தன்னைப்பற்றி மற்றவர்;கள் என்ன கணிப்பிட்டு வைத்திருக்கிறார்கள், என்ன விமர்சனங்கசை; செய்கிறார்கள் என்பதை விமர்சிக்கப்படுபவர்; சொல்வதில் சங்கடங்கள் அதிகமில்லை. நாம் மற்றவர்களைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்வதில்தான் பலருக்கு மன உழைச்சல் வர வாய்ப்பிருக்கிறது. பிரதேசங்களைப் பற்றிய ஆய்விலும்; இது பொருந்தும்.
இந்தத் தொடரை விரும்பி வாசிக்கும் ஒரு நண்பர் கேட்டார் ~என்ன! நீங்கள் ஒரு மாதிரியாக எழுதுகிறீர்கள். உங்கள் பிரதேசத்தைப்பற்றி மற்றவர்கள் சொல்வதையெல்லாம் ஏன் எழுதுகிறீர்கள் வீணாக நீங்களே ஏன் உங்களைத் தாழ்த்திக்கொள்கிறீர்கள|; என்று.
இதில் தாழ்த்துவதற்கு என்ன இருக்கிறது? தாழ்த்தவோ உயர்த்தவோ இத்தொடர் எழுதப்படவில்லை. என்னால் முடிந்தவரை யதார்த்தம் என்ன என்பதைச் சொல்லிக் கொண்டு போகிறேன். உண்மையை விட மிகவும் இலகுவான வழி சொல்வதற்கு வேறில்லை. இங்கே எனக்குத் தெரிந்த, நான் கேட்டுக் கண்டு அனுபவித்தவற்றையே எழுதுகிறேன். அவ்வளவுதான்.
எனக்கு மாந்திரீகத்தில் நம்பிக்கையில்iலை. ஆனால் மட்டக்களப்பார் மாந்திரீகத்தில் கைதேர்ந்தவர்கள் என்ற கருத்து பிற பிரதேசத்தவர்களிடையே நெடுங்காலமாக நிலவி வருகிறது. நான் சிறுவயதில் வெளிப்பிரதேசத்தில் படித்தபோது எனக்கு மந்திரவாதியென்ற பட்டம். பெரும்பாலும் என்பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதைவிட நண்பர்கள் டேய் மந்திரமென்றே கூப்பிடுவார்கள். நானும் அந்தப்பட்டத்தை எனக்குச் சகஜமான பெயராக எடுத்துக்கொண்டேன். மேலும் அந்தக்காலத்து எனது அறியாப்பருவத்து சகபாடிகளை மிரட்டிவைக்கவும் அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.
மட்டக்களப்பான். இவனுக்குக்
கிட்டப்படுத்தால் - பாயோடு
ஒட்ட வைத்திடுவான.;
என்று பாடுவார்கள். நானும் ஆமாம்மென்று தலையாட்டிக் கொள்வேன். யாருமற்ற தனிமையான சூழ்நிலையில் உள்ள+ர் மாணவர்களின் அட்டகாசத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ள நானொரு பெரிய மந்திரவாதியென்ற நினைப்பு எனக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. நான் ஓர் மந்திரவாதியென்று என்னை நினைத்ததற்கு அந்த அறியாப் பருவத்தில் சக மாணவர்கள் தாங்களாகவே என்னை அந்த நிலையில் வைத்துப் பாhத்தது மட்டும் காரணமில்லை. எனக்குச் சில மந்திரங்களும் தெரிந்திருந்தன.
எங்கள+ரில் எங்கள் குடிமரபினரின் குலதெய்வமான வீரபத்திரர் ஆலயமொன்றுண்டு அங்கு பூசாரிகளாயிருந்த பலபேர் – கிட்டத்தட்ட எல்லோருமே மாந்திரீகர்கள். முன்பு அங்கே கோழிப்பலியிடுவார்கள். ஆடுவெட்டி நான் பர்த்ததில்லை. முன்பு அந்தப் பழக்கமும் இருந்தது. பின்னர் அது நிறுத்தப்பட்டு ஆட்டின் ஒருகாதை மட்டும் சிறிதாக அறுத்து விடுவார்கள். கோழி பலியிடுவதையும், ஆட்டின் காதை அறுப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். அப்போது பல மந்திரங்கள் ஓதப்படும். கோயிற் கதவு திறந்திருக்கும். உள்ளே இருக்கும் ஆதிவீரபத்திரர் சிலைக்கு முன்னால் வெளியில் நின்று ஆவேசமாக மந்திரங்களை முணுமுணுத்துத் தலைமைப் பூசாரி உருவேறி ஆடுவார். அவரை திடகாத்திரமான ஒருவர் அவர் கோயிலுக்குள் ஓடிவிடாமலிருக்க பின்னால் கட்டிப்பிடத்துக் கொள்ளுவார். வேப்பிலை கொண்டு அவருக்குப் பூசாரிமார் மந்திரஞ்சொல்லி அடிப்பார்கள். அந்த நேரத்தில் பார்த்திருக்கும் பக்தர்களில் பலருக்கும் சாமி வந்துவிடும்.
