பாலாபிசேகம் செய்வதும் .. பாதுகை காவுவதும்...

by:
பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின்.

எங்கள் தந்தையார் முருகேசு பொன்னையா அவர்களுக்கும் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மதுரை மணி ஐயர், எம்.கே.தியாகராஜா பாகவதர் இவர்களைப்போலவே சற்றே பெண்மைகலந்த பட்டுச்சாரீரம், வெகு இனிமையாகப் பாடுவார். எம்.கே.தியாகராஜபாகவதரின் இசைமேல் பெரும் பித்தேகொண்டிருந்தார் தந்தையார். குறிப்பாக மணி ஐயர், அரியக்குடி , எம்.கே.தியாகராஜா பாகவதர்,பி.யு. சின்னப்பா பாடல்களுள் இசைத்தட்டாக வெளிவந்தவற்றின் அனைத்துப்பிரதிகளையும் வாங்கிப் பெரிய சேகரிப்பாகப் பதுகாத்து வைத்திருந்தார். அவரது பித்தின் உச்சக்கட்டமாகத் தன் ஆதர்சக்கலைஞனை நேரில் கண்டுவரவேண்டுமென்று யாழ்ப்பாணத்திலிருந்து பாகவதரது பரமரசிகர்களாக மேலும் பத்துப்பன்னிரண்டு ஆசாரிமார்களைத் திரட்டிக்கொண்டு 1950ம் ஆண்டு சென்¨னைக்கு வந்திருக்கிறார்.

அது பாகவதர் 'சியாமளா' என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருந்த நேரம். சென்னையில் பாகவதரின் வீட்டில்
பாகவதர் தந்தையாரைப்பாடச் சொல்லிக்கேட்கவும் இவரும் சிலபாடல்களைப் பாடியிருக்கிறார், பாகவதருக்கு தந்தையாரின் பாடல் மிகவும் பிடித்துபோய்விட ' அம்பா....... மனம் கனிந்துனது கடைக்கண்பார் ' என்கிற பாடலை மீண்டும் மீண்டும் பாடச்சொல்லிக் கேட்டாராம். பின் 'ஆசாரிமார்கள் என்னதான் தங்கத்தைவைத்து தொழில்செய்தாலும் அவர்கள் வாழ்க்கைத்தரம் மாத்திரம் கல் உடைத்துப் பிழைப்பவனைவிட மோசமாக இருக்கிறதே......." என்று வருத்தப்பட்டாராம். " அது மாற்றமுடியாத உலகப்பொதுவிதி என்று தந்தையர் கூறவும் " அட சனியனே..... அது உங்கநாட்டிலும் அப்படித்தானா' என்று கேட்டு ஆச்சரியப்பட்டவர் சில நேர மௌனத்த்தின் பின் அங்கே நம்மவர்களும் 'எவராவது பிச்சையும் எடுப்பார்களா' என்று கேட்டாராம். ''தாளாத வறுமையோடு அல்லாடுபவர்கள் இருக்கிறார்கள்தான்...... ஆனால் யாரும் பிச்சை எடுத்துப்பிழைக்கவில்லை ''என்று தந்தையார் சொல்லவும் ''அப்படி யாரும் எடுத்தாங்கன்னா ஒடனே நீங்க சுட்டுத்தள்ளிப்புடணும்'' என்றாராம்.
இப்படியெல்லாம் விது}ஷகமாகவோ தீவிரமாகவோ பேசினாலும் பாகவதர் தான்கொடிகட்டிப்பிறந்த காலத்தில் வறுமையில் உழன்ற அவரது இரத்த உறவுகளிடம்கூடப் பாராமுகமாகவே இருந்தாரென்று அவரைத் தெரிந்தவர்கள் இன்னும் சொல்வார்கள்.

