4 மே 2007

வணக்கம்!  உழைப்பாளர் தினம் தமிழீழ வானோடிகள் மாதிரி சத்தம் சஞ்சடியில்லாம் வந்து போய்விட்டது. வந்துபோன பின் முழங்குகிற சிறிலங்கா பீரங்கிகள் போலில்லாமல் செய்தொழிலை தெய்வமாகப் போற்றும் உங்களுக்கு எங்கள் தோழமையான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது ஒரு பேப்பரின் 70வது இதழ். இவ்விடத்தில் ஒரு பேப்பர் பற்றி மீள்பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. கிட்டடியில் தனது கருத்தை எமக்கு வெளிப்படையாகக்கூறிய இளம் பெண் வாசகி ஓராள் சொன்ன கருத்துக்களை உங்களோடை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறோம். “முந்தி நல்லா வந்த உங்கட பேப்பர் இப்போ ஏனோ தானோ எண்டு வருகிறது.  நீங்கள் Pசழழக சுநயனiபெ  செய்யமாட்டியளோ. நிரம்ப எழுத்துப்பிழை இருக்குது” வுநநn Pயிநச என்ன வநநளெ வாசிக்கிற மாதிரியா இருக்கு” என அடுக்கி கொண்டே போனாள். இது வசவு மாதிரி இருந்தாலும் இந்த பிள்ளை சொல்லிறதும் உண்மையாகத்தான் தெரிகிறது. நீங்கள் வந்து உதவி செய்யுங்கோவன் என்று நாங்கள் சொல்ல ஆளை விடுங்கோ என்று அகன்று விட்டாள். இருப்பினும் ஆக்கபூர்வமான விமர்சனத்தை முன் வைத்த அவாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு விசயத்துக்கு வருகிறோம்.

ஒரு பேப்பரின் தயாரிப்பில் பலர் கண்டங்கடந்து கரங்கொடுக்கிறார்கள். இது ஒரு குழு முயற்சி.; இவர்கள் எல்லாருமே எல்லாக்காலமும் பேப்பருக்கும் உதவ முடிவதில்லை;. குறிப்பாக பரீட்சை காலங்களில் இளையவர்கள் ஒரு பேப்பர் பக்கம் தலை காட்டுவதில்லை. வேலைபழு கூடினால் சிலர் ஒதுங்கி விடுவார்கள.; இருப்பினும் ஆளணி குறைந்தாலும் நேரத்துக்கு பேப்பரை பிரசுரிக்க வேண்டும் என்ற அவசரத்தில் இத்தகைய தவறுகள் ஏற்படுகின்றன. மேலும் பல இளையவர்கள் உதவ முன்வந்தால் கூடிய விரைவில் இத்தவறுகளை திருத்திக் கொள்கிறோம். தொடரந்தும் உங்கட பங்குக்கு தயவு செய்து தவறுகளை சுட்டிக் காட்டுங்கோ!

எங்கட இளையதலைமுறைகளின் பார்வைக்கு ஒரு பேப்பரை எடுத்து வந்ததை நாங்கள் பெருமையாகவே கருதுகிறாம் அதற்கு உதவிய இளையவர்களுக்கு கோடி நன்றி. இதை விளங்காமல் மேல் தட்டுக்காரருக்காக ஆங்கிலத்திலும் கட்டுரைகளை பிரசுரிக்கிறோம் எண்டு சொல்லிற ஒண்டு இரண்டை என்னவெண்டு சொல்லிறது. பொருட்படுத்தாது விட்டுவிடுவோம். மற்றய மொழிகளிலும் குறிப்பாக பிரஞ்சு டொயிற்ச் மொழிகளிலும் எமது பி;ள்ளைகளின் ஆக்கங்களை பிரசுரிக்க விரும்புகிறோம்.

இன்னமும் சிலருக்கு ஒருபேப்பரின் நதிமூலத்தை அறிஞ்சு கொள்ள முடியேல்லை. ஒரு சிலர் இது இன்னார் அடிக்கிற பேப்பர் எண்ட மற்றாக்கள் இல்லை அவையில்லை இவை அடிக்கினமெண்டு சொல்லி ஆக்களை குழப்பியினம்.  இதிலை எதிர் எதிராய் இருக்கிற உளவு அமைப்புகளின் பெயரும் அடிபடுது. நாங்கள் வழமை போல எல்லாதையும் வேடிக்கை பார்க்கிறோம்.

ஒரு ரெலிவிசன் எப்ப வரும் ஆய்க்கினை செய்யிறவைக்கு, அது வராது உங்கட அலுவலைப் பாருங்கோ எண்டு சொல்லத் தோன்றினாலும், பொய் சொல்ல மனம் வருதில்லை. எதும் எப்பவும் நடக்கலாம்.

மீண்டும் சந்திப்போம்.