாவளி எங்கடை பண்டிகை மாதிரித் தெரியேல்லை. சந்தியிலை பெட்டிக்கடை வைச்சிருக்கிற வடஇந்திய நண்பரும் அடிச்சு சொல்லிறார் உங்கடை இல்லை எண்டு.
நாங்கள் எந்த கருத்தையும் யாருக்கும் மேலையும் திணிக்க விரும்பவில்லை. நீங்கள் மாற்றுக்கருத்தை எழுத மாட்டம் எண்டு நாண்டு கொணடு நிண்டால் நாங்கள் என்ன செய்யிறது.
வார இறுதிநாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அழைப்பு அனுப்புகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி. ஆனால் எல்லாவற்றிலும் எங்களாhல் கலந்து கொள்ள முடிவதில்லை என்பது வருத்தம்தான். நாங்கள் நெடுகிலும் சொல்லிற மாதிரி உங்கள் நிகழ்ச்சி பற்றி விபரங்கங்களுக்கு அனுப்புங்கள் பிரசுரிக்கிறோம்.
எமது இணையத்தளத்தில் (www.orupaper.com) வலைப்பதிவுகள் (புளொக்) செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இலவசமாக அங்கத்தவராகச் சேர்ந்து உங்கள் கருத்துக்களைப் பதியலாம். மற்றவர்களது கருத்துக்கள் பற்றி எதிர்க்கருத்தும் எழுதலாம். ஆகவே அங்கே பதியப்படும் கருத்துக்களுக்கு ஒருபேப்பர் ஆசிரியர் குழு எந்த வகையிலும் பொறுப்பாகாது என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.
விளம்பரதாரரே ஓருபேப்பரின் உயிர்நாடியாக இருக்கிறார்கள் என்பதை நாங்கள் சொல்லித்தான் நீங்கள் தெரியவேண்டியதில்லை. அவர்களது சேவையை நீங்கள் பெற்றுக்கொள்ளும்போது ஒருபேப்பரில் பார்த்த அவர்களது விளம்பரம் பற்றியும் தெரிவியுங்கள். தள்ளுபடி ஏதாவது கிடைக்கலாம். இந்த இடத்தில் விளம்பரத்தை தந்து விட்டு காணமல் போனவர்களைப் பற்றியும் சொல்லோணும். அவர்களை இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம்.
மீண்டும் சந்திப்போம்.
Recent comments
2 weeks 6 days ago
7 weeks 5 days ago
8 weeks 22 hours ago
10 weeks 5 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
22 weeks 5 days ago
22 weeks 5 days ago
22 weeks 6 days ago