பிரித்தானியாவில் வாழும் தமிழ்ப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வீணை, வயலின், மிருதங்கம், கீபோர்ட், வாய்பாட்டு, பரதநாட்டியம் என்று பல்வேறுபட்ட கலைகளையும் பயிற்;றுவிக்கிறார்கள். சனி, ஞாயிறு தினங்களில் தங்களால் காவமுடியாத பெரிய வாத்தியக் கருவிகளுடன் சிறுவர் சிறுமிகள் தமிழ்ப் பாடசாலைகளுக்கு செல்வதைக் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் காணலாம்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக அதிகளவு தமிழ் கலைநிகழ்ச்சிகள் லண்டனில்தான் நடைபெறுகிறது, எனச்சிலர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். லண்டன் பல்கலைக்கழகத்தின் லோகன் மண்டபமும், ஹேய்ஸ் நகரில் உள்ள பெக் தியேட்டரும்; தமிழ் நிகழ்ச்சிகளுக்காக முன்கூட்டியே பதிவுசெய்து ஒதுக்கப்படுவதாகவும் அறியக்கிடைக்கிறது.
இவையெல்லாம் ஓரு கலாச்சார மறுமலர்ச்சிகான அறிகுறிகளாக ஏற்று, மகிழ்ச்சி கொள்ளவேண்டிய விடயங்கள். புலம்பெயர்ந்த தேசமொன்றில் எமது வருங்காலச் சந்ததி நமது பாரம்பரிய கலைகளை அல்லது நாம் வரித்துக் கொண்டிருக்கும் கலைகளை விருப்பத்துடன் கற்கிறது, அதுவும் எமது தலைமுறையைக் காட்டிலும் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறது என்றால் எமக்கு பெருமிதந்தான்.
ஆனால் நிலமை வேறுவிதமாகவுள்ளது உள்ளுர் கலைஞர்கள் பங்குபற்றும் நிகழ்வென்றால், அந்த கலைஞர் நேற்றுத்தான் அரங்கேற்றம் செய்திருந்தாலும் சரி பல வருட அனுபவமும் ஒன்றுக்கு மேற்பட்ட கலைவிருதுகள் பெற்றவராய் இருந்தாலும் சரி, அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு பெரும்பாலும் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. புதியவர்களை ஊக்குவிப்பதுமில்லை.
இந்த கற்பது எல்லாம் தேர்வுகளில் பங்குபெறுவதுடனும், ஓரிரு மேடையேற்றத்துடனும் முடிந்துவிடுகிறது. அரங்கேற்றம் முடிந்த இளசுக்கு தொடர்ந்து மேடையேற சந்தர்ப்பம் கிடைக்காது போய்விடுகிறது. இதற்காக யாரும் அந்த இளையவர்களையோ அவர்களது பெற்றோரையோ குறைகூற முடியாது. மாறாக ஓட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையுமே பாத்திரவாளியாக கொள்ளவேண்டும். இத்தனை பயிற்சிகளுக்கும் பட்டங்களுக்கும் பி;ன்பும,; சிறப்பு பயிற்சி;களை தமிழ்நாட்டு பிரபலங்களிடம் பெற்றாலும், நம்மவர்கள் தொழில்முறை கலைஞர்களாக முடியாவிட்டாலும், மக்களால் ரசிக்கப்படும் கலைஞர்களாகவாவது மாறமுடியாதுள்ளது.
ஓன்றில் பெரும்பாலானவர்கட்கு இந்த கலைகளில் ஈடுபாடில்லை அல்லது அவர்கள் இவறறை ரசிக்கூடியளவுக்கு தமது கலாரசனையை வளர்த்துக் கொளவதில்லை. இல்லாவிடில், நமது கலைஞர்களின் கலைத்திறன் போதாதுள்ளது. இவற்றை விடுத்து, டப்பாங்கூத்து பாட்டும், ஆபாச நடனங்களும், சீரியல் நாடகமுந்தான் உங்களுக்கு பிடிக்கிறது என்றால் எமது இளைய தலைமுறையின் நேரத்தையும் சக்தியையும வீணடிக்காதீர்கள்.
Recent comments
8 hours 42 min ago
1 day 9 hours ago
2 days 2 hours ago
3 days 10 hours ago
4 days 9 hours ago
5 days 10 hours ago
6 days 10 hours ago
1 week 11 hours ago
1 week 2 days ago
1 week 4 days ago