சாமி வந்ததா பேய் வந்ததா என்று சொல்ல முடியாது. ஏனென்றால் பேயாடுதல் என்றும் அதற்குச் சொல்வதுண்டு. சிலருக்கு அனுமார் வாலாயம். சிலருக்கு காளி வாலாயம். இவைகளெல்லாம் தெய்வங்கள். ஆனால் சிலருக்கோ காட்டேறி வந்துவிடும். அது பேய். இதையெல்லாம் தீர்மானிப்பது பார்த்திருக்கும் ஆட்கள்தான். உரு வந்தவரின் சமூகத் தராதரத்திற்கேற்ப கொஞ்சம் தரம் கூடியவருக்கு சாமி அல்லது தெய்வமும் தரம் குறைந்தவருக்கு பேயும் வந்ததாக ஞாபகம். உருவேறிய பேயோ சாமியோ சாட்டை கேட்கும். முறுக்கிய கயிற்றினால சாட்டையடியைக் கையை உயர்த்தி வாங்கும்.
குடும்பத்தில் கணவனின் இடைவிடாத அடக்கு முறையினாலும், பிள்ளைகளின் கொடுமைகளாலும், நெஞ்சினுள்ளே வேதனைகளைச் சுமந்துகொண்டு அடங்கியொடுங்கிக் கிடக்கும் ஏழைப் பெண்களின் உணர்ச்சிப் பீறல்கள் சாமியாய்த் தெய்வமாய் அல்லது பேயாய் வெளிப்பட்டு ஏதோவாரு வகை ஆத்மத் திருப்தியையும் மனச்சாந்தியையும் அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய அக்காலத்திய உணர்வு வடிகால்கள் இப்போதெல்லாம் இல்லாது போய்விட்டன. புதிதாக கௌன்சிலிங் முறைகள் வந்துவிட்டன. சைக்கியாடரிக் சிகிச்சைமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. நவீன யோகா, தியான முறைகள் தற்போது பிரபலம். கிடடத்தட்ட யோகா ஒரு பாஷனாகவே மாறிவருகின்றது.
நம் நாட்டில் சுனாமியில் செத்துப்போனதால் சொந்தங்களை இழந்து தவிக்கும் அனேகருக்கு கௌன்சிலிங் இலவசமாகச் செய்கிறார்கள். அதனால் பேயாட வேண்டிய அவசியம் கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்டது. ஆனாலும் செல்ப் ஹிப்நாட்டிசமென்கிற சுய மனோதத்துவச் சிகிச்சைகளாக உருவந்து ஆடுதல் போன்ற வழிமுறைகள் இருக்கும்போது, அந்தச் சிகிச்சையை ஒரு நம்பிக்கையினடிப்படையில் தம்மையறியாமல் தமக்குத்தாமே செய்துகொள்கிற பல பாதிக்கப்பட்ட அப்பாவிகள் தம்முள் நிறைவடைவது மட்டுமல்லாமல், பிறரால் தமக்கு ஏற்படுத்தப்படும் தீங்குகளிலிருந்தும்கூட ஓரளவு தப்பிக்; கொள்கிறார்கள்.
ஓல்ட் இஸ் கோல்ட் என்று சொல்வார்கள். எவ்வளவுதான் மூடத்தனங்களென்று நாம் சிலவிடயங்களைக் கருதினாலும் அதிலே நல்ல அம்சங்களும் இல்லமலில்லையென்பதை வலியுத்துவதற்காகவே நான் மேற் சொன்ன சிலவற்றை எழுதினேன். சரி விடயத்துக்கு வருவோம்.
இப்போது எங்கள+ர் வீரபத்திரர் கோயிலில் பலிகள் நிறுத்தப்பட்டு பழைய மந்திர பூசையை மாற்றி பூசாரிகளுக்குப் பதில் அர்ச்சகர்கள் அதாவது குருக்கள்மார் வேதசுலோகங்களால் பூசை செய்கிறார்களாம். ஆக சட்டியிலிருந்து அடுப்பினுள் விழுந்திருக்கிறோம்.
மட்டக்களப்புப் பிரதேச மக்களின் சமூகப் பின்னணியில் தந்தை வழிக்கு முன்னுரிமை கொடுக்காத தாய் வழிமுறைமை காணப்படுவதையும், அவர்களின் உணவுப் பழக்கங்கள் பேச்சு முறை உட்படப் பல விடயங்களையும் கருத்திற்கொண்டு நோக்குகையில் அவர்களுக்கு மலையாள தேசத்தவாகளுடன் தொடர்கள் இருந்திருப்பது முன்பே கூறப்பட்டது. மலையாள நம்பூதிரிகள் வைக்கும் கன்னத்துக் கொண்டையை எனது தந்தையார் மாமன்மார் அத்தான்மார் உட்படப் பலரும் வைத்திருந்ததை நோக்கும்போது இது மேலும் ஊர்ஜிதமாகின்றது. இதற்கும் மேலாக மட்டக்களப்பில் காணப்படும் மாந்திரீகமும் மலையாள மாந்திரீகத்திலிருந்தே வந்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது.
தொடருவம்
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago