லா சப்பலில் லைலா

எல்லாருக்கும் வணக்கம் கோயில் காவடி விழையாட்டு விழா எல்லாம் முடிஞ்சு குளிர் தொடங்கபோகுது நானும் ஒரு போர்வை வாங்கவேணும். சரி பாரிஸ் மாணிக்க பிள்ளையார் கோயில் திருவிழா நடந்தஅண்டு யாரோ வாளுகளோடை வந்து இறங்கினவையை போலிசு பிடிச்சு கொண்டு போனதெண்டு போன பேப்பரிலை எழுதினான் எல்லாருக்கும் தெரியும் தானே?

அதுமட்டுமில்லை பிரான்சிலை உள்ள சிறீலங்கா தூதரகத்தி்ரை கொடியையும் யாரோ கிழிச்சு போட்டினமாம் பிறகென்ன இலங்கை அரசாங்கமும் அவையின்ரை புலத்து ஒட்டுண்ணிகளும் சேந்து புலியளின்ரை வேலைதான் அது எண்டு தங்கடை தளங்களிலை ஒரு செய்தியை விட்டு பாத்தவை ஒரு பிரயோசனமும் இல்லை. அதாலை இலங்கையிலை வெளிவாற விழங்காததீப(லங்காதீப) எண்டொரு பேப்பர் பிரெஞ்சு அரசாங்கத்தை திட்டி தீர்த்திருக்கு .

அடுத்ததா நான் நெடுகலும் சோமாசிலை(அரசாங்க உதவிப்பணம்) இருக்கிறணெண்டு எல்லாரும் வயிறெரிஞ்சதாலை இப்ப கட்டாயம் வேலைக்கு போகவேணும் எண்டு சட்டத்தை கொண்டந்திட்டாங்கள் சும்மா இருக்க விடாமல் வேலைகளை தேடியெடுத்து அனுப்புறாங்கள். வேலை வெட்டி இல்லாமல் இவ்வளவு காலமும் இருந்துபழகியாச்சு இனி யாருக்கும் கீழை போய் எப்பிடி வேலை செய்யிறது போசாமல் சொந்தமா ஏதாவது செய்வம் எண்டு நினைச்சு வங்கியிலை ஏதாவது கடன் கேப்பம் எண்டு போனன் நான்.

 தமிழ் எண்டு தெரிஞ்சதுமே வங்கிகாரன் தேவையில்லாத ஆவணமெல்லாம் கேக்கிறான் அவன் கேக்கிறதெல்லாம் இருந்தால் நானேன் கடன் கேக்க போறன். அனால் தமிழ் எண்டதும் ஏன் இவ்வளவு கேள்வி கேக்கிறாங்கள் எண்டது பிறகுதான் விளங்கிச்சுது

இஞ்சை இருந்த எங்கடையாக்கள் கனபேர் பாங்கிலை கடன் எடுத்து போட்டு மிச்சத்துக்கு கடன் மட்டையிலையும் முடிஞ்சதை விறாண்டிக்கொண்டு கனடாக்கு ஓடிட்டினம் அதாலை இப்ப தமிழர் கடன் கேட்டா சில வங்கள் வேண்டா வெறுப்பாதான் பாக்கினம்.

எல்லாம் சரி கடனெடுத்தவன். சீட்டு போட்டவன். வட்டிக்கு எடுத்தவன்.சண்டித்தனம் செய்தவன் போலிஸ் தேடுறவன் எண்டு எல்லாருமே கனடாக்குதான் ஓடினம் அப்ப எனக்கு ஒரு சந்தேகம்   கனடாவிலை  எல்லாரும்  கிரிமினலுகள் தான் இருக்கினமா. அய்யோ ஏதோ வாயிலை வந்ததை வஞ்சமில்லாமல் சொல்லிப்போட்டன் இனி கனடா பக்கம் போகஏலாது.