வணக்கம்!
ம்..ம் ம் …(தலையைச் சொறியிறம்). மன்னிக்கோணும் இந்த முறையும் பேப்பர் விட லேட்டாப்போயிட்டுது. இங்க லண்டனிலை நடந்த றோயல் மெயில் வேலை நிறுத்தத்தாலை எங்களுக்கு தபாலிலை வரவேண்டியவை வரச்சுணங்கியமையால் எங்களால் உரிய நேரத்திலை ஒரு பேப்பரை வெளியிட முடியவில்லை. இது சுணங்கி பள்ளிக்கூடத்திற்கு போயிட்டு தலைமை வாத்தியாருக்கு சாட்டு சொன்ன மாதிரியில்லை. சொன்னது மெய்தான். இதனால் இம்மாதம் ஒரு பேப்பர் ஒன்றுதான் வெளியிடப்படுகிறது. அடுத்த பேப்பரிலிருந்து வழமைபோல் மாதத்தின் முதலாவது, மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் ஒரு பேப்பர் வெளிவரும்.
ஒரு பேப்பரைக் காணேல்லை, ஆக்களை கூட்டமாய் ஆரும் அள்ளிக் கொண்டு போயிட்டாங்களோ என்று பதைபதைப்புடன் எங்களுக்கு போன் அடித்துச் சுகம் விசாரித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
பரந்த நிலப்பரப்புடைய ஜேர்மனியில் எங்கடையாக்களும் பரந்து வாழ்கிறதாலை எல்லா இடங்களுக்கும் பேப்பர் அனுப்ப முடியாதுள்ளது. உங்களது பகுதிகளில் ஒரு பேப்பரை விநியோகிப்பது பற்றி ஏதாவது ஐடியா வைச்சிருந்தால் எமது அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுங்கள். இதுவிடயத்தில் எமது ஜெர்மனி நாட்டுக்கான தொடர்பாளர் முடிந்ததை செய்வார்.
ஒருபேப்பரில் பிரசுரிக்கப்படும் எல்லாவிடயங்களைப் பற்றியும் உங்களது கருத்துக்களை, விமர்சனங்களை (அவை ஆக்கபூர்வமானதோ இல்லையோ) சுருக்கமாக எழுதி அனுப்பிவையுங்கள். அவை பிரசுரத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். உங்களது விமர்சனங்கள் ஒரு பேப்பரை தவிர்த்து, தனிநபர் அல்லது ஒரு அமைப்பு சார்ந்ததாக இருக்கும் பட்சத்தில் அவற்றை எழுதுபவரின் தொடர்புவிபரங்கள் தரப்படவேண்டும். சுருக்கமாய் சொன்னா மொட்டைக்கடிதங்களை அனுப்பாதேங்கோ!. நீங்கள் அனுப்பிற மொடடைக்கடிதங்களை நேரமிருந்தால் வாசிக்கிறோம், மற்றயபடி நேரை ரீசைக்கிளிங் கூடைக்குள் தான் போடுகிறோம்.
சினிமாப்பகுதியை குறையுங்கோ குறையுங்கோ எண்டு எல்லாரும் கேட்கிறதாலை இனி சினிமா விசயங்களை குறைக்கிறதாய் இருக்கிறம். கோடம்பாக்கத்து சங்கதியளை மட்டும்தான் ஒரு பேப்பரிலை வாசிக்கிறனாங்கள்.. அதை குறைச்சுப்போடாதேங்கோ எண்டு நீங்கள் சொல்ல நினைச்சால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கோ. இன்னொருக்கா இதைப்பற்றி யோசிச்சுப் பார்க்கிறம்.
மட்டைக்களப்பான் அண்ணை நாட்டிலை இல்லை என்பதாலை அலசுவாரம் தொடர் இந்த பேப்பரிலையும் வரேல்லை.
நொவெம்பர் மாதம் மூன்றாவது வெள்ளி வெளிவரவிருக்கிற ஒரு பேப்பர் மண்ணிற்காய் மாண்டவர் நினைவுச் சிறப்பிழாக வரும். உங்கள் ஆக்கங்களை நேரத்தோடை அனுப்பி வையுங்கோ.
மீண்டும் சந்திப்போம்.
Recent comments
12 hours 44 min ago
1 day 20 hours ago
2 days 19 hours ago
3 days 20 hours ago
4 days 20 hours ago
5 days 21 hours ago
1 week 19 hours ago
1 week 2 days ago
1 week 3 days ago
1 week 4 days ago