நீலன், லக்ஸ்மன், கேதீஸ்… புத்திஜீவிகளா? புறம்போக்குகளா?

by:
- எழுபரிதி -

முன்னர் வீரகேசரி பத்திரிகையில் செய்தியாளராய் பணிபுரிந்த டேவிட் ஜெயராஜ் என்பவர் தற்போது ரொறொன்ரோ நகரில் வசிக்கிறார். தொலைபேசி வாயிலாகவும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலமும் கிடைக்கப்பெறும் செய்திகளை வைத்துக்கொண்டு ஏற்கனவே தான் சேர்த்து வைத்திருக்கும் சில தகவல்களையும் சேர்த்து இலங்கைத்தீவில் நடைபெறும் விவகாரங்கள் பற்றி அருகிலிருந்து பார்த்ததுமாதிரி ஆங்கிலத்தில் வாராந்தம் எழுதித் தள்ளுகிறார்.

சரித்திரக்குறிப்புகள் சிலவற்றை வைத்துக்கொண்டு கல்கி கிருஸ்ணமூர்த்தி, சாண்டில்யன் போன்றோர் எப்படி சரித்திர நாவல்கள் படைத்தார்களோ அதேபோன்று இவரது ஆக்கங்களும் விடயம் தெரியாது படிப்பவர்களுக்கு சுவையாக இருக்கும் பெரும்பாலும் ஈழத்தமிழரல்லாத வாசகர்களுக்காக எழுதும் ஜெயராஜ் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி அதிகம் அக்கறை கொள்ளாமல் அடையாளங்காணப்பட்ட சிலதரப்பினரை திருப்பதிப்படுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளார். அவரது கட்டுரை தனிநபர் பற்றியதாக இருக்கும்போது சம்பந்தப்பட்டவரது குலம் கோத்திரம் தகப்பனாரது தொழில் என பிற்போக்குத்தனமான விடயங்களை ஆங்கில Tabloid களின் பாணியில் விபரித்து விடுப்புப்பிடுங்க முயல்பவர்களுக்கு தீனி போடுகிறார்.

இப்பொழுது நான் சிலாகிக்க விரும்புவது ஜெயராஜ் பற்றி அல்ல. ஈபிஆர்எல்எப் அமைப்பின் முக்கியஸ்தராகவிருந்த, கடந்த வருடம் கொழும்பில் கொல்லப்பட்ட திரு கேதீஸ்வரன் லோகநாதன் பற்றி ஜெயராஜ் அண்மையில் எழுதிய ஒரு கட்டுரைபற்றியது. இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக்களை பரவவிடுவது தொடர்பானது. “ஐக்கியஇலங்கைக்குள் தமிழர் உரிமைகளுக்காக போராடியவர்” (Ketheesh: Champion of Tamil Rights in United Lanka) என்ற தலைப்பில் கேதிஸ்வரனை போற்றுவதாக இந்த கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இது போன்ற கட்டுரைகளை முன்பும் ஜெயராஜ்; போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். சாராம்சம் இதுதான் மேலைத்தேச நாடுகளில் உயர்கல்வி கற்ற மேல்தட்டைச் சேர்ந்த தமிழ் கல்வியாளர்கள் விடுதலைப்புலிகளால் வேட்டையாடப்படுவதே தமிழ் மக்களின் இன்றய அவல நிலைக்கு காரணமாக இருக்கிறது.

நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர், போன்றவர்களின் பட்டியலில் கேதீஸ் லோகநாதனும் சேர்க்கப்பட்டிருக்கிறார். முன்னயவர்கள் போன்று பிரசித்தி பெற்ற ஹவார்ட், ஒக்ஸ்போர்ட் பட்டதாரியாக இல்லாதவிடத்தும் சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை படித்த கேதீஸ் விடுதலைப்புலிகளை எதிர்த்தவர் என்பதால் பெரும் கல்வியாளராய் ஜெயராஜ் போன்றவர்களால் தரம் உயர்த்தப்பட்பட்டிருக்கிறார். (கேதீஸ் நெதர்லாந்து ஹேக் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு அபிவிருத்தித்துறை பற்றி கற்றிருக்கிறாராம்.)  ஜெயராஜ் மட்டுமல்ல அமெரிக்காவில் வாழும் அகிலன் கதிர்காமர், வாசுகி நேசையா போன்றோரும் மேற்குலகை திருப்திப்படுத்தும் வகையில் இந்தப்பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.