பின்னால் இதே குற்றச்சாட்டு இரண்டு திரையுலகக் கணேசன்களுக்கும் இருந்தது.
1990ல் இலங்கை அகதிகள் அடியுதைபட்டுக்கொண்டு வள்ளங்களில் கொலை பட்டினியாக மண்டபம் துறைக்கு வந்து இறங்கியிருந்தவேளை அந்தப்பக்கம் எதுக்கோ போயிருந்த சிவாஜி கணேசனுக்கும் என்னதோணிச்சோ போய் அவர்களைப்பார்த்திருக்கிறார். கர்ணன் மன்னிக்கவும் கணேசன் வருகிறாரென்றவுடன் ஒருவேளைசாப்பட்டுக்காவது ஏற்பாடுபண்ணுவார் என்கிற நம்பிக்கையில் ஏதிலிகளும் அடித்துப்பிடித்துக்கொண்டு அவர் முன்னேவந்திருக்கிறார்கள். அவர்களது பசியாக இருப்பதுபற்றி யாரோ அவரிடம் எடுத்துக்சொல்லவும் "சாப்பாட்டுக்கெல்லாம் அதிகாரிங்க ஏற்பாடுசெய்வாங்கப்பா" என்றுவிட்டு அங்கிருந்து கடுகிக்கழன்றாராம். இவரின் வள்ளாண்மைபற்றி சென்னையில் முச்சக்கரவண்டியோட்டி ஒருவர் சொன்ன இன்னொரு கதையும் இருக்கிறது.
" நான் அப்போ அவருடைய இரசிகர் மன்றத்தில மெம்பரா இருந்தேனுங்க. அவரு மகனுக்கு கல்யாணம் வந்தப்போ வீட்டில பெரிய பந்தல்போடணும், எல்லாருக்கும் சாராயமும் கோழிக்கறி சாப்பாடும் போடுவாங்கடான்னு நம்ப செக்கிரட்டரிதான் நம்பிள்ளைகள்ல ஒரு பதினைஞ்சுபேர அழைத்துப்போனாருங்க. பந்தவேலையெல்லாம் முடிஞ்சு இரவு பன்னிரண்டு மணியாச்சு. யாரும் சாப்பாடுபற்றிய பேச்சையே எடுக்கிறதைக்காணோம். நின்னு நின்னு பாத்திட்டு அப்புறம் செக்கிரட்டரிதான் கையேந்திபவனில் கிடைச்ச சாப்பாட்டையெல்லாம் நம்ப எல்லாருக்கும் தன் கைக்காசில வாங்கிகொடுத்தாருன்னாப் பாருங்களேன்."

இது கமலஹாசனுக்கும் இருக்கிறது. ஹாசனின் பெரிய தந்தை ஒருவர் இன்னமும் குடிசைவாசியாகவே காலத்தை யோட்டுகிறாராம். குமுதம் பத்து வருஷஞ்களுக்கு முன்னே ஒருமுறை அவரைப்பேட்டி கண்டு எழுதியிருந்தது. அவர் தான்தான் ஹாசனுக்கு சின்ன வயதில் வேஷம் கட்ட, பாட, நடிக்கவெல்லாம் சொல்லிக்கொடுத்ததாக அதில் சொல்லியிருந்தார். அந்தப் பெரியவர் இப்போது உயிருடன் இருக்கிறாரோவுந்தெரியாது.
எம்தந்தையாரும் சென்னைசென்று திரும்பியபிறகு பாகவதர் புராணம் பாடுவதை நிறுத்திவிட்டாராம். என்ன காரணமென்று அம்மா துருவி விசாரித்ததில் 'அட நம்ம ஆட்கள் என்னைப்பார்க்க வினைக்கெட்டு இன்னொரு தேசத்திலிருந்து வந்தார்களே ஒரு டிபனாவது கொடுத்து உபசரிக்கவேணுமே என்கிற விவஸ்த்தைகூட இல்லை அந்த ஆளுக்கு. ஆளுக்கொரு 'பீடா'வைக் கையில்தந்து அனுப்பிவிட்டார்............' என்றாராம் சலிப்புடன்.

இசைஞானி இளையராஜா தியாகப்பிரம்மம் அளவுக்கு துழாn ளுநடியளவயைn டீயஉh ஐயும் குருவாகவும் உயிராகவும் மதிப்பவரென்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். முன்னைய கிழக்கு ஜெர்மனிக்கு வந்து து.ளு.டீயஉh Pயைnளைவஃழுசபயnளைவ ஆகக்கடமையாற்றிய தேவாலயத்துக்கு வந்து அஷ்டாங்கமா விழுந்து சேவித்தெல்லாம் சென்றிருக்கிறார்.
பெர்லினில் பிரமாண்டமான புத்தகக்கடை ஒன்றில் நு}ல்கள் பலவற்றையும் வருடிக்கொண்டிருந்த ஒருநாள் து.ளு.டீயஉh இன் வாழ்க்கைச்சரிதை பற்றிய தடிமனான அழகான நு}லொன்று அவர் வாழ்ந்த வீடுகள், பணிபுரிந்த இடங்கள், பாவித்த இசைக்கருவிகள் எனப்பலவர்ணப்படங்களுடன் தற்செயலாக என்கண்ணில் படவும் என்னைவிடவும் இசைஞானி இதைக்கண்டால் பேருவகைகொள்வாரே என்றொரு ஆசையில் செலவைக் கருத்தில் கொள்ளாது அந்நு}லைப் பார்சல் செய்து கூரியரில் அனுப்பிவைத்தேன். இப்போ வருஷங்கள் இருபது ஆகிவிட்டது. இன்னும் நு}ல் கிடைத்தது என்று பெருமானால் ஒருவார்த்தை எனக்குத் தெரிவிக்கமுடியவில்லையென்றால் பாருங்களேன்!

