வணக்கம்!
விடுமுறைக்காலம் நாடு நாடாய் கண்டம் கண்டமாய் சுற்றுவீர்கள். இருப்பினும் நீங்கள் பயணிக்கும் நாடுகளில் உள்ள எங்கட ஆக்களுக்கு ஒரு பேப்பர் பற்றி சொல்லுங்கோ அவர்களின் கருத்துக்களையும் எங்களுக்கு அறியத்தாருங்கோ!
ஒரு பேப்பர் எந்தவொரு தனிநபருடனோ நிறுவனத்துடனோ தனிப்பட்ட கோப-தாபத்துடன் செயற்படவில்லை. இருந்தாலும் சமூக நன்மை கருதி தனிநபர் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள் பற்றி விமர்சனங்கள் எழுகின்றபோது அவற்றினை பிரசுரிகின்றோம். அதனை தொடர்ந்து செய்வோம் .. சம்பந்தப்பட்டவர்களின் விளக்கத்தை பிரசுரிக்கவும் தயாராகவுள்ளோம். விமர்சனங்களை தாங்கும் பக்குவம் உங்களுக்கு இல்லையெண்டால் தயவு செய்து மன்னிச்சு கொள்ளுங்கோ நாங்கள் இப்பிடித்தான் இருக்கப்போறம் நீங்கள்தான் மாறோணும். மற்றப்படி ஊடகதர்மம் அது இது எண்டு எங்களுக்கு ஓண்டும் தெரியாது.
அதுபோல் ஒருபேப்பரைப் பற்றி விமர்சனங்கள் எழுகின்றபோது அதனை நாங்கள் ஆர்வமாகப் படிக்கிறோம். எங்களை மீள்விசாரணைக்கு உடபடுத்திறம். விமர்சிக்கிறவருக்கு நன்றி சொல்லிறம்.
சமயங்கள் ஆன்மீக விவகாரங்கள் கேள்விக்கு உள்ளாகிறபோது .. ஆன்மிகவாதிகள் என்று சொல்லிறவை விளக்கம் தாருங்கோ. அதை விட்டுட்டு கோயிலுக்கை பேப்பரை வைக்க விடமாட்டம் எண்டு முரண்டுபட்டு நிக்காதேயுங்கோ. எது பண்;பாடு எது கலாச்சாரம் எது நடைமுறை எண்டு தெரியாமல் புலத்தில் ஒரு தலைமுறை உருவாகுகிறது. அதற்கு விளக்கம் தராமல் இது இப்பிடித்தான் என்று அடிப்படைவாதம் பேசி அடக்காதீங்கோ.
ஒ கொஞ்சம் சீரியசாய் கதைக்கிறமோ?
தாயகத்திலை வாழ்ந்த காலத்தில் நடந்த சுவையான அனுபவங்களை மட்டைக்களப்பான் அண்ணை, பாலச்சந்திரன் அண்ணை, ஜெயபாலன் அண்ணை, சிறி அண்ணை, சுதந்திரா அக்கா எண்டு கனபேர் எழுதினம். இதுகளை மாதிரி தொடர்ந்து பிரசுரியுங்கோ எண்டு எங்களை காணுற ஆக்கள் எல்லாம் கேட்கினம். நீங்களும் உங்கட அனுபவங்களை சுருக்கமாய் எழுதி அனுப்புங்கோ! பிரசுரிப்பம்.
ஐரோப்பிய நாடுகளிலை இருக்கிற இளம் பெடியள் பெட்டையள் ஒரு பேப்பரை விரும்பி படிக்கிறதாயும் அவையளும் எழுத ஆர்வமாய் இருக்கிறதாயும் அறியிறம். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ளிற வழிமுறையைத்தான் ஒருதரும் சொல்லினமில்லை. ஆகவே நீங்களாகவே உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். மின்னஞ்சல் மூலமாக எங்களை இலகுவில் தொடர்பு கொள்ளலாம்.
Recent comments
2 weeks 6 days ago
7 weeks 5 days ago
8 weeks 1 day ago
10 weeks 5 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
22 weeks 5 days ago
22 weeks 5 days ago
22 weeks 6 days ago