இனந்தெரியாதவர்களால் கொல்லப்பட்ட நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன கதிர்காமர், கேதீஸ்வரன் மட்டுமல்ல ஐ.நா. சபையின் விசேட பிரதிநிதியாகவிருக்கும் ராதிகா குமாரசாமி, பாக்கியசோதி சரவணமுத்து போன்றவர்களும் ஈழத்தமிழர்கள் மத்தியிலுள்ள விரல் விட்டு எண்ணப்படக்கூடிய கல்வியாளர்களாக இந்த எழுத்தாளர்களால் சித்தரிக்கப்படுகிறார்கள். மற்றய தமிழர்கள் எத்தனை உயர்கல்வித்தகமை உள்ளவர்களாக இருப்பினும் தமிழ் தேசியத்தை பற்றி நிற்பவர்களாக இருப்பின் அவர்கள் தேசியவாத பாசிஸ்டுகளாக (Ethno facists) இவர்களால் வகைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் கல்வித்தகமைகள் தரம் குறைக்கப்படுகின்றன.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களது முனைவர் பட்டம் பற்றி அறிய ரத்னஜீவன் கூல் பட்டபாடு அவர் இன்னொரு முனைவர் பட்டத்தினை பெறுவதற்கு தேவையான அளவு உழைப்பாக இருந்தது. இத்தனைக்கும் தமிழ் மக்களின் நேசிப்பினை பாலசிங்கம் பெற்றது அவரது பட்டங்களால் அல்ல என்பது இவர்களுக்கு தெரியாமலிருக்க நியாயமில்லை.

மேற்குறிப்பிட்ட கல்வியாளர்களிடத்தில் ஒரு பொதுமைப்பாடு உள்ளது. இவர்கள் அனைவரும் கொழும்பை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் இலங்கைதீவின் வடக்கு கிழக்குப்பகுதிகளில் வாழந்த அனுபவமோ அடிமட்டத்தில் உள்ள மக்களுடன் பழகிய அனுபவமோ இவர்களுக்கு கிடையாது. இவர்களில் சிலருக்கு தமிழில் உரையாடவே தெரியாது. இருப்பினும் சிங்கள மேல்வகுப்பினருடன் உறவு வைத்திருந்தவர்கள் என்பதனால் சிறிலங்காவின் ஆங்கில ஊடகங்களும், இந்திய மேல்தட்டினர் குறிப்பாக பிராமணிய கல்வியாளர்கள், ஊடகவியலாளர்களுடன் தொடர்புகளைப் பேணுபவர்கள் என்பதனால் இந்திய ஊடகங்களும், தங்களது நலனை பாதுகாக்ககூடியவர்கள் என்ற வகையில் மேற்கத்தைய ஊடகங்களும் இவர்களை உயர்த்திப் பிடிக்கின்றன.

நீலன் இறந்தபோது பிரித்தானிய கார்டியன் பத்திரிகையில் இரங்கற் கட்டுரை எழுதிய மைல்ஸ் லற்வினப் என்பவர் அண்மைக்காலத்தில் எனது நண்பரானார். நீலன் சாதாரண தமிழ் மக்களுடன் தொடர்புகளை வைத்திருக்காத மக்கள் ஆதரவற்ற ஒருவர் என் நான் அவரைப்பற்றி குறிப்பிட்டபோது மைல்ஸ்க்கு இத்தகவல் நம்ப முடியாததாக இருந்தது. (நீலன் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட Minority rights group  என்ற அரசு-சாரா அமைப்பின் தலைவராக இருந்தபோது மைல்ஸ் அதன் பணிப்பாளராக கடமயாற்றினார்.)

நீலன், ராதிகா ஆகியோர் இயக்குனர்களாக இருந்த கொழும்பில் இயங்கும் International Centre for Ethnic Studies, (ICES)  என்ற அமைப்பிலும் பாக்கியசோதி சரவணமுத்து இயக்குனராய் இருக்கும் Centre for Policy Alternatives(CPA) என்ற அமைப்பிலும் கேதீஸ் பணிபுரிந்திருக்கிறார். இவை வெளிநாட்டு நிதி உதவியில் இயங்கும் நிறுவனங்கள். மேலத்தேச “சனநாயகத்தை” அது தேய்வடைந்துள்ள மூன்றாம் உலக மக்களுக்கு கற்றுத்தர இந்த நிறுவனங்களுக்கு பாரிய நிதி உதவி வழங்கப்படுகினறது. இவற்றினை கொண்டு உலகம் சுற்றி கருத்தரங்களில் கலந்து கொள்ளுதல். அறிக்கைகள் வெளியிடுதல் எனக் சுகமாகக் காலம் கழிக்கும் இவர்கள்தான் தமது மக்களின் நலனில் அக்கறை கொண்ட மிதவாதிகளாக மதிக்கப்படுகிறார்கள். பதிலுக்கு மேற்கத்தைய அரசுகள் இவர்களின் தகவல்களைக் கொண்டே அரசியல் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றன. இவர்களது அறிக்கைகள் நாட்டின் அரசியல் உறுதிநிலை, வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் போன்ற தகவல்களை மேற்குலக கொள்கை வகுப்பாளர்களுக்கு தெரிவிக்கிறதே தவிர இலங்கைத்தீவின் தேசிய இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டுக்கு இதுவரை எந்தத்த தீர்வையும் தரவில்லை.

