மாறிவருகின்ற உலக ஒழுங்கில் விடுதலைப்போராட்டங்களின் நியாயத்தன்மை மறுக்கப்பட்டு வருகிறது. இன்று விடுதலைப்போராளி என்ற சொல்லே தகாத வார்த்தையாக கருதப்படும் நிலை தோன்றியுள்ளது. எது விடுதலை இயக்கம் எது பயங்கரவாத இயக்கம் என்று பிரித்துப்பார்க்கிற நிலையில் ஆதிக்க வல்லரசுகள் இல்லை. இந்நிலை தொடருகின்றபோது ஒடுக்கப்படட மக்களே அவலத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். இங்கு ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் விதிவிலக்காக அமைய முடியாது. அதனையிட்டு மேற்குலக அரசுகள் சந்தேகங் கொள்வதும், எச்சரிக்கை அடைவதும் தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.
சனநாயக விழுமியங்களை மதிக்கும் மேற்குநாடுகளில் அந்தந்த நாடுகளில் சட்ட திட்டங்களுக்க உட்பட்டு அரசியல் ரீதியாக செயற்படுவதில் தடையெதுவும் விதிக்கப்படவில்லை. இருப்பினும் அரசியல் போராட்டங்களினை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி அதனை முன்னெடுப்பவர்கள் விசாரணைக்கு உள்ளாவது, தடுத்து வைக்கப்படுவது தொடர்ந்து வருகின்றது. இதுவிடயத்தில் சிறிலங்கா அரசாலும் அதன் ஏவல் மனிதர்களாலும் மேற்கொள்ளபபட்டுவரும் விசமத்தனமான பிரச்சாரங்கள் முக்கிய பங்கெடுத்து வருகின்றன.
சனநாயக வழியில் ஆரம்பித்த தமிழ் மக்களின் போராட்டம் எவ்விதம் அரசபயங்கரவாதத்தை பாவித்து மழுங்கடிக்கப்பட்டதோ, அதுபோன்று தீவுக்கு வெளியில் வாழும் ஈழத்தமிழ் மக்களின் குரலையும் பயங்கரவாத முத்திரை குத்தி ஒடுக்கிவிடலாம் என முனைப்புடன் இவர்கள் செயற்பட்டுவருகின்றனர். இந்த நாசகாரத்திட்டத்துக்கு சில சோரம் போன தமிழர்களும் துணைபோவது வேதனைக்குரியது. ஆனால் இதுபோன்ற புறநடைகள் எல்லா இனத்திலும் இருப்பார்கள் என்பதால் அது பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளவேண்டிய அவசியமில்லை எனினும் இதுவிடயத்தில் விழிப்புடன் செயற்படுவது அவசியமானது.
இவ்வாறான சாதகமற்ற நிலமை உள்ளபோதும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கலவரமடையாமல் அரசியல் ரீதியான செயற்பாடுகளையும் தாயக மக்களுக்கு உதவும் பணிகளையும் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பை சுமந்தபடி உள்ளோம். தமிழீழ விடுதலைப் போராட்டம் பெருவளர்ச்சி கொண்டு;ள்ள நிலையில், இனனமும் உணர்சிகளை கிளறி கொடி தூக்கி கோசம்போட்டு விட்டு கலைந்து போகும் நிலையிலேயே நாங்கள் உள்ளோம். மாறாக சிறிலங்கா அரசை பொருளாதாரரீதியில் பலமடையச் செய்யும் நடவடிக்கைகளை தொடர்ந்து செய்துவருகிறோம்.
மாறும் சூழ்நிலைக்கேற்ப அறிவுபூர்வமாக சிந்தித்து எமது அரசியல் செயற்பாடுகளுக்கு புதுவடிவம் கொடுப்போம். செயற்படுவோம்.
Comments
Well done Oru Paper
I am very pleased to read your editorial. Entire Tamil media is in a state of denial regarding recent arrests in the diaspora countries and they are maintaining a self censorship. First of all We must change this kind of attitudes if we really want to achieve a nationhood. Please find this blog with a similar opinion.
http://poonkothai.blogspot.com/