vimal's blog

பெரியார் சொல்லும் தமிழர் திருமணம்

தந்தை பெரியார் அவர்கள் “சித்திர புத்திரன்” என்கிற புனைப் பெயரில்
14-03-1950 விடுதலை நாளிதழில் “திருமண விழா: வினா விடை” என்ற தலைப்பில்
சுயமரியாதைத் திருமணம் குறித்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அந்த
வினா-விடை உங்கள் பார்வைக்காக:

சுயமரியாதைத் திருமணம் என்பது எது?

நமக்கு மேலான மேல் ஜாதிக்காரன் என்பவனை புரோகிதனாக வைத்து நடத்தாத
திருமணம் சுய மரியாதைத் திருமணமாகும்.

பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன?

நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம் என்று
அறிந்து கொள்ளாமலும், அறிய முடியாமலும் இருக்கும்படியானதுமான
காரியங்களைச் (சடங்குகள்) செய்யாமல் நடத்தும் திருமணம் பகுத்தறிவு
திருமணம் ஆகும்.

தமிழர் திருமணம் என்றால் என்ன?

புருஷனுக்கு மனைவி அடிமை (தாழ்ந்தவள்) என்றும், புருஷனுக்கு உள்ள





 











Syndicate content