சித்திரைப் புத்தாண்டை ஒட்டிய நிகழ்வாக மே ஐந்தாம் திகதி ஹரோ தமிழ் மூத்தோர் நிலையத்தினர் ஒனறு கூடிக் குதூகலித்தனர்.
ஹரோ எல்ம்பீல்ட் தேவாலய மண்டபத்தில் கச்சிதமாக ஒழுங்கு செய்யப்பட்டிருநந்த இந்த நிகழ்வில் இப்பகுதியில் பரீட்சயமான பல முகங்களை பார்க்க முடிந்தது.
ஹரோ மாநகராhட்சி சபை உறுப்பினர்களான திருமதி. அஞ்சனா பட்டேல், திருமதி. சசிகலா சுரேஸ், திரு. தயா இடைக்காடர் உட்பட பொதுச்சேவையில் பணியாற்றும் பலர் .இந்நிகழ்வில் உற்சாகமாகக் கலந்து கொண்டிருந்தனர். தொழிலதிபர் திரு. பஞ்சலிங்கமும் அவரது துணைவியாரும் முதன்மை விருந்திராக அழைக்கப்பட்டிருந்தனர். முதியோர் நலன் பேணும் நிலையங்களை நடாத்திவரும் இவர் இந்த நிகழ்வின் சீட்டிழுப்பிற்க்கான பரிசுப்பொருட்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
நடிகரும் பொதுப்பணியாளருமான ‘லண்டன் பாபா’ சுரேஸ் கணணியொன்றை நிலையத்திற்கு அன்பளித்தார்.
சில நிகழ்ச்சிகளின் பின்னர் தாய்மண்ணில் உயிரிழந்த உறவுகளுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. ‘அந்தக்காலத்து’ திரையிசைப்பாலகளை துசி-தனு இசைக்குழுவினர் நன்கு தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தனர்.
நுழைவுச்சீட்டின் மூலம் அனுமதிக்கப்பட்ட இந்நிகழ்வின் இறுதியில் சுவையான உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. திருமதி. கமலா சண்முகநாதனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
ஹரோ தமிழ்ச்சங்கத்தின் கீழ் இயங்கும் இந்த மூத்தோலட நிலையத்தின் தலைவர் திரு. குணரத்தினமும் துணைத்தலைவர் திருமதி. குணா வேலுப்பிள்ளையும் இளையோரை விஞ்சும் வண்ணம் உற்சாகத்hதுடன் மண்டம் நிறைந்த இந்நிகழ்வை நெறிப்படுத்திக் கொண்டிருந்தது பாரட்டுக்குரியது.
சமூகச் செய்திப்பிரிவு – ஒரு பேப்பர்
Recent comments
2 weeks 6 days ago
7 weeks 5 days ago
8 weeks 22 hours ago
10 weeks 5 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
22 weeks 5 days ago
22 weeks 5 days ago
22 weeks 6 days ago