சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளுடன் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஓப்பந்தத்தை பொருட்படுத்தாது, மாவிலாற்றில் தாக்குதல்களை நடாத்தி நிலஅபகரிப்பை நடாத்தி ஒரு வருடமாகிறது. இக்காலத்தில் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் வெறுமனே மனித உரிமை மீறல்கள் என்று ஒதுக்கிவிட முடியாது. இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகள். சர்வதேச அரசுகளும் மனிதவுரிமை அமைப்புக்களும் இவ்விடயத்தில் போதிய கவனம் செலுத்தாமையினால், இதனை வாய்ப்பாகப் பாவித்து தமிழ்மக்களின் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது. ஆனால் நிலமை சர்வதேச அமைப்புக்களினால் புறக்கணிக்க முடியாத அளவுக்கு மோசமடைந்துள்ளதால் அவை விழித்துக் கொண்டு செயற்பட ஆரம்பித்துள்ளன.
அண்மையில் சர்வதேச மன்னிப்புச்சபை மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மனிதவுரிமை காப்பு அமைப்பு (ர்ரஅயn சுiபாவள றுயவஉh) போன்ற அமைப்புக்கள் இலங்கைத்தீவில் இடம்பெற்றுவரும் மனிதவுரிமை மீறல்களை தமது பிரச்சாரங்கள் மூலம் உலகின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளன. உலக கிண்ணத் துடுப்பாட்ட போட்டிக் காலத்தில் சர்வதேச மன்னிப்புச்சபை மேற்கொண்டுள்ள பிரச்சாரத்தையும், மனிதவுரிமை காப்பமைப்பு பாப்பரசருக்கு விடுத்துள்ள கோரிக்கையையும் இதில் அடக்கலாம். சிறிலங்கா அரசு இவ்வமைப்புக்கள் மீது விசனமடைந்திருந்தாலும், அவற்றை தட்டிக்கழிக்க முடியாத நிலையில் தவிக்கிறது. இவ்விடயம் இலங்கை அரசுக்கு உதவி வழங்கப்படும் வெளிநாட்டு உதவி, உல்லாசப்பயணிகளின் வருகை போன்றவற்றில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதே சிறிலங்காவின் தவிப்புக்கு காரணமாய் அமைகிறது.
இந்நிலையில் உலகத்தலைவர்களின் நல்லெண்ணத்தை பெறுவதற்கான முயற்சியில் சிறிலங்கா அரச தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று வத்திக்கானில் பாப்பரசர் வணக்கத்திற்குரிய பெனடிக்ற் அடிகளாரை மகிந்த ராஜபக்ச சந்திக்க இருப்பதாகத் செய்தி வெளியாகியுள்ளது. இச்சந்திப்பின்போது பாப்பரசர் இலங்கையில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள் பற்றி ராஜபக்சவிடம் தனது அதிருப்தியை தெரிவிக்க வேண்டும், ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை விடயத்தில் அவர் அக்கறை கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எமது மக்களிடம் உள்ளது.
உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களை வழிநடத்துபவர் என்ற வகையிலும், உலக சமாதானத்தில் திருச்சபை கொண்டுள்ள அக்கறையின் பேரிலும் தமிழ் மக்களின் மனிதவுரிமைகள் விடயத்தில் பாப்பரசர் கவனம் எடுப்பார் என்றே நம்புகிறோம்.
Recent comments
2 weeks 6 days ago
7 weeks 5 days ago
8 weeks 21 hours ago
10 weeks 5 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
22 weeks 5 days ago
22 weeks 5 days ago
22 weeks 6 days ago