
ஈழவர் திரைக் கலை மன்றம் ஒழுங்கு செய்திருந்த கலையரசு கே சொர்ணலிங்கம் விருது வழங்கும் விழாவும் புகலிடக் கலைஞர்களின் குறும்பட இறுவெட்டுகளின் வெளியீடும்
யூலை 29 ஞாயிற்றுக்கிழமை பிறென்ற் நகரமண்டபத்தில் நடைபெற்றது. நாடக ஆசான் திரு ஏ சீ தாசீசியஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் விழா திருமதி அன்னா ஜோசேப், திருமதி மதி பாலச்சந்திரன் ஆகியோர் மங்கல விளக்கேற்ற அக வணக்கத்துடன் ஆரம்பமாகியது
சிறப்பு விருந்தினர்களாகக் கிராமிய கலைகளின் ஆய்வாளரும் பாண்டிச்சேரி பல்கலைக் கழக நுண்கலைப் பேராசிரியருமான திரு கே ஏ குணசேகரனும், ஈழத்துத் தமிழறிஞர் இளவாலை அமுது அவர்களும் கலந்து கொண்டார்கள். பேச்சாளர்களாக வில்லிசைக் கலைஞர் நாச்சிமார்கோயிலடி இராஜன், மூத்த கலைஞர் திரு ஏ ரகுநாதன், விமர்சகரும் கவிஞருமாகிய திரு கி பி அரவிந்தன், டெனிஸ் மேடை நடிகர் திரு ரி யோகராசா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
2006ம் ஆண்டிற்கான கலையரசு விருது கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைப் பீடாதிபதி திரு பால சுகுமார் அவர்களுக்கும், 2007ம் ஆண்டின் விருது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் நாடகங்களை வழங்கிவரும் திருமதி ஆனந்தராணி திரு க பாலேந்திரா தம்பதியினருக்கு வழங்கப்பட்டது.
பாரிஸ் பராவின் “பேரன் பேர்த்தி”, கே எஸ் பாலச்சந்திரனின் “வாழ்வெனும் வட்டம்”, பிரான்ஸ் நல்லு}ர்ஸ்தான் ஜனாவின் “எது மட்டும்” ஆகிய குறும் படங்கள் இவ்விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்டன.
Recent comments
2 weeks 13 hours ago
2 weeks 2 days ago
5 weeks 19 hours ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
17 weeks 2 hours ago
17 weeks 2 hours ago
17 weeks 1 day ago
17 weeks 5 days ago