வணக்கம்!
கடந்த சில பேப்பர்கள், ஒழுங்காக எமது சந்தாரர்களைச் சேரவில்லை என அவர்கள் எங்கடை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள். தவறுக்கு வருந்துகிறோம. இது விசயமாய் ஆவன செய்து அவற்றை உங்களுக்குச் சேர்ப்பிக்க எங்களால் முடிஞ்சதை செய்கிறோம்.
கனடாவிலுள்ள எங்கடை வாசகர்களில் சிலர் எங்களை கிட்டடியிலை தொலைபேசியலை கூப்பிட்டு, தம்பிமார், தங்கச்சிமார் தயவு செய்து ஒரு பேப்பரை நிப்பாட்டிப் போடாதேங்கோ. ஒழுங்கா நேரத்திற்கு வெளிக்கொண்டு வாருங்கோ என எங்களிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். நாங்களும் ஓம்
எண்டு சொன்னம். இதிலை பாருங்கோ, ஒரு விசயம் இருக்கு, நீங்களும் எங்களோடை சேர்நது ஒத்துழைச்சாத்தான் எங்களாலையும் பேப்பரை நேரத்திற்கு கொண்டு வர முடியும். உங்களது கருத்துகளை எங்களுக்கு நீங்கள் உடனை உடனை தெரிவிக்கோணும், உங்கடை ஆக்கங்களை நேர காலத்திற்கு அனுப்போணும் இப்பிடி உங்கடை பக்கமும் தொய்வில்லாமல் விசயம் நடந்தால்தானே இதுகள் சாத்தியப்படும்.
ஒரு பேப்பரிலை விளம்பரங்களைப் பார்த்து விளம்பரதாரர்களை நீங்கள் தொடர்பு கொண்டால், அவையளுக்குச் சொல்லுங்கோ எங்கை பாத்தனியள் எண்டு. சிலநேரம் அவையள் தாங்களாய் கேட்க மாட்டினம் ஆனபடியால் நீங்களா சொல்லுங்கோ. ஆனா ஒண்டு இந்த விளம்பரங்களிலை இருக்கிற விபரங்கள் சரியா பிழையா எண்டு நாங்கள் சரி பார்;கிறேல்லை. பொதுவாய் பிழை வராது எண்டுதான் நம்புகிறம்.
பூராயம் பகுதிக்கு என தொலைபேசியிலை தகவல் சொல்லிறவை உங்கடை பெயரையும் சொல்லுங்கோ. அது உங்னடை செல்லப்பெயர் என்றாலும் பரவாயில்லை. இல்லாவிட்டால் ஆர் இதைச் சொன்னது என்று நாங்கள் சொல்லிறது?
நீங்கள் எந்தபக்கம் சாய்ந்து நிக்கிறியள் என்று ஆக்கள் கேட்கிறதும், நாங்கள் ஒரு பக்கமும் சாயாமல் நேராய் நிக்கிறம் எண்டு நாங்கள் உண்மையைச் சொல்ல அதையும் கேட்காமல் அடம் பிடிக்கிறதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுக்கிளளை அவை உங்களுக்கு காசு தருகினமாம் இவை தருகினமாம் எண்டு சிலர் எங்களுக்கு கடுப்பேத்திக் கொண்டிருக்கிறார்கள். சில விசயங்களை நாங்கள் சொல்லித்தான் ஆகவேணும். நாங்கள் எப்போதும் போலவே ஈழத்தமிழ் மக்களின் பக்கம்தான் இருக்கிறோம். அவர்களுடைய நலன்கள் தொடர்பான விடயங்களையே பிரசுரிக்கிறோம். அவற்றயே உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம். வேறை எந்த கோட்பாடும் எங்களிடடை இல்லை.
சமூக நிகழ்வுகள் விசயமாக முன்னரைப்போல் நாங்கள் அக்கறையாகச் செயற்படுவதில்லை என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். உண்மைதான், சமூக விடயங்களை அதிகம் பிரசுரிக்க நாங்கள் விரும்பினாலும், ஈழத்து அரசியல் விடயங்களிலை எமது வாசகர்கள் அதிகமாக அக்கறை காட்டுறதாலை, அவை பின் தள்ளப்பட்டு விடுகின்றன. இனி வாற பேப்பர்களிலை பார்ப்போம்.
எமது பிரித்தானியப் பதிப்பின் வடிவமைப்பிலும், அச்சடிக்கும் காகித்திலும் சிறிது மாற்றங்கள் செய்துள்ளோம். கனேடியப் பதிப்பு வழமைபோல இருக்கும்.
மீண்டு சந்திப்போம்!
Recent comments
3 weeks 4 days ago
3 weeks 4 days ago
3 weeks 4 days ago
3 weeks 4 days ago
3 weeks 4 days ago
14 weeks 2 days ago
14 weeks 3 days ago
1 year 6 days ago
1 year 1 week ago
1 year 6 weeks ago