ஈழத்தமிழர் பற்றிய மற்றுமோர் திரைப்படத்தை கடந்தவார இறுதியில் லண்டனில் பார்க்கக் கிடைத்தது. இந்த திரைப்படத்தின் தலைப்பே தமிழ்போராளிகள் பற்றிய கதையென்பதை சொல்லி நிற்கிறது. இந்தியாவின் பிரதமராகவிருந்த ராஜிவ் காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என கருதப்பட்ட சிவராசன், சுபா உடப்பட்ட ஈழத்தமிழர்களை இந்திய காவல்துறை தேடி வலைவிரித்ததையும் அவர்கள் மரணிப்பதற்கு முந்திய 21 நாட்களில் அவர்களது தலைமறைவு வாழ்க்கையில் நடைபெற்றதாகக் கருதப்படும் சம்பவங்களை ஒரு விவரணப்பாணியில் (Melodrama)
புடமாக்கப்பட்டுள்ளது.
சென்னை திரைப்படக்கல்லூரியில் கல்வி கற்ற ஏ.ஆர். ரமேஸ் என்ற புதிய இயக்குனரின் இயக்கத்தில் கன்னட மொழியில் வெளிவந்த சயனைட் என்ற திரைப்படமே தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு குப்பி என்ற பெயரில் வந்துள்ளது. நடந்த சம்பவங்களை சனரஞ்சகப்படுத்தாமல் அதன் உண்மைத்தன்மையுடன் படத்தை வெகுசன இரசனைக்கு கொண்டு வந்துள்ளமை என்பது தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை அசாதாரணமான விடயம்தான். அந்த வகையில் ரமேசின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது.
இதில் படமாக்கப்பட்டுள்ள சம்பவங்கள் அத்தனையும் உண்மைச்சம்பவங்கள் எனக்கூற முடியாவிட்டாலும் தனது கருத்துக்களுக்கு இடங்கொடுக்காமல் சினிமா மொழியில் மீள் நிகழ்த்தலை நடாத்தியிருக்கிறார் ரமேஸ். அவருக்கு நடிகர்களும் தொழிநுட்பக்கலைஞர்களும் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருகிறார்கள். ஒளிபதிவாளர் இரத்தினவேலு இதில் பெரும் பங்காற்றியிருக்கிறார். குமராவின் கோணங்களும் ஒளிச்சேர்ககையும் சம்பவங்களுக்கு பொருத்தமாகவிருக்கிறது.
கதை சென்னை இந்திரா நகரிலிருந்து பெங்களுர் வரை நீழுகிறது. சிவராசன், சுபா குழுவினரையும் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கிய ரங்கநாத் - மிருதுளா தம்பதியினரையும் அவர்களை தேடி அலையும் காவல்துறையிரையும் சுற்றி நகர்கிறது. பெரும்பாலும் கன்னட நடிகர்களே நடித்திருக்கிறபொழுதிலும் பாத்திரம் உணர்ந்து, மிகைப்படுத்தாமல் நடித்துள்ளார்கள். ரங்கநாத் ஆக வரும் ரங்காயண ரகு, மனைவியாகவரும் தாரா ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள். விரும்பாத வில்லங்கத்தில் மாட்டுப்பட்டு அவதிப்படும் சராசரி குடும்பப் பெணாக தாரா மிகைப்படுத்தாமல் உணர்ச்சி காட்டி நடித்துள்ளார் தாரா. (அவர் தேசிய விருது பெற்ற கன்னட நடிகையாம்). சிவராசனாக மராத்தி நடிகர் ரவி காலே நடித்துள்ளார். அளவுக்கதிகமான முரட்டுத்தனமாக தோன்றுவது இயல்பானதாக இல்லை. சுபாவாக மாளவிகா, காவல்துறை அதிகாரிகளான கார்த்திகேயனாக நாசர். கெம்பைய்யாவாக அவினாஸ்; ஆகியோர் நடித்துள்ளனர்.
ஈழத் தமிழர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக ஈழத்து மொழி நடை உபயோகிக்கப்பட்டிருகிறது. முன்பு வெளிவந்த படங்கள் போலவே இங்கும் உரையாடல் சரியான உச்சரிப்புடன் கையாளப்படவில்லை. கதையாடலுக்கு பொருத்தமாக குடயளா-டியஉம காட்சிகள் சேர்க்கபட்டிருந்தாலும் அவற்றில் போதிய கவனம் செருத்தப்படவில்லை. களத்தில் கால் சிதறிபோயிருக்கும் பெண்போராளியில் துண்டிக்கப்பட்ட கால் காண்பிக்கப்படும்போது அது பார்வையாளர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்தக்காட்சிக்காக படத்தை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானதாக நிர்ணயித்ததாக பிரித்தானிய திரைப்பட சபை தெரிவித்துள்ளது.
தமது நாட்டின் அரசுக்கு அசௌகரியத்தை கொடுக்காமல் படம்பிடிக்க வேண்டிய தேவை இருக்கிறர். இருப்பினும் போராளிகளின் மனவுறிதியையும், இலட்சியப்பற்றையும் கொச்சைபடுத்தி மலினப்படுத்தாமல் அவர்களை மனிதர்களாக மதித்து உள்ளதை உள்ளபடி காட்ட முற்பட்டுள்ளமை, முன்பு தென்னிந்திய திரைப்படங்களில் காணப்படாத சிறப்பம்சம். மணிரத்தினம் போன்றவர்களின் சனரஞ்கப்படங்களிலிருந்தும் விஐயகாந்துக்கும் அர்ஜூன் போன்ற நடிகர்களை வைத்து தேசப்பற்று படங்களைப் போலல்லாது இயக்குனர் தனது கருத்தினைக்கூறவோ. காவல் துறையை மேன்மைப்படுத்தியும், போராளிகளை மனிதநேயமற்றவர்களாக காட்டவோ முனையவில்லை. இறுதிக்காட்சியில் இந்திய அரசபடைகளுக்கு ஐஸ் வைப்பதற்காக சில வசனங்கள் சேர்க்கப்பட்டுள்ளதை;த தவிர்த்தால் மற்றயபடி குறை சொல்ல எதுவுமில்லை.
பாடல்களோ, சண்டைக்காட்சிகளோ சேர்க்கப்ட்ட நகைச்சுவை காட்சிளோ இவ்லாமல் 115 நிமிடங்கள் விறுவிறுப்பாக ஓட்டியிருக்கிறார்கள்.
அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம். சந்தர்ப்பம கிடைத்தால் தவற விடாதீர்கள்.
Recent comments
1 week 1 day ago
1 week 3 days ago
4 weeks 1 day ago
5 weeks 5 days ago
5 weeks 5 days ago
5 weeks 5 days ago
16 weeks 15 hours ago
16 weeks 15 hours ago
16 weeks 2 days ago
16 weeks 6 days ago