எம்.ஆர். ராதா சிங்கப்பூரில் ஒரு கூட்டத்தில் கலைஞனுக்கும் இரசிகனுக்கும் எப்படிப்பட்ட உறவு இருந்தால்போதுமென்று கூறிவைப்பார். உங்களுக்கு ஒரு ரசிகனின் நடிப்பு புடிச்சிருக்கா தியேட்டரில அவன் படத்தை பார்த்து ரசிச்சிட்டு உங்கபாட்டுக்கு எழுந்துபோய்க்கிட்டே இருங்க.........அப்பாலே அவன்கிட்டபோறது வணக்கங்கிறது கால்லவுழுறது மச்சாங்கிறது இதெல்லாம் வேணாம். அவனும் சாமானிய பிறவிதான், ஆருவருஷமுன்னே சோத்துக்காக அல்லாடிக்கிட்டிருந்திருப்பான். அவனைப்போயி நீயு வுழுந்து கும்பிடணுமா?
நாட்டில அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான். சினிமாவுல என்னண்ணா கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அதிகமா அள்ளிக்கொடுக்கிறான். ஒலகத்திலேயே என்னிக்குமே அசமத்துவம் ஒழிக்கமுடியாதபடி சபிக்கப்பட்டவொரு கொள்ளைப்பிரதேசம்னா இந்தசினிமா ஒண்ணுதான். எல்லாம் பொய்யும் புரட்டுந்தான்னேன். ஜமீந்தார் பங்களான்னு காட்டுவோம், உள்ளே வந்து எட்டிப்பார்த்தீங்கன்னா பூரா ஒரே காட்போடும் ,பக்கேஸ் பலகையும் ,பெயின்டிங்ஸ¤ந்தான். ஒண்ணும் நிஜம் கிடையாது நண்பர்களே. எல்லாமே போலி உல்டா...!!." டேய்.......யாரங்கே? ன்னு ராஜபார்ட் கர்ஜித்தா அதிர்ச்சியில சுவரு விழுதிடாம பின்னால் பத்துபேர் பிடிச்சுட்டு நிப்பாங்க. நிஜத்தை பார்த்தீங்கன்னா சினிமாவே வெறுத்துப்போயிடும் உங்களூக்கு. ஒரு சினிமாவை உருவாக்கிறதில உழைப்பாளிங்க பங்குதான் ஜாஸ்தி. அவங்க எல்லாம் ஏழைங்க.....ஷெட்டுப்போட்ட ஆசாரியையோ லைட்டுப்பிடிச்ச தொழிலாளியையோ யாரும் என்னைக்குமே கண்டுக்கிறதில்லே. நாள் பூரா வயர் காவித்திரியும் குப்புசாமி என்ன இம்பாலாவிலயா வூட்டுக்குப்போறான்? இப்போ எனக்கு இங்கே வரவேற்பு தந்திருக்கிறீர்களே சந்தோஷம்.....பேஷ்! அதுபோல அந்தக் குப்புசாமிக்கும் கொடுப்பீங்களா, என்னைக்கும் ஜிகினாவில மயங்கிறதே தமிழன் பிழைப்பாய்ப்போய்ச்சு!"
கலைஞர்களும் அவர்தம் கலைகளும் ரசிக்கப்பட வேண்டியவைதாம். அதற்குமேலும் அவர்களுடன் வினைக்கெட்டால் எஞ்சப்போவது வருத்தம்தான். எம். ஆர். ராதவின் பேச்சும் கருத்தும் சதவீதம் உண்மை. கட் அவுட்டுகளுக்குப் பாலாபிஷேகம் செய்வதும், பாதுகை காவுவதும் கமல் ரஜனியின் விஜய் சகாப்தத்துடன் முடியுமோ இன்னும் தொடருமோ.....எவருக்குத்தான் வெளிச்சம்?