18 மே 2007

வணக்கம்!    இது பொதுவாக பாடசாலை மாணவர்களுக்கும் உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கும் பரீட்சைகள் நடைபெறும் காலம். ஆகவே இம்முறை ஒரு பேப்பரில் இளமைத்துள்ளல்கள் கொஞ்சம் குறைவாக இருக்கும். பரீட்சைகளில் தோற்றும் ஒரு பேப்பர் இளசுகளுக்கு எமது வாழ்ததுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். பரீட்சை முடிந்ததும் கோடைகால விடுமுறைக்காலத்தில் உங்கள் ஆக்கங்களை அதிகமாக எதிர்பார்க்கிறோம்.

ஒரு பேப்பரின் இணையத்தளம் கடந்த சில வாரங்களாக இயங்கவிலலை என்பதை அறிவீர்கள். இது விசயமாக நிறையப்பேர் எங்களை தொடர்பு கொண்டிருந்தார்கள். உங்கள் கரிசனைக்கு நன்றி. இம்மாதம் 21ம் திகதி முதல் இணையப்பதிப்பை வழமையான இணையத்தள முகவரியில் பார்வையிடலாம் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.

ஐரோப்பாவில் குறிப்பாக பரிஸ் - லாசப்பல் பகுதிக்கு அனுப்பப்படும் ஒரு பேப்பர் பிரதிகள் காணாமல் இருக்கின்றன என்றும் விநியோகிக்கப்பட்ட சில மணித்தியாலயங்கிளில் பிரதிகள் முடிந்து விடுகின்றன என்றும் வர்த்தக நிறுவனங்களும் வாசகர்களும் எங்களுக்கு அறியத் தந்துள்ளார்கள். ஐரோப்பிய பதிப்பில் பிரசுரிக்கப்படும் பிரதிகளின் எண்ணிககையை அதிகரிக்கவுள்ளோம் அதுவரை பொறுத்திருங்கள்.

ஒரு பேப்பரில் அரசியல் சார்ந்த கட்டுரைகள் அதிகரித்துள்ளதாகவும் முன்புபோல் எள்ளல் தொனியிலான ஆக்கங்கள் அதிகம் வெளிவருவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது உண்மைதான் எங்களுக்கு வரும் கட்டுரைகளில் பெரும் பகுதி அரசியல் சார்ந்தவவையாகவே உள்ளன. அவை அனைத்தையும் நாங்கள் பிரசுரிப்பதில்லை ஆனால் மற்றய விடயங்கள் தொடர்பாக வரும் கட்டுரைகளில் தரமான அனைத்தையும் பிரசுரிக்கிறோம். மற்றய விசயங்களை பற்றி நீங்கள்தான் எழுதி அனுப்போணும்.


நீங்கள் ஏற்பாடு செய்யும் பொது நிகழ்ச்சிகளை வந்து பார்க்க எங்களுக்கு நல்ல விருப்பம். போதிய கால அவகாசத்தில் எங்களுக்கு அறிவித்தால் நாங்கள் வருவம், வந்து படமும் எடுத்து நிகழ்ச்சி பற்றி எழுதுவோம். ஆனா ஒண்டு இது ஓசிப்பேப்பர் பாருங்கோ அதால ரீக்கற் வாங்கி நிகழ்ச்சி பார்க்கிறது எங்களுக்கு கட்டுப்படியாகாது. ரிக்கற்றுக்கு நிகழ்ச்சி நடத்தினால் நீங்கள்; எங்களுக்கு இரண்டு ரிக்கற்றுகள் அழவேண்டியிருக்கும்.

ஓரு ரேடியோ அமர்க்களமாக நிகழ்ச்சிகளை நடாத்துவது அறிஞ்சிருப்பியள். அனேகமாக எல்லா நிகழ்ச்சியிலையும் நீங்கள் கலந்து கொள்ளலாம் ‘பின்னேரத் தேத்தண்ணி’ கோப்பையை கையிலெடுத்துக் கொண்டு; நீங்கள் விரும்பிய விசயங்களை கதைக்கிறதெண்டால் என்ன .. கொஞ்சம் சூடாக ‘வட்ட மேசை’ யில் கலந்து கொண்டு அரசியல் கதைகிறதெண்டால் என்ன சினிமா, சமையல், சங்கீதம் எண்டு எல்லா விசயமும் தொலைபேசி மூலம் இணைந்து கொண்டு கதைக்கலாம். இது ஒரு ரேடியோக்காரன்கள்ஃகாரிகள் உங்களுக்கு சொல்லச்சொன்ன விசயம்.

மீண்டும் சந்திப்போம்.