லா சப்பலில் லைலா

17 07 07

வணக்கம் எல்லாருக்கும்

ஒரு பேப்பர் நாலாவது ஆண்டிலை அடியெடுத்து வைக்கிறது அதற்கான பாராட்டு   திட்டு வசைபாடல் வாழ்த்து என்று சும்மா கலகலப்பா போய்க்கொண்டிருக்கு. அதற்கு இந்த லைலாவின் வாழ்த்துக்களும் லாசப்பலில் நின்றபடி  சொல்லுறன்.

ஒரு பேப்பர் பாரீஸ் மற்றும் அதை அண்டிய புற நகர் பகுதிகளிற்கு மட்டுமே கிடைப்பதாகவும் மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழுகின்ற மற்றை நகரங்களிற்கு கிடைப்பதிலை என்று பலர் குறை பட்டு கொள்கினம்.

இணைய வசதி உள்ளவை இணையத்தில் படிக்கலாம் மற்றவவை நீங்களா ஏதாவது வழி பண்ணினால் அனுப்பி வைக்கலாம்.

அடுத்ததாக பாரிசிலை வெத்திலை பெட்டிகளின் கூட்டம் அண்மையில் நடை பெற்றது. அது என்ன வெத்திலை பெட்டிகளின் கூட்டமா என்று யேசிக்கிறீங்களா.

முந்தி ஊரிலை மேள கச்சசேரி பாட்டு கச்சேரி சின்ன மேளம் இப்பிடி இந்த நிகழ்சி கலைஞர்களிற்கு அந்த குழுவில் வெத்திலை போடுபவர்களிற்கு வெத்திலை பெட்டி காவி செல்ல கட்டாயம் ஒருத்தர் இருப்பார். அவரையும் நாங்கள் வெத்திலைப்பெட்டி என்றுதான் அழைப்பது வழக்கம்.

அது போல இலங்கையில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் அவையளுக்கு வெத்திலை பெட்டி தூக்க இங்கையும் ஒரு கூட்டம் இருக்கு அவையள் தங்களை தாங்களே கெளரவமாய் மாற்று கருத்தாளர் என்று சொல்லி கொள்ளுகினம்.

அவை யெர்மன் சுக்காட் நகரிலை வாழ்வில் எப்பவுமே யாழ்தேவி கனவுகளில் ஆனந்தமாய் இருக்கும் சங்கரி தாத்தா தலைமையில் ஒரு கூட்டத்தை நடாத்தி விட்டு பிரான்சிலை கலைச்செல்வனின் நினைவு கூட்டத்திற்கும் வந்தவை

அதிலை எங்கடை ரி.பி.சி. ராமராசன் மாமா.  ஆறு வழியிலை படம் காட்டின குகநாதன் மாமா. லச்சுமி மாமி.இப்பிடி சில வெத்திலை பெட்டியள்கலந்து கொண்டவை. ஆனால் நடந்தது என்னமோ கலைச்செல்வனின்ரை நினைவு கூட்டம்.

ஆனால் அந்த கூட்டம் தொடங்கி முடியும் வரை யாருமே கலைச்செலவன் பற்றி ஏன் அந்த பெயரை கூட யாருமே உச்சரிக்கவில்லை. அப்ப என்ன நடந்திருக்குமெண்டு உங்களுக்கு விழங்கும் தானே.

ஒரே புளிச்சு போன புலிக்கு நிகம் வெட்டுற கதையும் அதே நேரம் வழைமை போல ஒரு பேப்பரை விட்டு வைக்கேல்லை. அதிலை பேசின ஒருதர் சொன்னார்

"ஒரு பேப்பரிலை ஒஸ்ரேலியாவிலை இருந்துஆங்கில கட்டுரை எழுதிறவர் யாழிலை இருந்து முஸ்லிம்களை வெளியேற்றினது சரியெண்ட மாதிரி எழுதுறார் அது பிழை ஆனால் அவர் ஆங்கிலத்திலை எழுதிறதாலை பிரான்சிலை உள்ளவைக்கு விழங்கேல்லை".

 அப்பிடியெண்டா பிரான்சிலை உள்ள தமிழர் ஆங்கிலம் விழங்காதவை எண்டு அவர் சொல்ல வந்தது விழங்குது.  ஆனால் அவருக்கே விழங்கேல்லை அந்த கட்டுரை எழுதிறவர் அவுஸ்ரேலியவிலை இருந்து எழுதேல்லையெண்டு.

ஆனால் முதலில் இந்த யாழில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றபட்டதை கண்டித்து கத்துபவர்கள் ஒரு நிமிடமாவது கிழக்கில் முஸ்லிம் காடையர்களால் நூற்று கணக்கில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களை பற்றி எங்காவது எப்போவாவது ஒரு வசனம் . சே கதைக்கவே மாட்டார்கள் ஏனெனில் தூக்கியே பழக்கபட்டவர்களாயிற்றே.