உண்மையில் இந்த கல்வியாளர்கள் சுயநலத்திற்காக தமது இனத்தின் நலனை ஏன் தமது சுயமரியதையே விற்று வாழ்கிறர்கள். நீலன் தலைசிறந்த அரசியல் சட்ட வல்லுனராக இருந்திருக்கலாம் ஆனால் அவரது ஆற்றல் சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு உதவியதே தவிர தமிழ்மக்களுக்கு உதவவில்லை. சந்திரிகாவின் ஆலோசகராக இருந்த நீலன் அவரது சமாதானத்துக்கான யுத்தத்துக்கு ஆதரவு செலுத்தி வந்தார்.

வெறுமனே கல்வித்தகமைகளும் சான்றிதழ்களும் ஒரு இனத்தின் விடுதலைக்கு உதவப்போவதில்லை என்பதனை ஈழத்தமிழ் மக்கள் உணர்ந்திருந்தமையால் இவர்கள் கொல்லப்பட்டபோதுகூட பெரிதாக அனுதாப அலை வீசவில்லை.

சமுகவியல், வெளிநாட்டு அபிவிருத்தி, அரசியற் சட்டம் போன்ற துறைகளில் கல்வி பயின்றவர்களே மேற்குறிப்பிட்ட கல்வியாளர்கள். ஏனைய துறைகளில் சாதனை படைத்தவர்கள் பொதுவிடயங்களில் ஈடுபடுவதில்லை என்பதால் அவர்கள் பற்றி ஊடகங்களும் அரசியல் வாதிகளும் கண்டு கொள்வதில்லை. இன்று புலம் பெயர்ந்துள்ள நாடுகளில் வளரந்து வரும் நமது இளைய தலைமுறையினர் மேற்கண்டதுறைகளிலும் நாட்டம் கொண்டுள்ளனர்;. இங்கிலாந்தின் ரஸ்ஸல் கல்லூரிகளிலும், அவுஸ்திரேலிய, வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கல்விநிறுவனங்களிலும் கல்வி கற்கும் இந்த இளையவர்கள் முன்னையவர்கனை விஞ்சும் வண்ணம் கல்வியாளர்களாய் திகழ்வார்கள் என்பதனையும் இந்த இளையவர்கள் தங்கள் தன்மானத்தை இழந்து சமரசம் செய்ய தயாராய் இருக்க மாட்டார்கள் என்பதனையும் உறுதியாக நம்பலாம்..

Comments

There are always Eddappans in our society

I believe that our so called intellectual Tamils from Sri Lanka who had political interest have done greater damaged to total Tamils society than many Sinhalese government, I think mostly for their personal interests.

1. It was a mistake not foreseeing the minority issue and bargain for a greater right for minority, in my opinion we should have ask the British to split the country into two as they did for Muslims in India.
2. If splitting the country was not possible at that time then we should have bargained greater autonomy for Tamil with UN protection.

Failed to obtained either is result of current state. The history tells majority of Tamils were influential and well educated under British, what did they have achieve? Why they did not use the influential to get better bargain for Tamils?

Many Tamils studied engineering and medicine at that time because for engineers and doctors there were job security, high salary and greater dowry. I think only a few percentages have followed those fields because of real interest. Even in UK a lot of Tamil want to be medical doctors because of the money, a GP can make £100k, unlikely an engineer or other profession get that salary. I do not see anything wrong with this but agree we should encourage our youngsters to acquire other silks and become specialised in other fields.

Our fault-We didn't give enough importance to non science fields

We all know about DBS Jeyaraj and his ‘enlighten’ views; he is the champion of Jaffna Christian elite. Apparently during his early years he (DBS) lived outside Jaffna and mostly in Kurunagala, his father was a practising lawyer there. As a courtesy we should not split hair on issues like whether Ketheesh was intellectual or not after his death.

This columnist mentioned people specialised in sociology, political science/ Law and international development are given more prominence and Tamils who have excelled in other fields ( I presume medicine , engineering, accountancy and computing) are hidden from the lime light.

This is the fundamental problem of Tamil community at this critical juncture; its obsession with science fields especially in medicine and engineering causing great shortage in the fields of international politics, economics, sociology, strategic affairs and developmental studies, which are important tools in international diplomacy and lobbying. We can bump into a medical doctor in almost every Tamil family; medical doctors cannot rebuild the shattered nation nor can they engage in diplomatic manoeuvres.

As mentioned in this column, the next generation Tamils have shown interest in these fields and increasingly taking up these studies and hope fully this trend will get greater momentum. The Tamil parents should be supportive to their ‘kids’ to choose these fields rather than pushing them to study medicine and engineering by default.
The Tamil nation will be armed with experts from world renowned institutions in coming years and they will represent our nation in international forums.

The ORUPAPER can do more on this by giving more attention in Teen section.