வெறும் ஆதரவுக்குரல் போதாது!

மிக அண்மைக்காலத்தில் அரசியல் தஞ்சம்கோரி பிரித்தானியாவிற்குள்; வந்தவர்கள் விரைவான விசாரணை (fast track) என்ற புதிய நடைமுறையின் கீழ் விசாரிக்கப்பட்டு அவர்களது தஞ்ச விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில், திருப்பி அனுப்பப்படுவதற்காக தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நாடு திரும்பும் பட்சத்தில் தமது உயிருக்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாத நிலையில் பெரும் அச்சத்தில் வாழும் இவர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையாக கடந்த இரண்டுவாரமாக உண்ணா நிலை போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இப்போராட்டத்திற்கு முழு ஆதரவையும் வழங்க வேண்டியது பிரித்தானியாவிலும் மற்றய நாடுகளிலும் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களின் கடமையாக உள்ளது.

ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் தமது எதிர்காலமே கேள்விக்குறியான நிலையில் உள்ளனர். இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் மீதான மனிதவுரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றபோதும் நாட்டின் நிலையைக் கருத்தில் கொள்ளாது பிரித்தானிய உள்துறை அமைச்சு இவ்விதம் நடந்து கொள்வது வருத்தத்தை தருகின்றது. இருப்பினும் இவ்விடயத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவில்லை என்பதும், அதன் காரணமாகவே இங்கு தஞ்சம் கோரும் தமிழர்கள் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் என்பதும் மறைக்க முடியாத உண்மைகள். தமது இனத்தின் நலனில் அக்கறையில்லாத வகையில் குறுகியகால நலனுக்காக செயற்படும் தமிழர்களை இங்கு சுட்டிநிற்க வேண்டியுள்ளது.

பிரித்தானிய உள்துறை அமைச்சு தமிழ் அகதிகள் விடயத்தில் ஒவ்வொருவரினதும் விண்ணப்பததை தனிப்பட்ட ரீதியில் பரிசீலிக்கின்றது. இலங்கைத்தீவில் வாழும் ஒட்டு மொத்த தமிழினமும் இனவழிப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் உள்ளபோதும் தமிழர் என்ற இன அடையாளத்தின் காரணமாக அவரகள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்பதனை பிரித்தானிய அரசுக்கோ மேற்குலக நாடுகளிற்கோ நிறுவ முடியாத நிலையில் தஞ்சம் கோருவோரும் அவர்களுக்காக வாதாடும் சட்டவல்லுனர்களும் உள்ளனர். தமிழர்களில் சிலர் சிறிலங்கா அரசாங்கத்தை பற்றி நிற்பதும் அதனை அரசியல் ரீதியில் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் இந்த அவலநிலையைத் தோற்றுவித்துள்ளது.

வெறுமனே அடையாளப் போராட்டங்கள் நடாத்துவதுடன் நின்றுவிடாது, ஒட்டு மொத்த தமிழ்ச்சமூகமும் பொறுப்புணர்வுடன் செயற்படுவதன்மூலம் இவ்விடயத்தில் உள்ள மனிதாபிமான விடயத்தையும் அரசியல் நியாயத்தையும் வெளிப்படுத்துவோம்.

Comments

Tamil Should do More

Dear Editor,

There is no argument that Tamil live in UK should do more and could do more to support our society in UK and in Sri Lanka but one think everyone should understand that not every Tamil can provide same level of support or commitment. This is due to practical difficulties. Those practical difficulties are work, family, geographical location, etc. However, I believe that everyone will be able to find at least 2 hours per week to contribute for our community service such as involved in peaceful protests, supporting our youngsters, organising sport events, organising charity events, etc. Two hours per week look small but if you multiply this by 40,000 (approximately numbers of adult in our community in UK), we have 80, 000 hours per week; this is a huge amount of man power but the question is how can we utilise this?

I always think that creating Jewish style of community centres near to our people and then linking them will provide a greater unification and will provide platform for utilising the man power, regular communications, update, etc. Like when a Christian move to an area they register with Church and Tamil move a new area should register with the near by community centre and attend to monthly meeting or receive news letter.

The reason for I request the Jewish style community centre is half of our population generally do not receive the information and not sure how they can help to others and themselves. The community centre not necessarily talk about our straggle and organising protests, they can also involved in local politics, providing local information to those in the area, arranging councillors to visit and listen the issues Tamils face locally, bringing speakers and experts to provide knowledge and experience in various subjects such as immigration, investment child care, Taxation, etc. If the community centre is just for collecting money and talk about politics, I think it will not be successful. It should be law biding and provide great support to local Tamil community and in the meantime create awareness of the need of supporting some of the courses such as protesting against Tamils forcefully send back to Sri Lanka, etc.

We need our elders to give a guide and share their experience to develop our youngsters, and make our youngster very successful and confident people. We have great solicitors, doctors, engineers, accountants, technicians, architects, businessmen, teachers, builders, policemen, ect but not utilising this existing potential. We should thing how we can utilise this potential for creating maximum benefits.

The bottom-line is we must create a strong network within out community which scattered around UK. I thought that Tamil community centre that locally based and linked to other Tamil communities is best way forward.